உங்களுக்கு எப்போதும் பணக்கஷ்டம் ஏற்படாமல் காக்கும் தாந்திரிக பரிகாரம் இதோ

thengai

நாம் வாழ்க்கை வாழ்வதற்கு பணம் எனும் செல்வம் இன்றியமையாததாகும். அந்த பணத்தை ஈட்ட பலரும் ஏதாவது ஒரு வேலைக்கு செல்கின்றனர். ஆனால் பலர் ஏதாவது தொழில், வியாபாரம் செய்து பொருளீட்டுகின்றனர். தொழிலோ அல்லது வியாபாரமோ எதை செய்தாலும் வாடிக்கையாளர்கள் அதிகளவில் வந்தால் மட்டுமே தனவரவு நன்றாக இருக்கும். ஆனால் ஒரு சிலருக்கு பல ஆண்டு காலம் தொழில், வியாபாரங்கள் செய்தாலும் பெரிய எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களோ, பெருமளவு லாபங்களோ ஏற்படுவதில்லை. இத்தகைய குறைபாடுகளை தீர்த்து லாபங்களை பெருக்கச் செய்யும் ஒரு எளிய தாந்திரிக வழிமுறையை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

money

சிறிய பெட்டிக்கடை வியாபாரம் முதல் பெரும் கப்பல் வியாபாரங்கள் வரை செய்பவர்களும் தங்களின் வியாபாரத்தில் நஷ்டங்கள் ஏற்படாமல் இருக்கவும், வியாபார விடயங்கள் அனைத்திலும் வெற்றி பெறவுமே விரும்புகின்றனர். அவர்களின் இத்தகைய விருப்பத்தில் எந்த ஒரு தவறும் இல்லை. செய்கின்ற தொழில், வியாபாரங்களில் அதிக லாபங்களை பெறவும், வியாபாரம் மேலும் விரிவடையவும் கீழ்கண்ட ஒரு எளிய தாந்திரீக பரிகாரத்தை நம்பிக்கையோடு செய்வதால் எண்ணிய நற்பலன் உண்டாவதை அனுபவ ரீதியில் உணரலாம்

தேங்காய் பெரும்பாலும் நமது அன்றாட சமையலில் பயன்படுத்தப்படும் ஒரு உணவுப் பொருளாக இருந்தாலும் நமது கலாச்சாரத்தில் தேங்காய் என்பது தெய்வ வழிபாட்டில் பயன்படுத்தப்படும் இன்றியமையாத ஒரு பூஜைப் பொருளாக திகழ்கிறது. அத்தகைய தேங்காயில் நார்கள் அனைத்தையும் நீக்கிவிட்டு, அதன் உச்சி அல்லது அடிப்பகுதியை காணும் போது மூன்று கண்களைப் போன்ற அடையாளம் தென்பட்டால் அந்த தேங்காய் சிவாம்சம் பொருந்தியதாக கருதப்படுகிறது. வழக்கமாக பெரும்பாலான தேங்காய்கள் இந்த வகையிலேயே இருக்கின்றன. அப்படி தேங்காய்களை உரிக்கும் போது இரண்டு பக்கங்களிலும் தேங்காயில் கண் போன்ற அமைப்பு எதுவும் காணப்படாமல் இருந்தால் அதை வடமொழியில் “ஏகாக்ஷி தேங்காய்” என்கின்றனர். இத்தகைய தேங்காய் லட்சுமி தேவியின் அம்சம் நிறைந்தது என கருதப்படுகிறது.

அப்படிப்பட்ட தேங்காய் உங்களுக்கு கிடைத்தால் அதை உடைக்காமல், ஒரு சிகப்பு நிற துணியில் தேங்காயை வைத்து மடித்து, முடி போட்டு உங்கள் தொழில், வியாபாரங்கள் நடைபெறுகின்ற இடத்தில் மேஜையில் இருக்கும் பணப்பெட்டிக்குள்ளாக வாடிக்கையாளர்கள் மற்றும் அந்நிய நபர்கள் பார்க்காத படி வைத்துக் கொள்ள வேண்டும். வீடுகளில் தாங்கள் அலமாரியில் பணம் வைக்கும் பெட்டிக்குள்ளாகவும் வைத்துக் கொள்ளலாம்.

- Advertisement -

coconut

வட இந்திய வியாபாரிகளால் அதிகம் பின்பற்றப்படும் இந்த பரிகார முறையை நீங்கள் செய்வதால் உங்கள் தொழில், வியாபாரங்களில் சிறப்பான முன்னேற்றங்கள் ஏற்படும். அதிக வாடிக்கையாளர்கள் கிடைத்து லாபங்கள் பெருகும். உங்கள் பணப்பெட்டியில் எப்போதும் பணமுடை ஏற்படாதபடி காக்கும். வீட்டில் வைத்திருப்பதால் சிறிது, சிறிதாக பொருளாதார முன்னேற்றங்கள் ஏற்படுவதை அனுபவ ரீதியில் உணரலாம். குடும்பத்தில் பொருளாதார வளம் பெருகச் செய்யும். இப்படி பண பெட்டியில் வைக்கப்பட்ட தேங்காய் பல ஆண்டுகளுக்கு கெடாமல் இருக்கும். அப்படி அந்த தேங்காய் மிகவும் பழையதாகி மக்குவது போன்று தெரிந்தால், அந்த தேங்காயை மாற்றிவிட்டு அதே போன்ற ஒரு புது தேங்காயை ஒரு சிகப்பு துணியில் போட்டு வைக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே:
உங்கள் நோய்கள், பணக்கஷ்டங்களை போக்கும் பரிகாரம்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Thengai pariharam in Tamil. It is also called as Thanthirigam in Tamil or Viyabaram peruga in Tamil or Tholil sirakka in Tamil or Viyabaram vetri pera in Tamil.