உத்திரம் நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்டங்கள் ஏற்பட செய்ய வேண்டிய பரிகாரங்கள்

suriya

உலகிற்கு பகல் வேளையில் சூரிய ஒளி என்பது அனைத்து உயிர்களும் சீராக வாழ்வதற்கு உதவியாக இருக்கிறது. அதைப்போன்றே அந்த சூரிய ஒளியால் நமக்கு ஏற்படும் உடல் வெப்பமும் பல வகைகளில் உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் ஒரு சிறந்த இயற்கை வழி வைத்தியமாக இருக்கிறது. கோடைக்காலங்களில் அதிக வெப்பத்தை தருகின்ற நட்சத்திர கிரகமாக சூரியன் இருக்கிறது. அந்த சூரியனுக்குரிய நட்சத்திரங்களில் ஒன்று தான் உத்திர நட்சத்திரமாகும். அத்தகைய சூரியனின் அருளாற்றல் நிறைந்த உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்வில் யோகங்களும், அதிர்ஷ்டங்களும் மிகுதியாக பிற செய்யவேண்டிய பரிகாரங்கள் என்ன என்பதை இங்கே கொள்ளலாம்.

surya bhagavan

27 நட்சத்திரங்களின் வரிசையில் பன்னிரண்டாவது நட்சத்திரமாக வருவது உத்திரம் நட்சத்திரம் ஆகும். இந்த நட்சத்திரத்தின் அதிபதியாக சூரிய பகவான் இருக்கிறார். இந்த நட்சத்திரத்தின் அதி தேவதையாக ஸ்ரீ லட்சுமி தேவி இருக்கிறார். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிறந்த உடல்பலம் பெற்றவர்களாகவும் சுறுசுறுப்பு குணம் கொண்டவராகவும் இருப்பார்கள். எனவே கடுமையாக உழைத்து வாழ்வில் அனைத்திலும் வெற்றியை சுவைப்பார்கள். உத்திரம் நட்சத்திரக்காரர்கள் வாழ்வில் அதிர்ஷ்டங்களையும் மிகுதியான செல்வ சிறப்புகளையும் பெற கீழ்கண்ட பரிகாரங்களை செய்ய வேண்டும்.

உத்திரம் நட்சத்திரக்காரர்கள் தங்கள் வாழ்வில் எப்போதும் சிறப்பான பலன்களை பெறுவதற்கு ஒரு வளர்பிறை ஞாயிற்றுக்கிழமை தினம் தஞ்சை மாவட்டத்தில் இருக்கும் சூரிய பகவானுக்குரிய சூரியனார் கோயிலுக்கு சென்று சூரிய பகவானுக்கு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்து, ஆரஞ்சு நிற வஸ்திரம் சாற்றி வழிபாடு செய்ய வேண்டும். உங்கள் வாழ்வில் தற்போது இருக்கின்ற பொருளாதார நிலை மேன்மேலும் பெருகுவதற்கு வெள்ளிக்கிழமைகள் தோறும் லட்சுமி தேவி கோவிலுக்கு சென்று லட்சுமிக்கு துளசி மாலை மற்றும் தாமரைப்பூ சமர்ப்பித்து வழிபடுவதால் செல்வ வளம் அதிகரிக்கும். ஞாயிற்றுக்கிழமை வருகின்ற பிரதோஷ தினத்தன்று சிவன் கோவிலுக்கு சென்று சிவபெருமானுக்கும், பார்வதிக்கும் பால் மற்றும் தேன் அபிஷேகம் செய்து வழிபடுவதாலும் உங்கள் வாழ்வில் ஏற்படுகின்ற துரதிர்ஷ்டங்கள் நீங்கி யோகங்களும், அதிர்ஷ்டங்களும் அதிகம் உண்டாகும்.

men greeting sun

தினந்தோறும் காலையில் எழுந்து குளித்து முடித்ததும் சூரிய பகவானை நோக்கி கரங்களை கூப்பி “ஓம் சூரிய தேவாய நமஹ” என்ற மந்திரத்தை 10 முறை துதித்து உங்கள் அன்றாட செயல்களில் ஈடுபடுவது ஏற்றமிகு பலன்களை தரும். வயதில் மூத்தவர்களை மதித்து அவர்களின் பாதங்களை தொட்டு ஆசீர்வாதம் பெறுவது சூரிய பகவானின் அருள் உங்களுக்கு முழுவதும் கிடைக்க செய்யும். உத்திர நட்சத்திரக்காரர்களுக்குரிய தல விருட்சமாக இலந்தை பழ மரம் இருக்கிறது. இலந்தை பழ மரம் தலவிருட்சமாக இருக்கும் கோயில்களுக்கு ஞாயிற்றுக்கிழமை தினத்தில் சென்று இலந்தை மரத்தையும், அங்கிருக்கும் இறைவனையும் வழிபாடு செய்வதாலும் வாழ்வில் மிக அதிகமான யோகங்களை தரக்கூடிய ஒரு அற்புத பரிகாரமாக இருக்கிறது.

இதையும் படிக்கலாமே:
அத்தி வரதர் டிக்கெட் குறித்த அறிவிப்பு

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Uthiram nakshatra dosha pariharam in Tamil. It is also called Uthiram natchathiram in Tamil or Natchathira pariharangal in Tamil or Surya bhagavan natchathirangal in Tamil or Surya natchathira pariharangal in Tamil.