இந்த 1 பொருளை மட்டும், உங்களிடமிருந்து வேறு யாருக்கும் பரிசுப் பொருளாக கொடுக்கவே கூடாது. உங்களுடைய அதிர்ஷ்டம், உங்கள் கையாலேயே உங்களை விட்டு செல்ல இதுதான் முதல் காரணம்.

shivan

நம்முடைய அதிர்ஷ்டமும் நம்முடைய நல்ல நேரமும், நம்மை விட்டு வெளியே செல்லக் கூடாது என்று தான் நம்மில் பல பேரும் நினைப்போம். ஆனால் ஏதோ ஒரு தருணத்தில் ஏதோ ஒரு சூழ்நிலையில் நம்முடைய அதிர்ஷ்டம் நிச்சயமாக மற்றவருக்கு செல்லத்தான் செய்யும். காரணம் ஒருவருடைய தோல்வியில்தான், மற்றவருடைய வெற்றி இருக்கிறது என்று சொல்லுவார்கள். ஒருவர் துரதிர்ஷ்டசாலியாளாக மாறும் போதுதான், அடுத்தவர்களுக்கு அந்த அதிர்ஷ்டம் செல்லும். இருப்பினும் நம் அதிர்ஷ்டத்தை பாதுகாக்க வேண்டியது நம்முடைய கடமை. நம்முடைய அதிர்ஷ்டத்தை நம் கையாலேயே எக்காரணத்தைக் கொண்டும் அடுத்தவர்களுக்கு தூக்கி கொடுத்து விடக்கூடாது.

blessings aasirvadham

இதற்காக அடுத்தவர்கள் நன்றாக வாழ கூடாது என்று கூறுவதாக அர்த்தம் இல்லை. முதலில் நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் அல்லவா? அதற்காக தான். சரி, இப்போது பதிவுக்கு செல்வோம். முதலில் உங்களுக்கு பரிசுப் பொருளாக வந்த எந்த பொருளாக இருந்தாலும் சரி, அடுத்தவர்கள் ஆசிர்வாதம் செய்து உங்களுக்கு கொடுத்த, எந்த ஒரு பொருளாக இருந்தாலும் சரி, அதை நீங்கள் தான் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உங்கள் வீட்டு குடும்ப உறுப்பினர்கள் தான் அதை பயன்படுத்த வேண்டுமே தவிர, உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அல்லாத மற்றவர்களுக்கு அதை பரிசு பொருளாகவோ அல்லது தானமாகவோ தூக்கி கொடுத்து விடக்கூடாது.

உங்களுக்காக ஆசீர்வாதம் செய்து கொடுக்கப்படும் பணத்தை கூட, நீங்கள் சேமித்து வைத்து ஒரு பொருளாக வாங்கி அதை நீங்கள் பயன்படுத்திக் கொண்டால், உங்களுக்கு நிச்சயமாக அதிர்ஷ்டம் உண்டாகும். அந்த பணத்தை அனாவசியமாக செலவு செய்யும் பட்சத்தில் உங்களுடைய அதிர்ஷ்டம் கரைந்து போவதற்கு வாய்ப்பு உள்ளது.

nandhi

நாம் முழுமையாக அதிர்ஷ்டசாலியாக எப்போது மாறுவோம் தெரியுமா? அதிர்ஷ்டம் கொடுக்கக்கூடிய பொருளை, நம் கையால் வாங்கி அடுத்தவர்களுக்கு அன்பளிப்பு கொடுக்கும் போது தான்! அடுத்தவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணி, நாம் ஒரு பொருளை வாங்கி அடுத்தவர்களுக்கு கொடுத்து, அவர்களை வாழ வைத்தால், அந்த நல்ல எண்ணம், நம்மை அதிர்ஷ்டசாலியாக மாற்றிவிடும்.

- Advertisement -

நீங்க யாருக்காவது ஏதேனும் பொருளை வாங்கி அன்பளிப்பாக கொடுக்க வேண்டும் என்று நினைத்தால், அதிலும் ஆன்மீக ரீதியான பொருட்களை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தால், நந்தீஸ்வரரை பரிசுப் பொருளாக கொடுங்கள். சிவனின் முன்பு இருக்கிறார் அல்லவா? நந்தி! இந்த நந்தியை பரிசுப் பொருளாக, பெறுபவர்களுடைய வாழ்வு இனிமையாக இருக்கும். இந்த நந்தியை பரிசுப் பொருளாக கொடுப்பவர்களுடைய வாழ்வும் இனிமையாக இருக்கும்.

nandhi

குறிப்பிட்டு சொல்லப்போனால் எவர் ஒருவர் வீட்டிற்கு நந்தி பகவான் அன்பளிப்பாக வருகின்றரோ, அவர்களுடைய வீட்டில் செல்வ வளம் நிலைத்திருக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. அவர்களுடைய வீட்டிற்கு அதிர்ஷ்டம் அடித்துக் கொண்டு ஓடி வரும். அவர்களுடைய வாழ்க்கையில் நினைத்துப் பார்க்க முடியாத நன்மைகள் நடக்குமாம்.

nandhi

நமக்கு யாராவது நந்தீஸ்வரரை அன்பளிப்பாக கொடுக்க மாட்டார்களா என்று யோசிக்கிறீர்களா? அது உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் நிச்சயமாக நடக்கும். ஆனால் இந்த பதிவை படித்த பின்பு, நீங்கள் ஒரு குடும்பத்தை வாழ வைக்க, ஒரு குடும்பத்திற்கான அதிர்ஷ்டத்தை கொடுக்க, நந்தீஸ்வரரை உங்களுக்கு விருப்பமானவர்களுக்கு பரிசாக கொடுங்கள். சிவனும் நந்தியும் சேர்ந்தும் பரிசு கொடுக்கலாம். வெறும் நந்தியை மட்டும் கூட பரிசுப் பொருளாக கொடுக்கலாம். அதில் எந்த ஒரு தவறும் கிடையாது. நிச்சயமாக உங்களுக்கு நன்மையே நடக்கும் என்ற கருத்துடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.