இந்த தினங்களில் அத்தி வரதர் தரிசனம் செய்ய வர வேண்டாம். கோயில் நிர்வாகம் அறிவிப்பு

athi-varadhar
- Advertisement -

பட்டு ஆடைகளுக்கு வட இந்தியாவில் வாரணாசி நகரம் போன்று தென்னிந்தியாவில் பட்டாடை உற்பத்திற்கு புகழ் பெற்ற நகரமாக காஞ்சிபுரம் இருக்கிறது. மிகப் பழமையான நகரமான காஞ்சிபுரம் பல்வேறு புகழ்பெற்ற சைவ மற்றும் வைணவ கோவில்களுக்கும் இருப்பிடமாக இருக்கின்றது. அப்படிப்பட்ட ஒரு பாரம்பரிய பெருமை மிக்க கோவில் தான் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில். இங்கு 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை பக்தர்களுக்கு கிடைக்கும் அத்திவரதர் தரிசனம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அது குறித்த தகவலை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

athi varadhar

ஒரு மனிதனின் வாழ்நாளில் ஒருமுறை அல்லது அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே காணக்கூடிய ஒரு தரிசனமாக காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலின் அத்திவரதர் தரிசனம் திகழ்கிறது. எனவே அந்த அத்தி வரதரை தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது கண்டு விட வேண்டும் என்கிற நியாயமான ஆசையில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் தினந்தோறும் காஞ்சிபுரம் நகரை நோக்கி வந்த வண்ணம் இருக்கின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் ஆடி தேய்பிறை ஏகாதசி தினமான நேற்று மட்டுமே அத்திவரதரை தரிசிக்க 2 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருகை புரிந்ததாக காஞ்சி வரதராஜபெருமாள் கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். இதனால் அத்திவரதரை தரிசனம் செய்வதற்கு நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உண்டானது. மேலும் ஒரு நாளில் திருப்பதி திருமலை தேவஸ்தானத்தில் வருகை தருகின்ற பக்தர்களின் எண்ணிக்கையை காட்டிலும் அத்திவரதர் தரிசனத்திற்கு வருகின்ற பக்தர்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

athi vardhar

இதனால் ஏற்படும் மக்கள் நெரிசலை தவிர்க்க வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அத்திவரதர் தரிசனத்திற்கு வெளியூரில் இருந்து பக்தர்கள் வருவதை தவிர்க்குமாறு வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
அத்தி வரதர் நின்ற நிலை தரிசனம் எப்போது

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Athi varadhar temple request in Tamil. It is also called as Athi varadhar in Tamil or Athi varadar darshan in Tamil or Athi varadhar thiruvizha in Tamil.

- Advertisement -