நாம் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ரூபத்தில் ஏதாவது ஒரு எதிர்மறை ஆற்றல் என்பது கண்டிப்பான முறையில் இருக்கும். அது பிறர் செய்ததாக இருந்தாலும் சரி அல்லது கண் திருஷ்டி போன்ற செயல்களாலோ அல்லது நாமே எதிர்மறையாக ஏதாவது செய்திருந்தால் அதன் பக்கவிளைவாகவும் எதிர்மறை ஆற்றல் என்பது நம்மை சுற்றி இருக்கும். அப்படிப்பட்ட எதிர்மறை ஆற்றலை நீக்குவதற்கும் நம்முடைய வீட்டில் ஏதாவது தீய சக்திகள் இருப்பின் அந்த தீய சக்திகளை விலகவும் அஷ்டமி நாளான இன்று இரவு செய்ய வேண்டிய ஒரு பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
எதிர்மறை ஆற்றல் விலக பரிகாரம்
செய்கின்ற வேலையிலோ அல்லது செய்கின்ற தொழிலிலோ முன்னேற்றத்தை பார்த்து பொறாமை படக்கூடிய நபர்களால் ஏற்படக்கூடிய எதிர்மறை ஆற்றல்களும், குடும்பத்தில் இருக்கக்கூடிய முன்னேற்றத்தை கண்டு களங்கும் நபர்களால் ஏற்படக்கூடிய கண் திருஷ்டியும், வாழ்க்கையில் முன்னேறவே கூடாது என்று பிறரால் செய்யக்கூடிய ஏவல் பில்லி சூனியம் போன்ற தீய சக்திகள் விலகுவதற்கும் கால பைரவரை நாம் வழிபாடு செய்ய வேண்டும். அப்படி வழிபாடு செய்வதோடு இந்த ஒரு எளிமையான பரிகாரத்தையும் செய்தோம் என்றால் நம் வீட்டிற்கு கால பைரவர் பாதுகாப்பு கவசமாக இருந்து அனைத்து விதமான எதிர்மறை ஆற்றல்களையும் தீய சக்திகளையும் விலக்குவார்.
இந்த பரிகாரத்தை இன்று இரவு படுக்கச் செல்வதற்கு முன் செய்ய வேண்டும். இதற்கு நமக்கு இரண்டு பொருட்கள் வேண்டும். இந்த இரண்டு பொருட்களும் கால பைரவருக்கு உகந்த பொருட்களாக கருதப்படுகின்றன. அவை தான் வெண்கடுகு மற்றும் மிளகு. ஒரு சிறிய அகல் விளக்கை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த அகல்விளக்கில் வெண்கடுகை போட்டு அதற்கு மேல் எட்டு என்ற எண்ணிக்கையில் மிளகை போட வேண்டும். இரவு படுக்க செல்வதற்கு முன்பாக இந்த அகல் விளக்கை வீட்டிற்கு வெளியே வைத்து விடுங்கள்.
காலையில் எழுந்ததும் கதவை திறப்போம் அல்லவா? அப்பொழுது இந்த அகல் விளக்கில் இருக்கக்கூடிய கடுகு மற்றும் மிளகை எடுத்து ஒரு பேப்பரில் மடித்து வைத்துக் கொள்ளுங்கள். அன்றைய தினம் நெருப்பு மூட்டி சாம்பிராணி போடுகிறோமோ அப்பொழுது அந்த கங்கில் இந்த வெண்கடுகு மற்றும் மிளகை போட்டு தூபம் காட்ட வேண்டும். பொதுவாகவே வெண்கடுகை சாம்பிராணியுடன் சேர்த்து போட்டால் வீட்டில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் விலகும் என்றும் வீட்டில் சண்டை சச்சரவுகள் எதுவும் ஏற்படாது என்றும் கூறி கேள்விப்பட்டிருக்கிறோம்.
இப்படி அஷ்டமி தினத்தில் வீட்டு நிலைவாசலுக்கு வெளியே வைத்த வெண்கடுகை எடுத்து நாம் தூபம் போடும் பொழுது வீட்டில் இருக்கக்கூடிய அனைத்து விதமான தீய சக்திகளும் எதிர்மறை ஆற்றல்களும் விலகுவதோடு கால பைரவர் நமக்கு பாதுகாப்பாக இருந்து நம்மை காப்பாற்றுவார் என்று கூறப்படுகிறது.
இதையும் படிக்கலாமே: பண வரவை அதிகரிக்கும் ஐந்து ரூபாய் வழிபாடு
எளிமையான இந்த பரிகாரத்தை முழு மனதோடு கால பைரவரை நினைத்து இன்று இரவு யாருக்கும் தெரியாமல் செய்பவர்களுக்கு கண்டிப்பான முறையில் அவர்கள் வீட்டில் இருக்கும் அனைத்து விதமான தீய சக்திகளும் எதிர்மறை ஆற்றல்களும் விலகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.