அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொண்டு வந்து தரும் சந்தனம். தினமும் சந்தனத்தை மட்டும் நெற்றியில் இப்படி வைத்துக் கொண்டால் துரதிஷ்டம் உங்களை விட்டு தூர விலகி செல்லும்.

sandhanam
- Advertisement -

என்னதான் திறமை இருந்தாலும், அதை வெளிக்கொண்டு வருவதற்கு வாய்ப்பு என்பது ஒரு மனிதனுக்கு அமைய வேண்டும். வாய்ப்பைக் கொண்டு வந்து சேர்க்கக் கூடிய சக்தி இந்த அதிர்ஷ்டத்திற்கு தான் உள்ளது. நிறைய திறமை இருந்தும் அதிர்ஷ்டம் இல்லாமல், வாய்ப்பு கிடைக்காத ஒரே காரணத்தால் நிறைய பேர் என்று வாழ்க்கையில் முன்னேறாமலேயே இருக்கிறார்கள். அதிர்ஷ்ட காற்றை நம் பக்கம் வீச வைக்க ஒரு சில சின்ன சின்ன குறிப்புகளை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

அதிர்ஷ்டத்திற்கு பிடிக்காத ஒரு விஷயம் என்ன தெரியுமா. அசுத்தம். துர்நாற்றமும் அசுத்தமும் இருக்கக்கூடிய இடத்தில் நிச்சயமாக அதிர்ஷ்டம் வராது. அதற்காக வியர்வை வழிய வழிய வேலை செய்பவர்களை துர்நாற்றம் வீசுபவர்கள், அசுத்தமானவர்கள் என்று சொல்லிவிட முடியாது. வியர்வை வாசம் நாற்றம் அல்ல. வியர்வை சிந்தி வேலை செய்யும் மனிதர்கள் அந்த கடவுளுக்கு நிகரானவர்கள்.

- Advertisement -

துர்நாற்றம் என்பது சில இடங்களில் நமக்கு வீசும். அந்த நாற்றம் எதனால் அடிக்கிறது என்பதே நமக்கு தெரியாது. சுத்தபத்தமாக குளித்து இருப்பவர்கள் மேல் கூட இந்த துர்நாற்றம் ஒரு சில சமயங்களில் வீசும். சுத்த பத்தமாக இருக்கும் வீட்டில் கூட இந்த துர்நாற்றம் சில சமயத்தில் வீசும். இது எதனால் தெரியுமா. கெட்ட ஆற்றல் அவர்கள் உடம்பில் தங்கி இருப்பதால் தான். கெட்ட சக்தி அவர்களுடைய உடம்பில் வீட்டில் தங்கி இருப்பதால்தான்.

நம்மை சுற்றி இருக்கும் கெடுதலையும் நம் உடம்பில் இருக்கும் கெடுதலையும் நம்மை விட்டு விரட்டி அடித்தால் தான் நமக்கு அதிர்ஷ்டம் பிறக்கும். அதற்கு முதல் பரிகாரமாக நம்முடைய உடம்பில் மேல் நல்ல வாசத்தை வீச வைக்க வேண்டும். அதற்கு மிக மிக எளிமையான வழி சந்தனம் இட்டுக் கொள்வது. சந்தனம் வைத்திருப்பவர்கள் அருகில் சென்றாலே நமக்குத் தெரியும் அவர்கள் மீது ஒரு நல்ல வாசமும் பாசிட்டிவ் வைப்ரேஷனும் இருக்கும். சந்தனத்தில் பன்னீர் ஊற்றி கலந்து அந்த சந்தனத்தை தினமும் நெற்றியில் வைத்து வாருங்கள் அதிர்ஷ்டம் ஏதாவது ஒரு ரூபத்தில் உங்களுக்கு அடித்துக் கொண்டே இருக்கும். இந்த சந்தன வாசத்திற்கு எந்த ஒரு கெட்ட ஆற்றலும் நம்மை நெருங்க முடியாது.

- Advertisement -

சந்தனத்தை நெற்றியில் வைத்தால் அதிர்ஷ்டசாலி ஆகி விடலாமா என்று மட்டும் அலட்சியமாக நினைக்காதீங்க. இது ஒரு பெரிய நல்ல ஆற்றலை உங்களுக்குள் கொடுத்து விடும். சபரிமலைக்கு செல்பவர்கள் சந்தனத்தை நெற்றியில் வைத்துக் கொண்டு வந்தால் அவர்களைப் பார்க்கும்போது எத்தனை வசீகரம் இருக்கும். அப்படியே பார்க்கும்போதே கையெடுத்து கும்பிட எண்ணம் நமக்கு வரும் அல்லவா. அதே தான் நமக்கும். சந்தனத்தை இட்டுக் கொண்டால் அந்த தெய்வ கடாட்சம் நம் இடத்தில் வந்துவிடும்.

சந்தனத்துக்கு பதிலாக வாசனை மிகுந்த விபூதி, குங்குமம், ஜவ்வாது, அக்தர் இப்படி எந்தெந்த பொருட்கள் வாசனையை கொடுக்குமோ அதை எல்லாம் நாம் தினமும் பயன்படுத்தி வரலாம். நெற்றியில் இட்டு வரலாம் உடம்பு முழுவதும் பூசியும் வரலாம். எவ்வளவு நாம் நறுமணமோடு இருக்கின்றோமோ, அவ்வளவு அதிர்ஷ்டம் நம்மை தேடி வரும். துரதிஷ்டம் நம்மை விட்டு விலகி செல்லும். இது நமக்கு மட்டுமல்ல நம் வீட்டிற்கும் பொருந்தும். எப்போதும் வாசனை நிறைந்த சாம்பிராணி தூபம் நம் வீட்டிற்குள் நிறைவான நறுமணத்தை கொடுத்தால் வீட்டிலும் அதிர்ஷ்டம் நிலையாக தங்கும். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன இந்த சின்ன பரிகாரத்தை முயற்சி செய்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -