கர்ம வினைகளால் சிலர் மிகவும் துரதிஷ்டசாலிகளாக இருப்பார்கள். இவர்கள் தொட்டதெல்லாம் துலங்காது. எதை செய்ய நினைத்தாலும், அது அதற்கு நேர்மாறாக தான் நடக்கும். ஆசையாய் இவர்கள் கையில் செடியை வைத்தால் கூட அது முளைக்காது. இவ்வளவு துரதிர்ஷ்டசாலியாக ஒருவர் இருப்பதற்கு என்ன காரணம்? இவர்களும் அதிர்ஷ்டசாலியாக மாற என்ன செய்யலாம்? மருதாணி பூ அதிர்ஷ்டம் தரும் பூவா? என்னும் ஆன்மீகம் சார்ந்த வினாக்களுக்கு விடை காண்போம் வாருங்கள்.
மருதாணி செடியை ஒருவர் நட்டு வைத்து, அது முளைக்கவே இல்லை என்றால், இவர்கள் மிகுந்த துரதிர்ஷ்டசாலிகள் எனலாம். மருதாணி செடியில் பூக்கும் பூக்கள் முதல் வேர், பட்டை, இலை என்று எல்லாமே மருத்துவ பயன்கள் கொண்டது. மருதாணி பெண்களுக்கு அதிக நன்மைகளை சேர்க்கக் கூடிய அதி அற்புதமான மூலிகை செடி ஆகும். உள்ளங்கையில் மருதாணி வைத்துக் கொண்டால், உஷ்ணம் தணிந்து உடல் குளிர்ச்சி அடையும், இதனால் பெண்களுக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நிறைய நன்மைகள் உண்டாகும்.
பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களும் மருதாணி வைக்கலாம். உஷ்ண சரீரம் கொண்டவர்கள் மருதாணியை இட்டுக் கொண்டால் பிணி தீரும். மருதாணி மகாலட்சுமியின் அம்சம். அது போல மருதாணி பூ சீதா தேவியின் அம்சம் என்று கருதப்படுகிறது. தாய் சீதா பிராட்டியார் ஒருமுறை தன் கஷ்டங்களை மருதாணி செடியிடம் புலம்பிக் கொண்டிருந்தார். மருதாணி பூ அதை ஆசீர்வாதமாக எடுத்துக் கொண்டு அசையாமல் கேட்டுக் கொண்டிருந்தது.
தன் புலம்பலை கேட்பதற்கு இவ்வளவு ஆர்வமுடன் இந்த பூ இருக்கிறதே என்று சீதா தேவி கொஞ்சம் சங்கடப்பட்டு விட்டார். அதனால் நீ யார் கையில் இருந்தாலும், அவர்கள் அதிர்ஷ்டசாலியாகி விடுவார்கள் என்று வரம் கொடுத்துவிட்டார். சீதாதேவியின் அம்சம் முழுவதுமாக பொருந்திய இந்த மருதாணியின் பூக்கள் ரொம்பவும் விசேஷமானது. மருதாணி பூவை கொண்டு தலையணை தயாரித்து தூங்கினால் நிம்மதியாக தூக்கம் வரும். துஷ்ட தேவதைகள் நம்மை அண்டாது, கெட்ட கனவுகளும் நம்மை துரத்தாது.
இந்த மருதாணி செடியை எப்போதும் தோல்வியையும், அவமானங்களையும் சந்தித்துக் கொண்டிருக்கும் துரதிர்ஷ்டசாலியாக இருக்கும் நீங்கள் ஒரு மஞ்சள் துணியில் மூட்டையாக கட்டி, அதன் உடன் ஒரு ரூபாயை வைத்து முடிந்து கொள்ளுங்கள். பின்னர் இந்த முடிப்பை உங்கள் கைப்பையில் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் அதிகமாக எந்த இடத்தில் இருக்கிறீர்களோ, அந்த இடத்தில் இதை வைத்துக் கொள்ளுங்கள்.
இதையும் படிக்கலாமே:
கொண்டைக்கடலை சாலட் ரெசிபி
தொழில், வியாபாரம் போன்றவற்றில் இருப்பவர்கள் கல்லாப்பெட்டியில் இதை வைக்கலாம். அலுவலகத்தில் இருப்பவர்கள் டேபிள் டிராவில் வைக்கலாம். பெண்கள் கை பை, மணி பர்ஸ் போன்றவற்றில் வைக்கலாம். ஆண்களும் பர்ஸில் வைக்கலாம். பூஜை அறையிலும் பூஜை செய்பவர்கள் வைக்கலாம். இப்படி மருதாணி பூவை நம்முடன் வைத்துக் கொண்டால், நம்மிடம் இருக்கக் கூடிய துரதிர்ஷ்டங்கள் அனைத்தும் விட்டு ஓடிவிடும். நமக்கு வர வேண்டிய அதிர்ஷ்டங்கள் நம்மை தேடி வரும். இனி யாரும் உங்களை அவமானப்படுத்தவோ, கேலி செய்யவோ மாட்டார்கள். சனிக்கிழமையில் ராமரை வழிபட்டு இந்த முடிப்பை தயார் செய்யுங்கள். பின் எப்போதும் உங்களுடன் வைத்திருங்கள். காய்ந்த பிறகும் இதன் பலன் அப்படியே இருக்கும். பூஜை செய்யும் பொழுது பூஜை அறையில் வைத்து கற்பூர ஆரத்தி காண்பியுங்கள் போதும், அதிர்ஷ்ட மழை பொழிந்து உங்களை மகிழ்விக்கும்.