அத்தி வரதர் நின்ற நிலையில் பக்தர்களுக்கு தரிசனம் தருவது எப்போது தெரியுமா?

athi-varadhan

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் மட்டுமே சுமார் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அரிய வைபவமாக அத்தி வரதர் தரிசன வைபவ விழா திகழ்கிறது. கோயில் குளத்தில் ஒரு பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிக்கும் அத்தி வரத பெருமாள் வெளியே எடுக்கப்பட்டு பக்தர்களுக்கு 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை தரிசனம் தருவது நடைமுறை.

பல்வேறு சிறப்புகளை கொண்ட அத்தி வரதர் வைபவம் இந்தாண்டு ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 17ம் தேதி வரை நடைப்பெறும் என கோயில் நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டு தற்போது வரை அத்தி வரதர் வைபவம் வெகு விமர்சையாக நடைப்பெற்று வருகின்றது. இந்நிலையில் அத்தி வரதர் நின்றிருக்கும் நிலையில் பக்தர்களுக்கு தரிசனம் தரும் நிகழ்வு ஒரு வார காலத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பொதுவாக அத்தி வரதர் குளத்திலிருந்து எடுக்கபட்டு 48 நாட்கள் பக்தர்களுக்கு தரிசனம் கொடுக்கும் காலத்தில் முதல் 24 நாட்கள் கிடந்த நிலையிலும், அடுத்த 24 நாட்கள் நின்ற நிலையிலும் காட்சி தருவது பன்னெடுங்காலமாக பின்பற்றப்பட்டு வரும் ஐதீகம் ஆகும். இந்நிலையில் தான் அத்தி வரதர் நின்ற நிலையில் தரிசனம் தருவது கால தாமதம் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலை உறுதிக்கான வலுவான அமைப்பை ஏற்படுத்திய பின்னரே நின்ற கோலத்தில் அத்தி வரதர் பக்தர்களுக்கு காட்சி தருவார் என கூறப்பட்டுள்ளது.

மேலும் அத்தி வரதர் சிலையும் சற்று பலவீனமாக இருப்பதால், சிலையை நிற்கும் நிலைக்கு மாற்றி ஆகஸ்ட் 1 முதல் அத்தி வரதர் வைபவத்தின் இறுதி தினமான ஆகஸ்ட் 17 வரை அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சி தருவரர் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாமே:
அத்தி வரதர் தரிசனத்திற்கான ஏற்பாடுகள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Athi varadhar position change in Tamil. It is also called as Athi varadhar in Tamil or Athi varadar darshan in Tamil or Athi varadhar thiruvizha in Tamil.