நீங்கள் பிறந்த தேதிக்கு, உங்களுக்கு அதிர்ஷ்டத்தை தரக்கூடிய வேர் எது? நீங்கள் பண மழையில் நனைய, இந்த ஒரு வேர், உங்கள் கையில் இருந்தால் போதும்?

astrowheel
- Advertisement -

பொதுவாகவே ஒருவர் பிறந்த தேதிக்கு ஏற்ப, அவர்களுக்கு அதிர்ஷ்டத்தை தரக்கூடிய வண்ணம், அதிர்ஷ்டத்தை தரக்கூடிய மலர், அதிர்ஷ்டத்தை தரக்கூடிய எண், மரம், என்று அதிர்ஷ்டத்தை தரக்கூடிய பல பொருட்கள் உண்டு. அந்த வரிசையில், எந்த மரத்தின் வேரை, பிறந்த தேதிக்கு ஏற்ப, உங்கள் கையில் வைத்துக் கொண்டால், உங்களுக்கு பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீரும் என்பதை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இதுதவிர, இந்த வேர் உங்கள் கையில் இருக்கும் பட்சத்தில், கண்ணுக்குத் தெரியாத எந்த ஒரு எதிர்மறை ஆற்றல் மூலமாகவும், உங்களுக்கு தோஷம் ஏற்படாது என்றும் சொல்லப்பட்டுள்ளது. நீங்கள் பிறந்த ஜாதகத்தில் ஏதாவது தோஷம் காரணமாக, சுப காரியங்கள் தள்ளிப் போனாலும், அந்த தடைகள் நிவர்த்தியாகும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

astrology

நீங்கள் பிறந்த தேதியின் எண் 1ல் இருந்து 9வரை எதுவாக இருந்தாலும் சரி, நீங்கள் பிறந்த தேதியின் கூட்டு எண் ஒன்றிலிருந்து ஒன்பது வரை எதுவாக இருந்தாலும் சரி. பின்வரும் குறிப்புகளை அறிந்து கொண்டு பயன்பெறலாம். இதேபோல் நீங்கள் எந்த தேதியில் பிறந்தவராக இருந்தாலும், அனுஷம் நட்சத்திரத்தில் அன்று மரத்திலிருந்து வேரை எடுப்பது மிகவும் நல்லது. எந்த மரத்து வேராக இருந்தாலும், அந்த வேரை, வடக்கு திசையிலிருந்து எடுக்கப்பட வேண்டும். அதாவது மரம் எந்த திசையில் இருந்தாலும் அதனுடைய வேர், வடக்குத் திசையை நோக்கி செல்லும். அந்தத் திசையை பார்த்து, வேரை எடுத்துக் கொண்டால் மிகவும் நல்லது.

- Advertisement -

நீங்கள் பிறந்த தேதியின் எண் ஒன்றாக இருந்தால், தென்னை மர வேரை எடுக்க வேண்டும். சில தென்னை மரங்களுடைய வேரானது, மண்ணிற்கு மேலேயே தெரியும். அந்த வேரை வெட்டி எடுத்துக் கொள்ளலாம். அந்த வேரை, மஞ்சள் தண்ணீரில் கழுவி, பச்சை நிறத் துணியில் கட்டி உங்கள் பர்ஸில் வைத்துக் கொண்டால் கட்டாயம் உங்களுக்கு அதிர்ஷ்டம் தான்.

coconut-tree

நீங்கள் 2ஆம் தேதியில் பிறந்தவர்களாக இருந்தால் வெட்டிவேரை, நாட்டு மருந்து கடைகளில் இருந்து வாங்கி வந்து, ஒரு நாள் முழுவதும் தண்ணீரில் போட்டு வைத்து, அதன் பின்பு அந்த வேரை எடுத்து நன்றாக உலரவைத்து, ஒரு மஞ்சள் துணியில் கட்டி உங்களுடனே வைத்துக் கொண்டால் மிகவும் நல்லது.

- Advertisement -

நீங்கள் 3ஆம் தேதியில் பிறந்தவர்களாக இருந்தால், ஆலமர விழுதை எடுத்து, ஒரு பச்சை நிற துணியில் கட்டி, உங்களுடனே வைத்துக் கொண்டால், உங்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டாகும். திருமணத் தடையும் நீங்கும்.

aala-maram

நீங்கள் 4ஆம் தேதியில் பிறந்தவர்களாக இருந்தால், கருவேல மரத்தின் வேரை எடுத்து, மஞ்சள் நீரால் கழுவி, அதன் பின்பு மஞ்சள் நிற துணியில் கட்டி, உங்களுடன் வைத்துக் கொள்ளலாம். அது உங்களுக்கு அதிர்ஷ்டத்தை தேடி தரும். அம்மன் கோவிலுக்கு அருகில் இருக்கும் கருவேல மரத்தில் இருந்து வேர் எடுத்தால் இன்னும் சிறப்பு.

- Advertisement -

நீங்கள் 5ஆம் தேதியில் பிறந்தவர்களாக இருந்தால், துளசி செடியின் வேரை எடுத்து மஞ்சள் துணியில் கட்டி உங்களுடனே வைத்துக் கொண்டால், உங்களுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும். கருந்துளசி வேர் எடுக்கக்கூடாது. சாதாரண துளசி வேரை எடுக்க வேண்டும்.

vilvam

நீங்கள் 6ம் எண்ணில் பிறந்தவர்களாக இருந்தால், உங்களால் முடிந்தால், சிவன்கோவிலில் இருக்கக்கூடிய வில்வ மரத்து வேரை எடுத்து, மஞ்சள் நிறத் துணியில் கட்டி, உங்களுடனே வைத்துக் கொள்வது, உங்களுக்கு அதிர்ஷ்டத்தை தேடி தரும். திருமணத்தடை நீங்கும். கல்வி கற்பதில் இருக்கக்கூடிய தடை நீங்கும்.

நீங்கள் 7ம் தேதியில் பிறந்தவர்களாக இருந்தால், வேப்பமரத்து வேரை எடுத்து மஞ்சள் துணியில் கட்டி, உங்கள் பர்ஸ்ஸிலேயே வைத்துக் கொள்ளலாம். முடிந்தால் அம்மன் கோவில்களில் இருக்கும் வேப்பமரத்து வரை எடுப்பது இன்னும் சிறப்பு.

vanni tree

நீங்கள் 8ம் தேதியில் பிறந்தவர்கள் ஆக இருந்தால், வன்னிமரத்து வேரை எடுத்து, மஞ்சள் துணியில் கட்டி, உங்களுடனே வைத்துக் கொண்டால் உங்களுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும்.

நீங்கள் 9ம் எண்ணில் பிறந்தவர்களாக இருந்தால், முருகன் கோவிலில் இருக்கும் செவ்வரளி பூ, மரத்தின் வேரை எடுத்து உங்களுடன் வைத்துக் கொள்வது அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும். அந்த வேரை மஞ்சள் துணியில் கட்டி உங்கள் பஸ்ஸில் வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் இந்த வேரை எடுக்கும்போது, கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. வேர் எடுக்கும் சமயத்தில் உங்களுக்கு காயம் ஏற்படுவதற்கு கூட வாய்ப்பு உண்டு.

arali

இவ்வாறாக நீங்கள் எடுத்து வந்த வேரை, மஞ்சள் துணியில் கட்டி, உங்களுடனேயும் வைத்துக்கொள்ளலாம். அல்லது உங்கள் வீட்டில், நீங்கள் பயன்படுத்தும் பொருள்களோடு இந்த வேரை வைக்கலாம். அதாவது பீரோவில், துணி வைக்கும் இடத்திலும் இந்த வேரை வைத்தால், உங்களுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும். கட்டாயம் பர்ஸ்ஸில்தான் வைக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. ஏதாவது சுபகாரியங்களுக்கு செல்லும்போது மட்டும், இந்த வேரை எடுத்து செல்லுங்கள். அல்லது ஏதாவது காண்ட்ராக்ட் உங்கள் பக்கம் கையெழுத்தாக வேண்டும் என்றால், இதை உங்களுடன் எடுத்துச் செல்லலாம். பர்ஸ்ஸிலோ, பாக்கெட்டிலோ வைக்க முடியவில்லை என்றாலும், நீங்கள் எடுத்துச் செல்லும் பையில் கூட, இந்த வேரை பத்திரப்படுத்தி எடுத்துச் செல்லலாம் தவறில்லை.

இதையும் படிக்கலாமே
சமையலுக்கு உபயோகிக்கும் ‘பேக்கிங் சோடா’ பற்றி உங்களுக்கு தெரியாத வியக்க வைக்கும் உண்மைகள் இதோ! தெரிந்தால் அசந்து போவீர்கள்.

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Pirantha Naal Ver Palangal. Vanni maram Tamil. Maram Veer Astrology. Pirantha Date Palangal in Tamil

- Advertisement -