தினம்தினம் அதிர்ஷ்டக் காற்று உங்கள் பக்கம் வீச, காலையில் கண்விழித்ததும் முதலில் நீங்கள் இவரைத்தான் பார்க்க வேண்டும். இவர் முகத்தில் விழித்தால் உங்களுக்கு தோல்வியே கிடையாது.

தினம் தினம் நமக்கு ஏதாவது ஒரு நல்ல விஷயம் நடந்து கொண்டே இருக்க வேண்டும். அதிர்ஷ்டக் காற்று நம் பக்கம் வீச வேண்டும். தோல்வி நம் பக்கமே வரக்கூடாது. வெற்றியை நமக்கு மட்டுமே சொந்தமாக்கிக் கொள்ள வேண்டுமென்றால், தினமும் அதிர்ஷ்டமான அழகான ஒருவருடைய முகத்தில் நாம் கண் விழிக்க வேண்டும். அப்படி என்றால் யார் முகத்தில் கண் விழிப்பது? இதற்கான விடையை கட்டாயம் நாம் தெரிந்து கொள்வோம். அதற்கு முன்பு ஒரு சில நல்ல விஷயங்களையும் இன்று நாம் தெரிந்து கொள்வோம்.

night-sleep

காலையில் எழுந்து கணவர் மங்களகரமான தன்னுடைய மனைவி குழந்தைகளின் முகத்தில் விழிப்பது அவருக்கு நன்மையை கொடுக்கும். வீட்டில் மனைவி மங்களகரமாக கணவனை எழுப்பும் போது, புன்னகையோடு எழுப்பினாலே போதும். அந்த கணவருக்கு அன்றைய தினம் அதிர்ஷ்டமான நாளாக அமைந்துவிடும்.

இதேபோல் கணவர், கண் விழித்தவுடன் மனைவியிடம் சில அன்பான பாசமான நல்ல வார்த்தைகளைப் பேச வேண்டும். கண் விழிக்கும் போதே மனைவியை கரித்து கொட்ட கூடாது. கடுமையான வார்த்தைகளை பேசக்கூடாது என்பதையும் கணவன்மார்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இனிமையான வார்த்தைகளை பேசி புன்னகையோடு ஒரு நாளை நாம் துவங்கினால் அந்த நாள் நமக்கு நிச்சயமாக அதிர்ஷ்டகரமான நாளாகத்தான் அமையும்.

sun1

இதைத் தவிர உள்ளங்கை, மகாலட்சுமியின் முகம், சிரித்த குழந்தையின் முகம், இயற்கையான காட்சிகள், இப்படிப்பட்ட மனதிற்கு குளிர்ச்சியைத் தரும் காட்சிகளை நாம் கண்டாலும் அன்றைய நாள் நமக்கு நல்ல நாளாக அமையும் அந்த வரிசையில், சூரிய பகவானின் படம் இப்படி கிடைத்தால் அதாவது சூரிய கதிர்கள்லோடு முகம் அமைத்து, வட்ட வடிவத்தில் சூரிய கடவுளின் உருவம் பொரித்த காட்சி சிறியதாக கீச்சைன் போலவும் உங்களுக்கு இது கடைகளில் கிடைக்கும்.

அந்த சூரிய பகவானின் முகத்தில் தினம்தோறும் காலையில் விழித்தால் உங்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டாகும் என்று சொல்லப்பட்டுள்ளது. கண் விழித்த உடன் இந்த சூரிய பகவானை நீங்கள் முதலில் பார்த்தால் அன்றைய நாள் உங்களுக்கு நிச்சயமாக வெற்றியின் மேல் வெற்றி குவியும். இதோடு சேர்த்து தினமும் காலையில் அலங்காரத்துடன் இருக்கும் கஜலட்சுமியின் முகத்தில் கண் விழித்தால் அன்று நமக்கு பண வரவு அதிகமாக ஏற்படும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

gajalakshmi

குறிப்பாக நிலை வாசல் படிக்கு மேலே, வீட்டிற்கு உள்பக்கம், கஜலட்சுமியின் திருவுருவப்படத்தை வீட்டிற்கு உள்ளே பார்த்தவாறு மாட்டி வைக்க வேண்டும். நீங்கள் வீட்டை விட்டு வெளியே கிளம்பும்போது அந்த கஜலட்சுமியை பார்த்து மனதார வேண்டிக் கொண்டு, அதன் பின்பு வீட்டில் இருந்து வெளியே கிளம்பினால் உங்களுக்கு எந்தவிதமான பண நஷ்டமும் அன்றைய தினத்தில் ஏற்படுவதற்கு வாய்ப்பே இல்லை. முயற்சி செய்து பாருங்கள் நல்லதே நடக்கும்.