- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilசருமத்தில் இருக்கும் கருப்பு நிறத்தை அதி வேகமாக விரட்டி அடிக்கும் அதிமதுரம். வெறும் 10 நாள்...

சருமத்தில் இருக்கும் கருப்பு நிறத்தை அதி வேகமாக விரட்டி அடிக்கும் அதிமதுரம். வெறும் 10 நாள் இதை மட்டும் செய்யுங்க. கருத்து போன உங்கள் சருமமெல்லாம் அப்படியே, பால் நிறத்தில் வெள்ளையாக மாறிவிடும்.

- Advertisement -

பெரும்பாலும் நம்முடைய சருமம் கருத்து போவதற்கு முதல் காரணம் நம்மை சுற்றி இருக்கும் சுற்றுச்சூழல் தான். தினமும் அடிக்கும் வெயில் வெளியே சென்று வரக்கூடிய வேலை அல்லது டூ வீலர் ஓட்டுபவர்கள், இப்படிப்பட்டவர்களுக்கு எல்லாம் அந்த சூரிய வெளிச்சம் பட்டு பட்டு சருமம் கருத்துப் போகத்தான் செய்யும். முகம், கை, கால், கழுத்து பகுதியில் எல்லாம் சருமம் ரொம்பவும் வறர்ச்சி அடைந்து ரொம்பவும் கருத்துப் போய் நம்முடைய இயற்கையான நிறமே காலப்போக்கில் மறைந்திருக்கும். தினமும் வேலைக்கு செல்லக்கூடிய பெண்களுக்கு இது நல்லாவே புரியும். காலேஜ் ஸ்கூலுக்கு போகக்கூடிய பெண்களுக்கும் இது நல்லாவே தெரியும்.

சரி இப்படிப்பட்ட பிரச்சினையிலிருந்து நம்முடைய சருமத்தை பாதுகாக்க என்ன செய்யலாம். வெயில் படாத படி கைக்கு கிளவுஸ், முகத்திற்கு துப்பட்டா போன்ற விஷயங்களை பயன்படுத்தலாம். இருந்தாலும் உங்கள் சருமத்திற்கு ஏற்ப நல்ல சன் ஸ்கிரீனாக வாங்கிக் கொள்ளுங்கள். நீங்கள் வெளியே செல்வதற்கு 20 நிமிடத்திற்கு முன்பு அந்த சன் ஸ்கிரீனை, முகம் கை கால் கழுத்து பகுதிகளில் அப்ளை செய்து கொண்டு வெளியே சென்றால், உங்கள் சருமம் பாதுகாக்கப்படும்.

- Advertisement -

அதி விரைவாக வெள்ளையாக அதிமதுர அழகு குறிப்பு:
சரி எங்களுடைய முகம் வெயில் பட்டு பட்டு ரொம்பவும் கருத்துப் போய்விட்டது. பிக்மென்ட்டேசன் முகத்தில் அடர்த்தியாக இருக்குது. என்ன செய்வது. இந்த அழகு குறிப்பு உங்களுக்காக தான். இது முழுக்க முழுக்க ஆயுர்வேதத்தில் பயன்படுத்தக்கூடிய ஒரு பொருள்தான். இதை பயன்படுத்தும் போது கருத்த உங்களுடைய சருமம் வெள்ளையாக மாறும். ஆனால், அதற்காக நீங்கள் கொஞ்ச நாள் காத்திருக்கத்தான் வேண்டும்.

உடனடியாக எதுவும் நடக்காது. நாட்டு மருந்து கடைகளில் விற்கும் அதிமதுர குச்சிகளை வாங்கிக் கொள்ளுங்கள். 50 கிராம், 100 கிராம். உங்கள் விருப்பம் போல வாங்கிக் கொள்ளுங்கள். அதைக் கொண்டு வந்து நன்றாக இடித்துக் கொள்ளுங்கள். ஒரு சின்ன உரலில் போட்டு இடிக்க வேண்டும். அது மரக்கட்டைகளாக தான் உங்களுக்கு கிடைக்கும். முழுசாக கிடைக்கும். அதை இடித்து குறிப்புக்கு தயார் செய்யவும். (இல்லையென்றால் அதிமதுர பொடியை நாட்டு மருந்து கடைகளில் விற்கும் அதை வாங்கி குறிப்புக்கு பயன்படுத்தலாம்.)

- Advertisement -

ஒரு அகலமான பாத்திரத்தில் பெரிய சொம்பு அளவு தண்ணீரை ஊற்றி 6-7 அதிமதுர குச்சிகளை போட்டு, மிதமான தீயில் கொதிக்க வைத்தால் அதிமதுரத்தில் இருக்கும் சத்துக்கள் எல்லாம் அந்த தண்ணீரில் இறங்கி விடும். அரை மணி நேரத்திற்கு மேலே கொதிக்க விட்டாலும் சரிதான். தண்ணீரின் நிறம் மாறி சுண்டி வந்த உடன், அடுப்பை அணைத்துவிட்டு இதை நன்றாக ஆற வையுங்கள். 5 மணி நேரம் ஒரு மூடி போட்டு டிஸ்டர்ப் பண்ணாம அப்படியே வச்சிருங்க. அந்த குச்சியில் இருக்கும் எசன்ஸ் எல்லாம் இன்னும் கொஞ்சம் அந்த தண்ணீரில் இறங்கிவிடும். (இதில் வாசத்திற்கு தேவை என்றால் கொஞ்சமாக வெட்டிவேர் கூட சேர்த்து கொதிக்க வைத்து கொள்ளலாம்).

வெட்டி வெறும் நம்முடைய சருமத்தை குளிர்ச்சி செய்யக்கூடிய பொருள்தான். இப்போது ஆறிய இந்த தண்ணீரை வடிகட்டி ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, வெளியில் வைத்தால் 7 நாட்கள் கெட்டுப்போகாது. பிரிட்ஜில் வைத்தால் இரண்டு வாரம் வரை கெட்டுப்போகாது. தினமும் காலை மாலை இந்த ஸ்பிரேவை உங்கள் முகத்தில் அடித்துக் கொள்ள வேண்டும். முகம் முழுவதும் இருக்கும் மேக்கப் எல்லாம் நீக்கிவிட்டு, இந்த ஸ்ப்ரேவை முகத்தில் கழுத்தில், கை, எந்த இடத்தில் எல்லாம் உங்களுடைய சருமம் எந்த இடத்தில் எல்லாம் கருப்பாக இருக்கிறதோ அந்த இடத்தில் எல்லாம் ஸ்ப்ரே செய்து விரல்களில் வைத்து லேசாக வட்ட வடிவில் மசாஜ் செய்து விட்டு அப்படியே விட்டுவிடலாம்.

இதையும் படிக்கலாமே: உங்களை பாடாயப்படுத்தும் பேன் பொடுகு தொல்லையில் இருந்து எளிதில் விடுபட ஒரே ஒரு கற்பூரத்தை இத்துடன் சேர்த்து தலையில் தேய்த்து விடுங்கள். இதை தேய்த்த உடனே பேன்கள் செத்து விடும்

அது தண்ணீர் தானே காய்ந்து விடும். திரும்பவும் முகம் கழுவ வேண்டும் என்று அவசியம் கூட கிடையாது. அப்படியே நீங்கள் தூங்க செல்லலாம். தினமும் இந்த தண்ணீரை உங்களுடைய சருமத்தின் மேல் ஸ்பிரே செய்து வர கருத்து போன உங்களுடைய சருமம் படிப்படியாக வெள்ளையாக மாறிவரும். ஒரு மாதம் தொடர்ந்து இதை பின்பற்றி வந்தால் நல்ல ரிசல்ட் தெரியும். அழகின் மீது ஆர்வம் உள்ளவர்கள் இந்த அழகு குறிப்பை பின்பற்றி பலன் பெறலாம்.

சற்று முன்