உங்களை பாடாயப்படுத்தும் பேன் பொடுகு தொல்லையில் இருந்து எளிதில் விடுபட ஒரே ஒரு கற்பூரத்தை இத்துடன் சேர்த்து தலையில் தேய்த்து விடுங்கள். இதை தேய்த்த உடனே பேன்கள் செத்து விடும்

peen
- Advertisement -

நாம் தலைமுடியை என்ன தான் பார்த்து பார்த்து பார்த்து பராமரித்து வந்தாலும் கூட, ஒரு சிலருக்கு தலையில் இருக்கும் பேன்கள் ஒழிய ஒழியாது. இதனால் நாம் தலைமுடியை எத்தனை அழகாக அலங்கரித்துக் கொண்டாலும் அதன் மேல் தெரியும் இந்த பேன்கள் நம்முடைய அழகை கெடுப்பதும் இல்லாமல், நம்மால் மற்றவர்களுடன் சகஜமாக பழக முடியாத நிலையும் ஏற்படுத்தி விடும். அதுமட்டுமின்றி இந்த பேன்கள் கடித்து தலையில் புண் அரிப்பு போன்றவை கூட வந்து விடும். இவையெல்லாம் சரி செய்ய ஒரு எளிமையான வழியை தான் இந்த அழகு குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம்.பேன் தொல்லை நீங்க

தலையில் பேன் வராமல் இருக்க நாம் தலைமுடியை சரியான முறையில் பராமரிப்பது மிகவும் அவசியம். தலையில் அழுக்கு சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தினமும் பேன் சீப்பு கொண்டு தலையை வார வேண்டும். அதே போல் வெளியில் எங்கு சென்றாலும் பிறர் பயன்படுத்திய சீப்பு போன்றவற்றையெல்லாம் நாம் பயன்படுத்தக் கூடாது. இவை எல்லாம் தலையில் பேன் வராமல் இருக்க செய்ய வேண்டிய சின்ன சின்ன வழிமுறைகள்.

- Advertisement -

இப்போது பேன் வந்து விட்டால் அதை எப்படி சரி செய்வது என்பதற்கான வழிமுறையும் பார்ப்போம். இதற்கு உங்களின் முடியின் அளவிற்கு ஏற்றார் போல தேங்காய் எண்ணெய் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரே ஒரு கற்பூரத்தை நியமிக்க பவுடராக்கி போடுங்கள். தேங்காய் எண்ணெயும் கற்பூரமும் நன்றாக கலந்த பிறகு இந்த எண்ணெயை உங்கள் தலைமுடியின் வேர்க்கால்களில் படும்படி தேய்த்து விடுங்கள். கற்பூரத்தை மட்டும் தேங்காய் எண்ணெயின் அளவிற்கு ஏற்றார் போல் கூடவோ குறையவோ போட்டுக் கொள்ளுங்கள்.

கற்பூரத்தில் இருக்கும் ஆன்டி பாரடைஸ் என்ற வேதிப்பொருள் தலையில் இருக்கும் பெண்களை எல்லாம் அறவே ஒழித்து விடும். இதை தேய்த்து சிறிது நேரத்திற்கு எல்லாமே தலையில் இருக்கும் பேன்கள் எல்லாம் இறந்து விடும்.ஆனால் இது உங்கள் தலையில் இரண்டு மணி நேரம் வரை கட்டாயமாக வைத்திருக்க வேண்டும். அதன் பிறகு சீயக்காய் கொண்டு நன்றாக தலையை சுத்தம் செய்து விட்டு துணி வந்து துடைத்து விடுங்கள. இப்படி செய்யும் போது உங்கள் தலையில் இருக்கும் பெண்கள் எல்லாம் செத்து உதிர்ந்து விடும்.

- Advertisement -

ஒரு சிலருக்கு இந்த கற்பூரத்தின் வாடை ஒத்துக் கொள்ளாது. அதை இவ்வளவு நேரம் தலையில் வைத்துக் கொள்ளவும் பிடிக்காது. அப்படியானவர்கள் ஒரு கைப்பிடி வேப்பிலை, ஒரு கைப்பிடி துளசி இலை இரண்டையும் நன்றாக தண்ணீரில் அலசி சுத்தம் செய்த பிறகு மிக்ஸி ஜாரில் அரைத்துக் கொள்ளுங்கள். அந்த கலவையை உங்கள் தலையில் தேய்த்து இதே போல இரண்டு மணி நேரம் வரை தலையில் அப்படியே விட்டு விடுங்கள்.

அதன் பிறகு இதே போல சீயக்காய் வைத்து தலை முடியை அலசிய பிறகு துணி வைத்து துவட்டி விடுங்கள். இதை துவட்டும் துணியிலே அனைத்து பேனும் வந்து விடும். இது துளசி இலை தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்வதுடன் இந்த வாடைக்கு பேன் இருக்காது. அதே போலத் தான் வேப்பிலையில் இருக்கும் கசப்புத் தன்மைக்கும் தலையில் பேன் சேராது. அது மட்டும் இன்றி இது தலையில் இருக்கும் புண் பொடுகு போற்றுவற்றை கூட சரியாகி விடும்.

இதையும் படிக்கலாமே: கத்தை கத்தையாக காடு போல கருக்கருன்னு முடி வளர ஒரு கைப்பிடி கொய்யா இலை இருந்தாலே போதும். அப்புறம் நீங்களே தடுத்தாலும் முடி வளர்வதை நிறுத்த முடியாது.

இந்தப் பாடாய்படுத்தும் பேன் தொல்லையில் இருந்து வெளிவர எளிமையான இந்த இரண்டு வழிமுறைகளை பயன்படுத்தி பாருங்கள். இதை தொடர்ந்து செய்ய வேண்டும் என்று அவசியம் கூட இல்லை. ஒரு முறை செய்தாலே போதும் பேன்கள் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய் விடும்.

- Advertisement -