நாளை அத்தி வரதர் தரிசனம் செய்தால் மிகச் சிறப்பு. ஏன் தெரியுமா?

athi-varadhar-perumal

108 திவ்யதேசங்களில் முதன்மையானதான ஸ்ரீரங்கம் ரங்கநாதப் பெருமாள் போல சயனக் கோலத்தில் ஒரு மாத காலம் தரிசனம் தந்த காஞ்சிபுரம் அத்திவரதர், கடந்த இரண்டு வாரங்களாக திருப்பதி ஏழுமலையானை போன்று நின்ற நிலையில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு தரிசனம் தந்த வண்ணம் இருக்கிறார். அனைவருக்குமே கிடைக்கின்ற ஒரு அரிய வாய்ப்பாக 40 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் அத்தி வரதர் தரிசனம் கருதப்படுவதால் வயது, ஆண் – பெண் பேதங்களின்றி தினந்தோறும் லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் நோக்கி சென்ற வண்ணம் உள்ளனர். மிக சிறப்பான இந்த அத்தி வரதர் வைபவம் குறித்த ஒரு முக்கிய தகவலை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Athi-Varadar-Kanchi

காஞ்சிபுரம் அத்தி வரதராஜ பெருமாள் கோயில் அத்தி வரதர் வைபவம் ஏறத்தாழ அதன் இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது. இதனால் இத்தனை காலம் அத்தி வரதராஜரை தரிசிக்காமல் இருந்த பக்தர்களும் காஞ்சிபுரத்திற்கு பெருமளவில் திரண்டு வந்து, பொறுமை காத்து அத்தி வரதர் தரிசனம் செய்து செல்கின்றனர். மற்ற நாட்களில் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் நியமப்படி தினந்தோறும் பூஜைகள் செய்யப்பட்டு வந்தன. அத்திவரதர் வைபவத்தின் போது கோயிலில் பிற தெய்வங்களுக்கும் ஆகம முறைப்படி பூஜைகள் செய்யப்பட்டாலும், அத்திவரதர் தரிசனத்திற்கு வந்திருந்த பக்தர்கள் கோயிலின் பிற பகுதிகளுக்கு அனுமதிக்கப்படாமல் அத்தி வரதர் தரிசனம் காண்பதற்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் நடைபெறும் விசேஷங்களில் மிக சிறப்பானது மகாவிஷ்ணுவின் வாகனமாகவும், அவரின் அணுக்க தொண்டரும், பெரிய திருவடி என பெயர் பெற்றவருமான கருடாழ்வார் செய்கின்ற கருட சேவை விழாவாகும். ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தில் வரதராஜ பெருமாள் கோயிலில் கருடசேவை வைபவம் நடை பெறுவது வழக்கம் அந்த வகையில் நாளை ஆடி மாத பௌர்ணமி தினம் என்பதால் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் கருட சேவை வைபவம் நடைபெற உள்ளது. ஆடி பௌர்ணமி தினத்தில் கருட சேவை காலத்தில் பெருமாளை வழிபடுபவர்களுக்கு வாழ்வில் துன்பங்கள் அனைத்தும் நீங்கி இன்பங்களும், வளமையும் பெருகும் என்பது ஐதீகம்.

Garudan

இது குறித்து செய்தியாளர்களுக்கு விளக்கமளித்த காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பௌர்ணமி தினத்தில் வரதராஜ பெருமாள் கோவிலில் கருட சேவை நடைபெறும் சமயத்தில் அத்தி வரதர் தரிசனம் சில மணிநேரம் நிறுத்தப்படும் என்றும், கருட சேவை வைபவம் முடிந்ததும் மீண்டும் பக்தர்கள் அத்தி வரதர் தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறினார். இன்னும் இரண்டு நாட்களே அத்தி வரதர் தரிசன வைபவம் நடைபெறும் என்பதால் பக்தர்கள் அனைவரும் அத்தி வரதர் தரிசனம் செய்வதற்கு ஏற்ற வகையில் தரிசன நேரத்தை அதிகரிப்பது குறித்து கோவில் நிர்வாகத்துடன் ஆலோசித்து வருவதாகவும் கூறினார்.

இதையும் படிக்கலாமே:
உங்களுக்கு பணக்கஷ்டம் ஏற்படாமல் காக்கும் பரிகாரம்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Athi varadhar garuda sevai in Tamil. It is also called as Perumal garuda sevai in Tamil or Athi varadhar in Tamil or Athi varadhar Peruvizha in Tamil.