ஒரு காரியத்தை நாம் செய்ய வேண்டும் என்று நினைக்கிறோம். அந்த காரியத்தில் தடைகள் ஏற்படுகிறது. இதற்கு யார் காரணமாக இருப்பார்கள். ராகு மற்றும் கேது தான் காரணமாக இருப்பார்கள். அதனால் தான் எந்த ஒரு காரியத்தை செய்வதாக இருந்தாலும் அதை செய்வதற்கு முன்பு விநாயகர் பெருமானை வழிபட வேண்டும் என்று நம்முடைய முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். அப்படி விநாயகப் பெருமானை வழிபடுவதோடு காளி அம்மனையும் சேர்த்து நாம் வழிபட்டோம் என்றால் தடைப்பட்ட காரியங்கள் அனைத்தும் தடையில்லாமல் நடந்திடும். அந்த வழிப்பாட்டு ரகசியத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.
உக்கிர தெய்வங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற தெய்வமாக திகழக்கூடியவள் தான் காளியம்மன். காளியம்மனை முறையாக வழிபடுபவர்களுடைய வாழ்க்கையில் எதிரிகள் என்ற பேச்சுக்கே இடம் இருக்காது. இந்த காளியம்மனை நன்மைக்காகவும் உபயோகப்படுத்தலாம் தீமைக்காகவும் உபயோகப்படுத்தலாம். ஆனால் தீமைக்காக உபயோகப்படுத்தினோம் என்றால் அந்த தீமைக்குள்ளேயே நாமும் விழுந்து போய் விடுவோம் என்பதால் நன்மைக்காக மட்டுமே நாம் வழிபாடு செய்ய வேண்டும். அப்படி நாம் நன்மைக்காக செய்யக்கூடிய காரியங்கள் வெற்றி அடைவதற்கு எந்த முறையில் வழிபட வேண்டும் என்று தெரிந்து கொள்வோம்.
இந்த வழிபாட்டிற்கு நமக்கு ஒரு ரூபாய் நாணயமும் ஒரே ஒரு எலுமிச்சம் பழமும் இருந்தால் போதும். எந்த ஊரில் வேண்டுமானாலும் எந்த நாட்டில் வேண்டுமானாலும் இது கிடைக்கும் என்பதால் எங்கு இருந்து வேண்டுமானாலும் இந்த வழிபாட்டை நாம் செய்யலாம். வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய அம்மன் படத்திற்கு முன்பாக ஒரு விளக்கை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். இந்த விளக்கை ஏற்றும் பொழுது “ஓம் காளியம்மனே போற்றி” என்று காளியம்மனை மனதார நினைத்துக் கொண்டு ஏற்ற வேண்டும்.
இப்பொழுது அந்த தீபச்சுடர் ஒளியில் காளியம்மன் குடியேறி இருப்பாள். அவளுக்கு முன்பாக ஒரு நல்ல கருப்பில்லாத எலுமிச்சம் பழமாக ஒரு எலுமிச்சம் பழத்தை எடுத்து அதற்கு சந்தனம் குங்குமம் வைத்து விட வேண்டும். பிறகு ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து அந்த தீபத்திற்கு முன்பாக வைத்துவிட்டு நீங்கள் எந்த காரியத்திற்காக செல்கிறீர்களோ அந்த காரியத்தை சொல்லி அதில் எந்தவித தடைகளும் இல்லாமல் நல்லபடியாக நடந்தேற வேண்டும் என்று காளியம்மனிடம் மனதார வேண்டுதல் செய்து கொள்ளுங்கள்.
முக்கிய குறிப்பு காளியம்மனை வழிபடுவதற்கு முன்பாக விநாயகப் பெருமானையும் வழிபட வேண்டும். இப்படி வழிபாடு செய்து விட்டு எந்த ஒரு காரியத்தை நாம் செய்தாலும் அந்த காரியத்தில் நமக்கு வெற்றிகள் உண்டாகும். வெற்றி கிடைத்த பிறகு அந்த ஒரு ரூபாய் நாணயத்தை அருகில் இருக்கக்கூடிய அம்மன் சன்னதி உண்டியலில் போட்டு விட வேண்டும். எலுமிச்சம் பழத்தை நான்காக நறுக்கி திருஷ்டி சுத்தி போடுவது போல் போட்டு விட வேண்டும்.
இதையும் படிக்கலாமே: நினைத்தது நடக்க, வேண்டியது கிடைக்க உப்பு வழிபாடு
மிகவும் எளிமையான இந்த பரிகார வழிபாட்டை முழு நம்பிக்கையுடன் செய்பவர்களுடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய எதிரிகள் தொல்லையும் நீங்கும். அதேசமயம் அவர்கள் நினைத்த காரியம் அனைத்தும் நிறைவேறும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.