வீட்டிலேயே சுவையான மூங் டால் ஸ்னாக்ஸ் செய்யும் முறை

moong-daal
- Advertisement -

மூங் டால் என்பது பட்டாணி, உப்புக்கல்லை போன்றமாதிரியான ஒரு ஸ்னாக்ஸ் வகையாகும். இதனை வீட்டிலே எப்படி எளிமையாக செய்வது என்பது பற்றி எந்த பதிவில் காண்போம். அனைவருக்கும் பிடித்த ஸ்னாக்ஸ் வகைகளில் இதும் ஓன்று.

moong_daal1

மூங் டால் செய்ய தேவையான பொருட்கள் :

- Advertisement -

சிறு பருப்பு – 1 டம்ளர்
எண்ணெய் – தேவையான அளவு
தனி மிளகாய்த்தூள் – 1/2 ஸ்பூன்
சாட் மசாலா – 1/2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

மூங் டால் செய்முறை:

முதலில் சிறுபருப்பினை இரண்டு முறை கழுவி 4 மணி நேரம் வரை தண்ணீரில் ஊறவைக்கவும். நன்றாக ஊறிய பிறகு அதனை வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். பிறகு வடிகட்டிய சிறுபருப்பினை ஒரு துணியில் கொட்டி 2 மணிநேரம் வரை காயவைக்க வேண்டும்.

- Advertisement -

moong_daal2

பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் காய்ந்த சிறுபருப்பினை ஒரு கரண்டி மூலம் வைத்து நன்றாக பொரித்து எடுக்கவும் . இது போன்று அனைத்து பருப்பினையும் வறுத்து எடுக்கவேண்டும்.

பிறகு வறுத்து எடுத்த சிறுபருப்பில் மிளகாய்த்தூள்,சாட் மசாலா மற்றும் உப்பு சேர்த்து கலந்து எடுத்தால் சுவையான மூங் டால் தயார்.

- Advertisement -

moong_daal3

சமைக்க ஆகும் நேரம் – 10 நிமிடம்
சாப்பிடும் நபர்களின் எண்ணிக்கை – 4

இதையும் படிக்கலாமே:
கேரட் அல்வா செய்யும் முறை

இது போன்று மேலும் பல சமையல் குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Moong daal recipe in Tamil. It is also called as Moong daal seimurai or Moong daal seivathu eppadi in Tamil or Moong daal preparation in Tamil.

- Advertisement -