- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஎதிரிகள் தொல்லையும் கடன் பிரச்சனையும் தீர

எதிரிகள் தொல்லையும் கடன் பிரச்சனையும் தீர

- Advertisement -

நம்முடைய வாழ்க்கையில் நமக்கு இருக்கக்கூடிய எதிரிகளின் தொல்லை தீர்வதற்கும், துரோகிகளால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் விலகவும், கடன் பிரச்சனை தீரவும் பலவிதமான தெய்வங்களை வழிபாடு செய்யும் வழக்கத்தை வைத்திருப்போம். அதிலும் குறிப்பாக உக்கிர தெய்வ வழிபாடு அதீத பலனை தரும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட உக்கிர தெய்வங்களுள் ஒருவராக திகழக் கூடியவர் தான் கால பைரவர். காலபைரவரை வழிபாடு செய்வதற்கு உரிய தினமாக திகழ்வதுதான் அஷ்டமி திதி வரக்கூடிய தினம். அந்த வகையில் வளர்பிறை அஷ்டமியும் வெள்ளிக்கிழமையும் சுவாதி நட்சத்திரமும் சேர்ந்து வரக்கூடிய ஒரு அற்புதமான நாளாக தான் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி திகழ்கிறது. அன்றைய நாளில் நாம் மறவாமல் காலபைரவரை வழிபாடு செய்தோம் என்றால் கடன் தொடர்பான பிரச்சனைகளும் எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகளும் விலகும். அந்த வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

எதிரிகள் தொல்லை நீங்க வழிபாடு

ஒவ்வொரு மாதத்திலும் வரக்கூடிய அஷ்டமி நாளில் நாம் கால பைரவரை மறவாமல் வழிபாடு செய்ய வேண்டும். வளர்பிறை அஷ்டமி சமயத்தில் சொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபாடு செய்யும்பொழுது செல்வ செழிப்பிற்கு எந்தவித குறையும் இருக்காது. அந்த அளவிற்கு சக்தி வாய்ந்த நாளாக தான் இந்த நாள் திகழ்கிறது. இன்றைய தினத்தில் சுவாதி நட்சத்திரம் வருகிறது. நரசிம்மரை சுவாதி நட்சத்திர நாளில் வழிபாடு செய்பவர்களுக்கு கடன் பிரச்சினை தீரும். அதனால் மறவாமல் நாம் இந்த அற்புதமான நாளை தவிர விடாமல் வழிபாடு செய்ய வைரவரின் அருளால் கடன் மற்றும் எதிரிகளின் தொல்லையில் இருந்து வெளியில் வர முடியும்.

- Advertisement -

இந்த வழிபாட்டை மாலை 6:00 மணியிலிருந்து இரவு 9 மணிக்குள் எப்பொழுது வேண்டுமானாலும் செய்யலாம். இந்த வழிபாட்டை செய்வதற்கு நமக்கு 8 என்ற எண்ணிக்கையில் மிளகு வேண்டும். கால பைரவருக்கு உரிய ஒரு பொருளாக மிளகு திகழ்கிறது. பலரும் மிளகை மூட்டையாக கட்டி கால பைரவருக்கு தீபம் ஏற்றும் வழக்கத்தை வைத்திருப்பார்கள். அப்படிப்பட்ட மிளகை வைத்து தான் இந்த ஒரு வழிபாட்டை நாம் செய்யப் போகிறோம். இந்த வழிபாட்டை வீட்டிலும் செய்யலாம், ஆலயத்திலும் செய்யலாம், எந்த இடத்தில் இருந்து கொண்டு வேண்டுமானாலும் செய்யலாம். இந்த வழிபாட்டை செய்வதற்கு அசைவத்தை தவிர்த்து இருக்க வேண்டும் என்ற எந்தவித கட்டுப்பாடும் கிடையாது. பெண்கள் தீட்டு சமயமாக இருந்தாலும் இந்த வழிபாட்டை தாராளமாக செய்யலாம்.

நம்முடைய வலது கையில் எட்டு எண்ணிக்கையில் மிளகை எடுத்துக்கொண்டு ஏதாவது ஒரு அமைதியான இடத்தில் ஒரு விரிப்பை விரித்து அமர்ந்து கொள்ள வேண்டும். எந்த திசை பார்த்து வேண்டுமானாலும் அமரலாம். பிறகு காலபைரவரிடம் உங்களுடைய எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்க வேண்டும், கடன் பிரச்சினை தீர வேண்டும் என்று முழு மனதோடு வேண்டிக் கொள்ளுங்கள். இவ்வாறு வேண்டி முடித்த பிறகு பின்வரும் காலபைரவரின் இந்த மந்திரத்தை பதினைந்து நிமிடம் கூற வேண்டும்.

- Advertisement -

15 நிமிடம் கூறி முடித்த பிறகு திரும்பவும் காலபைரவரிடம் உங்களுடைய வேண்டுதலை முன்வைத்து வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளுங்கள். கையில் இருக்கக்கூடிய மிளகை ஒரு பேப்பரில் மடித்து கடன் பிரச்சினை தீர வேண்டும் என்று வேண்டிக் கொண்டவர்கள் தங்களின் பணம் வைக்கும் இடத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். எதிரிகளின் தொல்லை நீங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அதை தங்களுடைய பர்ஸில் வைத்துக்கொள்ள வேண்டும். இந்த மிளகு மூன்று மாதங்கள் வரை அப்படியே இருக்கட்டும். மூன்று மாதம் கழித்து வரக்கூடிய வளர்பிறை அஷ்டமியில் திரும்பவும் இதே வழிபாட்டை செய்து பழைய மிளகை எடுத்து ஓடுகின்ற தண்ணீரில் போட்டுவிட்டு புதிய மிளகை வைக்க வேண்டும்.

மந்திரம்

“ஓம் க்லீம் ப்ரம் பைரவாய நமஹ”

இதையும் படிக்கலாமே: வளர்பிறை அஷ்டமி வழிபாடு

பைரவருக்குரிய மிளகையை வைத்து பைரவருக்குரிய நாளான அஷ்டமி தினத்தில் இந்த முறையில் வழிபாடு செய்பவர்களுக்கு எதிரிகளின் தொல்லையும் கடன் பிரச்சனையும் முற்றிலும் தீரும். முழு நம்பிக்கையுடன் செய்து முழு பலனையும் பெறலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்