உங்களுடைய அதிர்ஷ்டமான பொருட்களை வாங்க சிறந்த ஹோரை எது தெரியுமா? இந்த ஹோரையில் மட்டும் இந்த பொருளை வாங்கினால் நீங்களும் அதிர்ஷ்டசாலி தான்!

sukran-cash

ஒரு சில பொருட்கள் எல்லாம் நமக்கு அதிர்ஷ்டமாக இருக்கும். உதாரணத்திற்கு சிலர் தாங்கள் பயன்படுத்தும் முக்கிய பொருட்களை யாருக்கும் கொடுக்க மாட்டார்கள். பொக்கிஷம் போல பத்திரமாக சேகரித்து வைத்துக் கொள்வார்கள். அதனை அதிர்ஷ்ட பொருளாகவே அவர்கள் பார்ப்பார்கள். அப்படி அதிர்ஷ்டமாக இருக்கும் பொருட்கள் இந்த ஹோரை பார்த்து வாங்கும் பொழுது மேலும் பன்மடங்கு அதிர்ஷ்டம் பெருகும். அது என்ன ஹோரை? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

ten-rupees

ஒரு சிலர் தங்களுடைய பொழுது போக்கிற்காக சில ரூபாய் நோட்டுகளை சேகரித்து வைப்பது வழக்கமாக வைத்திருப்பார்கள். வித்தியாசமான நாட்டினுடைய ரூபாய் நோட்டுகள் அல்லது புத்தம் புதிய அச்சடிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகள் அழகாக மடித்து அதிர்ஷ்டமாக வைத்துக் கொண்டிருப்பார்கள். இதனை யாருக்காகவும், எதுக்காகவும் மற்றவர்களிடம் கொடுக்க மாட்டார்கள்.

ஒரு சிலர் தாங்கள் பயன்படுத்திய பேனாவை பொக்கிஷமாக பாதுகாத்து வருவார்கள். அதனை ஒரு சென்டிமென்ட் பொருளாகவும் பார்ப்பார்கள். அத்தகைய பொருட்களை யாருக்கும் எளிதாக கொடுத்து விடமாட்டார்கள். இது போல இருக்கும் பொருட்களை நீங்கள் வாங்கும் பொழுது இந்த ஹோரை பார்த்து வாங்கினால் மேலும் மேலும் அதிர்ஷ்டம் பெருகும் என்கிறது ஜோதிடம் சாஸ்திரம்.

green pen

அது போல ஒரு சிலரிடமிருந்து சில பொருட்களை நாம் கேட்டு வாங்கிக் கொள்வோம். அந்த பொருட்கள் நமக்கு கடைசி வரை நம்முடன் இருக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கும். உதாரணத்துக்கு ரூபாய் நோட்டையே கூட எடுத்துக் கொள்ளலாம். அவர்களிடமிருந்து வாங்கும் அந்த ரூபாய் நோட்டு நமக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும்.

- Advertisement -

அது போல ஒருவருக்கு பரிசுப் பொருளாக வாங்கி கொடுக்கும் தங்க நகைகள் அல்லது வேறு சில முக்கியமான பொருட்கள் கூட அதிர்ஷ்டம் மிக்கதாக மாற இந்த ஹோரையில் அதனை வாங்கி கொள்ளலாம். பொதுவாகவே ஹோரைப் பார்த்து எந்த பொருளை வாங்கினாலும் அந்த பொருளுக்கு ஆயுசு அதிகம். எனவே ஹோரை பார்த்து உங்களுடைய அதிர்ஷ்ட பொருட்களை வாங்கும் பொழுது அதனுடைய அதிர்ஷ்டம் பன்மடங்கு பெருகும்.

salt1

குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் கல் உப்பு வாங்கும் பொழுது அதிர்ஷ்டம் வீடு தேடி வரும் என்று அனைவருக்கும் தெரியும். மகாலட்சுமியே வீடு தேடி வருவாள் என்பது ஐதீகம். இது போல நீங்கள் அதிர்ஷ்டத்திற்கு அல்லது உங்களுக்கு பிடித்தமான பொருளை வாங்கும் பொழுது ஹோரை பார்த்து வாங்குவது சிறப்பான பலன்களை தரும். பொதுவாகவே ஹோரையில் சுக்கிரன் ஓரை, புதன் ஓரை மற்றும் சூரிய ஹோரை நல்ல பலன்களை அதிகமாகக் கொடுக்கும் ஹோரைகள் ஆகும்.

sukran

சுக்கிர ஹோரையில் நட்சத்திர குறியீடு இருக்கும். ஹோரையை உங்கள் வீடு காலண்டரின் பின்னால் பார்த்தால் தெரியும். அந்த ஹோரையில் நீங்கள் அதிர்ஷ்டம் மிக்க பொருட்களை வாங்கும் பொழுது கூடுதல் பலன்கள் கிடைக்கும் என்பது ஜோதிட ரகசியம் ஆகும். இந்த சூட்சும ரகசியத்தை தெரிந்து கொண்டவர்கள் பெரும் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள். உங்களுக்கு விருப்பமான பொருட்கள் அல்லது எதுவாக இருந்தாலும் அதனை சுக்கிர ஓரையில் வாங்குவது சிறப்பான பலன்களை தரும். அதே அளவிற்கு ஈடு இணையில்லாத ஹோரைகள் புதன் மற்றும் சூரிய ஓரை ஆகும். இந்த ஹோரைகளிலும் நீங்கள் நல்ல விஷயங்களை செய்வதும், பிடித்த பொருட்களை வாங்குவதும் கூடுதல் பலன்களை கொடுக்கும்.