நம்முடைய வாழ்க்கையில் நமக்கு நடக்கக்கூடிய கெடுதல்கள் அனைத்திற்கும் காரணமாக திகழ்வது நம்மை சுற்றி இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் தான். ஒருவர் சந்தோஷமாக வாழ்வதும் வருத்தப்படுவதற்கும் காரணம் அவர்களை சுற்றி இருக்கக்கூடிய ஆற்றல்கள்தான் என்று நம் அனைவருக்குமே தெரியும். ஒரு சொல் வெல்லும் ஒரு சொல் கொல்லும் என்ற வாசகத்தை போல் நாம் செய்யக்கூடிய ஒரு செயலால் நமக்கு எதிர்மறை ஆற்றல் என்பது அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது நாம் செய்யக்கூடிய ஒரு செயலால் அந்த எதிர்மறை ஆற்றல்கள் நீங்கும் வாய்ப்பும் உள்ளது. அந்த வகையில் வெள்ளிக்கிழமை அன்று நாம் செய்ய வேண்டிய ஒரு தாந்திரீக பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
எதிர்மறை ஆற்றல்கள் விலக தாந்த்ரீக பரிகாரம்
நவம்பர் மாதம் 29ஆம் தேதி வெள்ளிக்கிழமை வருகிறது, அன்றைய தினத்தில் சிவராத்திரியும் சுவாதி நட்சத்திரமும் சேர்ந்து வருகிறது. இந்த சிறப்பு மிகுந்த இந்த நாளில் ராகு காலத்தில் நாம் ஒரு எளிமையான பரிகாரத்தை செய்வதன் மூலம் நம்மிடம் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தும் நீங்கும். எதிர்மறை ஆற்றல்கள் நீங்கி விட்டாலே நம் வாழ்வில் அடுத்தடுத்து நல்ல விஷயங்கள் நடக்கும். அப்படிப்பட்ட பரிகாரத்தை பற்றி இப்பொழுது பார்ப்போம்.
இந்த பரிகாரத்தை ராகு காலத்தில் செய்ய வேண்டும். இதை பூஜை அறையிலும் செய்து வைக்கலாம், நிலை வாசலிலும் செய்து வைக்கலாம். இதற்கு ஒரு சிறிய தட்டு அல்லது சிறிய கிண்ணம் வேண்டும். ஒரு எலுமிச்சம் பழத்தை நறுக்கி பாதி எலுமிச்சம் பழத்தோட சாறை அந்த கிண்ணத்தில் பிழிந்து கொள்ளுங்கள். பிறகு அந்த எலுமிச்சை பழ சாறின் மீது ஒரு ஸ்பூன் அளவு கல் உப்பை போட்டுக் கொள்ளுங்கள். அந்த கல்லுப்பிற்கு மேல் ஒன்பது என்ற எண்ணிக்கையில் மிளகை வைக்க வேண்டும்.
இந்த கிண்ணத்தை அப்படியே எடுத்துக் கொண்டு போய் பூஜை அறையில் வைக்க வேண்டும். மற்றொன்றை தயார் செய்து நிலை வாசலில் வைக்க வேண்டும். ஒன்றுதான் தயார் செய்ய முடியும் என்றால் ஏதாவது ஒரு இடத்தில் கூட வைக்கலாம். தொழில் செய்யும் இடமாக இருக்கும் பட்சத்தில் தொழில் ஸ்தாபனத்தின் வாசலில் வைக்க வேண்டும். அன்று முழுவதும் இது அப்படியே இருக்கட்டும். அன்று இரவு படுக்க செல்வதற்கு முன்பாக இதை அப்படியே எடுத்து கால் படாத இடத்தில் போட்டு விட வேண்டும்.
தொழில் செய்யும் ஸ்தாபனத்தில் வைப்பவர்களாக இருக்கும் பட்சத்தில் கடையை மூடும் நேரத்தில் இதை எடுத்து கால் படாத இடத்தில் போட்டு விட வேண்டும். இந்த முறையில் நாம் பரிகாரம் செய்வதன் மூலம் இதில் அனைத்து விதமான எதிர்மறை ஆற்றல்களும் ஈர்க்கப்பட்டு நமக்கு ஒரு நல்ல நேர்மறை ஆற்றலை தரும். நேர்மறை ஆற்றலை தருவதோடு மட்டுமல்லாமல் பண வசியத்தையும் ஏற்படுத்தும். கொடுத்த பணம் திரும்ப கிடைப்பதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும். தொழில் செய்யும் இடத்தில் செய்வதன் மூலம் பணவசியம் மற்றும் ஜன வசியம் உண்டாகி வியாபாரம் சிறப்பாக நடைபெறும்.
இதையும் படிக்கலாமே: கஷ்டங்களை நீக்கும் மகாலட்சுமி தீபம்
எதிர்மறை ஆற்றல்களை முற்றிலும் நீக்கி நல்ல சுகமான வாழ்க்கையை வாழ்வதற்கு வழி காட்டக்கூடிய இந்த எளிமையான தாந்திரீக பரிகாரத்தை முழு நம்பிக்கையுடன் வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் செய்பவர்களுக்கு அவர்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றம் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.