அதிரசம் நன்றாக வர இந்த சின்ன சின்ன குறிப்புகள் தெரிந்தாலே போதும். அதிரசம் செய்வதில் நீங்கள் தான் மாஸ்டர்.

- Advertisement -

தீபாவளி என்றாலே ஞாபக வருவது பட்டாசு நோன்பு இவை இரண்டும் தான். இந்த நோன்பில் மிகவும் விசேஷமான ஒன்று அதிரசம் செய்வது. ஆனால் இந்த அதிரசம் இன்றளவும் பல பேருக்கு சரியாக வருவதே இல்லை அதில் குறிப்பாக பாகு எடுப்பது என்பது வரவே வராது என்று முடிவு செய்து அதிரசம் செய்யும் ரிஸ்கை பலரும் எடுப்பதில்லை. இந்த பதிவில் குறிப்பிட்டுள்ள தவறுகளை நீங்கள் செய்யாமல் இருந்தாலே போதும். நீங்கள் புதிதாக சமைப்பவராக இருந்தாலும் கூட பயப்படாமல் அதிரசம் செய்ய தொடங்கலாம். அது எப்படி என்று பதிவில் பார்க்கலாம்.

அதிரசம் செய்ய பச்சரிசி அரை கிலோ, வெல்லம் 350 கிராம், பச்சரிசி அதிரசம் செய்வதற்கு மாவு பச்சரிசி என்று இருக்கும் அதை கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள். அதே போல் வெள்ளமும் பாகு வெல்லம் வாங்கிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அதிரசத்திற்கு மாவு ஊற வைக்கும் நேரம் மிகவும் முக்கியம். அதிக நேரம் ஊற வைத்து விட்டாலும் அதிரசம் வராது, அதே சமயம் குறைவான நேரம் ஊற வைத்தாலும் வராது. எனவே பச்சரிசியை கழுவி தண்ணீர் வடித்து ஒரு ஈரத் துணியில் ஒன்றிலிருந்து ஒன்றரை மணி நேரம் வரை மட்டும் தான் ஊற வைக்க வேண்டும். இந்த நேரம் மிகவும் முக்கியம்.

அடுத்தது பச்சரிசி வெயிலில் காய வைக்க கூடாது வீட்டின் நிழலில் தான் காய வைக்க வேண்டும் வீட்டிற்குள்ளேயே ஒரு காட்டன் துணி போட்டு பேன் காற்றில்காயா வைக்கலாம். அடுத்து காய வைத்த பச்சரிசி கையில் எடுத்து பார்க்கும்போது தண்ணீர் கைகளில் ஒட்ட கூடாது. ஆனால் பச்சரிசியில் லேசான ஈரம் பதம் இருக்க வேண்டும். இதை கண்டுபிடிக்க உங்கள் கையை பச்சரிசி மாவில் வைத்து லேசாக அழுத்தி எடுத்துப் பார்த்தால் கைகளில் அரிசி ஒட்டி இருக்க வேண்டும். ஆனால் தண்ணீர் இருக்கக்கூடாது இதுதான் அரிசி காய்வதற்கான சரியான பதம்.

- Advertisement -

இதை உங்கள் வீட்டில் மிக்ஸி ஜாரில் (அளவு அதிகமாக செய்யும் போது கடையில் அரைக்கலாம் ஆனால் அதிரசத்திற்கு என்று சொல்லி அரைக்க வேண்டும்)அரைத்துக் கொள்ளலாம் மிக்ஸி ஜாரில் அரைக்கும் போது ரவை பதத்திற்கு அடுத்தபடியாக இருக்கும் படி அரைத்தால் போதும். மிகவும் நைசான மாவாக அரைக்க வேண்டிய அவசியம் இல்லை. இப்படி அரைத்த மாவை ஒரு சல்லடை கொண்டு சலித்தால் அதில் தங்கி இருக்கும் ஒன்று இரண்டு அரிசியும் கூட வந்து விடும். இதன் பிறகு சலித்த மாவை நீங்கள் அதிரசம் செய்ய பயன்படுத்தலாம். அதிரச மாவு அரைப்பதற்கான முறை இவைகள் தான்.

அடுத்தது வெல்லப்பாகு இதை காய்ச்ச வேண்டும். அடுப்பை பற்ற வைத்து ஒரு ஆதி கனமான பாத்திரத்தை வைத்து கொள்ளுங்கள். அதில் 350 கிராம் வெல்லத்தை ஒரு கிண்ணத்தில் அளந்து கொள்ளுங்கள். ஒரு எந்த கிண்ணத்தில் வெல்லம் எடுக்கிறீர்களோ அந்த கிண்ணத்தில் ஒன்றரை கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி வெல்லத்தை காய்ச்ச வேண்டும்.

- Advertisement -

வெல்லத்தை காய்ச்சும் போது ஒரு தட்டில் சிறிதளவு நீரூற்றி வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் காய்ச்சிய வெல்லப்பாகை அதில் ஊற்றும் போது வெல்லம் தண்ணீரில் கரையாமல் ஒரு பிசின் போல் உருண்டு வர வேண்டும் இதுதான் வெல்லம் காய்ச்ச சரியான பதம்.

இதன் பிறகு அரைத்து வைத்த பச்சரிசி மாவில் சிறிது சிறிதாக வெல்லத்தை ஊற்றி கிளறிக் கொண்டே இருங்கள். வெல்லத்தில் பச்சரிசி மாவை கொட்டி கலக்க வேண்டாம். ஒரு வேளை நீங்கள் அளவு தவறாக வைத்து வெல்லப்பாகு கொஞ்சம் அதிகமாக இருந்தாலும் அல்லது கம்மியாக இருந்தாலும் நீங்கள் பச்சரிசி மாவை அதில் கொட்டி விட்டால் தெரியாது எனவே பச்சரிசி மாவில் வெல்லத்தை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கிளறிக் கொண்டே இருங்கள்.

இப்போது எண்ணெய் சட்டியை வைத்து எண்ணெய் காய்ந்ததும் ஒவ்வொரு அதிரசமாக போட்டு எடுங்கள். அதற்க்கு ஒரு வாழை இலையில் கொஞ்சமாக எண்ணெய் தடவி இந்த மாவை எடுத்து அதில் தட்டி போடுங்கள். எண்ணெய் மிதமான சூட்டில் இருந்தால் போதும். வாழை இலை இல்லையென்றால் பிளாஸ்டிக் கவர் கூட பயன்படுத்தலாம்.

சில நேரங்களில் அதிரசம் சூடும்போது எண்ணெயில் போட்டவுடன் அதிரசம் உடைந்து தெரிந்துவிடும் அதற்கு காரணம் பாகில் தண்ணீர் அதிகமாகி விட்டது என்று அர்த்தம். அப்படி இருக்கும் போது கண்டிப்பாக இந்த மாவை ஒரு நாள் வைத்து விட்டு அடுத்த நாள் தான் எடுத்து அதிரசம் சுட முடியும்.

அப்படி இல்லாமல் அதிரசம் மிகவும் கெட்டியாக வந்தால் வெல்லம் கம்மியாகிவிட்டது என்று அர்த்தம். இதற்கு நீங்கள் கொஞ்சம் லேசான சுடுத ண்ணீரை தெளித்து விட்டு ஒரு முறை பிசைந்து சுட்டால் சரியாக வந்துவிடும்.

இதையும் படிக்கலாமே: தேங்காய் பால் புலாவ் ரொம்ப ருசியா 15 நிமிஷத்துல தயார் செஞ்சிடலாமே! உதிரியான தேங்காய் பால் சாதம் எப்படி செய்வது?

அதிரசத்திற்கு மாவு, வெல்லம் பாகு எடுக்கும் முறைகளை பற்றி தெரிந்து கொள்ள இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும். இதில் உள்ள அளவுகளையும், முறைகளையும் சரியாக பயன்படுத்தி இந்த தீபாவளிக்கு நீங்களும் அதிரசம் செய்து அசத்துங்கள்.

- Advertisement -