- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஎதிர்மறை ஆற்றல் விலக தேய்பிறை பஞ்சமி பரிகாரம்

எதிர்மறை ஆற்றல் விலக தேய்பிறை பஞ்சமி பரிகாரம்

- Advertisement -

வாராகி அம்மன் என்பவள் மிகவும் சிறப்பு மிகுந்த தெய்வமாக கருதப்படுகிறாள். மேலும் இவள் ஒரு துடிப்பான தெய்வம் என்பதால் இவளை முறையாகவும் முழு மனதோடும் வழிபாடு செய்பவர்களுக்கு எந்தவித எதிரிகளின் தொல்லையும் இருக்காது என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட வாராகி அம்மனுக்குரிய திதியாக பஞ்சமி திதி திகழ்கிறது. அதிலும் குறிப்பாக தேய்பிறை பஞ்சமி நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய அனைத்து விதமான கஷ்டங்களையும் நீக்கக்கூடிய ஒரு பஞ்சமியாக திகழ்கிறது. அப்படிப்பட்ட பஞ்சமி நாளில் வீட்டில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் விலகுவதற்கு செய்ய வேண்டிய ஒரு பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

எதிர்மறை ஆற்றல் விலக பரிகாரம்

எந்த ஒரு தெய்வமாக இருந்தாலும் அந்த தெய்வத்திற்குரிய நாளிலோ, திதியிலோ, நட்சத்திரத்திலோ அந்த தெய்வத்தை வழிபாடு செய்வது என்பது மிகவும் சிறப்பு. பலரும் அதை தான் பின்பற்றி வழிபாட்டை மேற்கொள்கிறோம். அந்த வகையில் தேய்பிறை பஞ்சமி என்பது வாராகி அம்மனுக்கு உரிய திதி. வாராகி அம்மனை வழிபாடு செய்பவர்கள் பல விதங்களில் வழிப்பாடு செய்வார்கள். ஒரு சிலர் தேங்காய் தீபம் ஏற்றுவார்கள். இன்னும் சிலரோ பூசணிக்காய் தீபம் ஏற்றுவார்கள். இன்னும் சிலரோ பஞ்சமுக தீபம் ஏற்றுவார்கள். இன்னும் சிலரோ ஐந்து விளக்குகளில் தீபம் ஏற்றுவார்கள்.

- Advertisement -

அதே போல் வாராகி அம்மனை பூஜை செய்வதையும் பல விதங்களில் செய்வார்கள். வாராகி அம்மனின் மந்திரமும் பல இருக்கின்றன. அவற்றின் தங்களுக்கு தெரிந்த மந்திரத்தை கூறி வாராகி அம்மனை வழிபாடு செய்வார்கள். இப்படி வழிபாடு செய்யக்கூடிய அனைவரும் வெவ்வேறு விதங்களில் வழிபாடு செய்தாலும் கடைசியில் கற்பூர தீப தூப ஆராத்தி காட்டுவது என்பது பொதுவான ஒன்றாகவே திகழ்கிறது. வாராகி அம்மனுக்கு மட்டுமல்ல எந்த தெய்வத்தை நாம் வழிபட்டாலும் கடைசியாக கற்பூர தீப தூப ஆராத்தி காட்டுவோம். அப்பொழுதுதான் அந்த வழிபாடோ, பூஜையோ நிறைவடைந்தது என்று பொருள்படும். அப்படி காட்டக்கூடிய ஆராத்தி பற்றி தான் இப்பொழுது பார்க்கப் போகிறோம்.

இதற்கு தெய்வீக அம்சம் பொருந்திய கற்பூரவள்ளி இலை வேண்டும். வராகி அம்மனுக்கு ஐந்து என்பது உகந்த எண் என்பதால் ஐந்து இலைகளை மாலை 5 மணிக்கு முன்பாகவே பறித்து சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இதை ஒரு தாம்பாள தட்டில் வட்ட வடிவில் வைக்க வேண்டும். பிறகு ஒவ்வொரு கற்பூரவள்ளி இலைக்கு மேலும் ஒரு துண்டு பச்சை கற்பூரம், ஒரு துண்டு கிராம்பை வைக்க வேண்டும். நாம் எந்த முறையில் வாராகி அம்மனை பஞ்சமி தினத்தில் வழிபாடு செய்தாலும் கற்பூர ஆரத்தி காட்டி முடித்த பிறகு இந்த ஐந்து இலைகளின் மேல் இருக்கும் பச்சை கற்பூரத்தை ஏற்றி வாராகி அம்மனுக்கு ஆரத்தி காட்ட வேண்டும்.

- Advertisement -

வாராகி அம்மனுக்கு ஆரத்தி காட்டிய பிறகு இந்த ஆரத்தி தட்டை வீடு முழுவதும் காட்ட வேண்டும். அதற்கேற்றார் போல் பச்சை கற்பூரத்தை கையிலேயே வைத்துக் கொள்ளுங்கள். அதை அணை விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இப்படி நாம் காட்டுவதன் மூலம் இதிலிருந்து வரக்கூடிய வாசனையானது வீட்டில் இருக்கக் கூடிய அனைத்து விதமான எதிர்மறை ஆற்றல்களையும் நீக்கி நேர்மறை ஆற்றல்களை அதிகரிக்கும். குடும்பத்தில் சண்டைகள் இருந்தாலும் மனக்கசப்புகள் இருந்தாலும் அவை அனைத்தும் நீங்கி மகிழ்ச்சியான வாழ்க்கை உண்டாகும். முடிந்த அளவிற்கு இந்த ஆராத்தியை இரவு 9 மணிக்கு மேல் வாராகி அம்மனுக்கு காட்டுவது என்பது மிகவும் சிறந்த பலனைத் தரும்.

இதையும் படிக்கலாமே: அதிர்ஷ்டம் ஏற்பட கூற வேண்டிய விநாயகர் மந்திரம்

விரதம் இருந்து பூஜை செய்து வழிபாடு செய்தாலும் விரதமே இருக்காமல் பூஜைகள் எதுவும் செய்யாமல் வழிபாடு செய்தாலும் இந்த ஒரு ஆராத்தியை முழுமனதோடு வாராகி அம்மனுக்கு காட்டுவதன் மூலம் வீட்டில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் முற்றிலும் நீங்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்