கோடீஸ்வர யோகத்தை அள்ளி தரும் பிரதோஷ நேர மந்திரம்

lingam manthiram
- Advertisement -

சிவ வழிபாடுகளில் முக்கியமானது இந்த பிரதோஷ வழிபாடு. இதிகாசங்கள், புராணங்களில் பிரதோஷம் தோன்றியதற்கான காரணங்கள் பலவாக உள்ளது. நந்தி தேவர் சிவபெருமானின் திருநடனத்தை காண ஆசைப்பட்டதாகவும் சிவபெருமானும் பார்வதி தேவியாருடன் ஆனந்த தாண்டவம் ஆடும் அந்த நேரம் தான் பிரதோஷ காலம். ஆகையால் தான் இந்த நேரத்தில் நந்தி பகவாருக்கும் விசேஷ அபிஷேகங்கள் நடைபெறுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இன்னொரு புறம் அசுரர்கள் பாற்கடலை கடைந்த போது அதிலிருந்து பல தேவ பொருட்களும், ஆலகால விஷமும் வந்தது. அந்த விஷயத்தை சிவபெருமான் உட்கொண்டுதாகவும், அந்த விஷம் அவருடைய உடலில் பரவாமல் இருக்க பார்வதி தேவியார் தன் கையால் தடுத்தார். அந்த விஷமானது சிவபெருமானின் தொண்டையிலே தங்கி விட்டது இதனால் அவருக்கு நீலகண்டன் என்ற பெயரே வந்தது. இந்த நிகழ்வு நடந்த நாளை பிரதோஷ நாளாக அனுஷ்டிக்கப்படுகிறது.

- Advertisement -

பிரதோஷ வழிபாடு செய்பவர்கள் அதிகாலையில் எழுந்து குளித்து முடித்த பிறகு சிவாலயம் சென்று சிவனை வழிபட்ட பிறகு அன்று நாள் முழுவதும் உண்ணா விரதம் இருப்பார்கள். அதன் பிறகு மாலை பிரதோஷ காலமான நான்கு முப்பதிலிருந்து ஆறு மணி வரையிலான நேரத்தில் சிவாலயம் சென்று அவருக்கான அபிஷேக ஆராதனைகளில் கலந்து கொண்டு சிவபெருமானின் அருளை பெற வேண்டும். இந்த பிரதோஷ காலத்தில் எம்பெருமான் சிவனை நினைத்து நாம் சொல்லப்படும் ஒவ்வொரு மந்திரமும் பல வகையில் நமக்கு புண்ணியத்தை சேர்க்கும்.

நம்முடைய பாவங்கள் அனைத்தையும் தீர்த்துக் கொள்ள இந்த பிரதோஷ கால வழிபாடை போல சிறந்த ஒரு தீர்வு வேறு இல்லை என்றே சொல்லலாம். அப்படியான இந்த நேரத்தில் நாம் சொல்லப்படும் ஒரு மந்திரம் நம்முடைய வாழ்க்கையில் செல்வ நிலையை பல மடங்கு உயர்த்தும் என்று சொல்லப்படுகிறது. அந்த மந்திரத்தை இப்பொழுது நாம் தெரிந்து ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

ஓம் சிவ சிவ சிவ சிவாய நம ஓம்
என்ற இந்த மந்திரத்தை பிரதோஷ காலத்தில் 108 முறை சொல்ல வேண்டும். இதை சிவாலயங்களில் அமர்ந்து சொல்லும் பொழுது இதற்கான பலன் அதிகம் முடியாதவர்கள் இந்த நேரத்தில் வீட்டில் தீபம் ஏற்றி வைத்துவிட்டு சொல்லலாம். வேலைக்கு செல்பவர்கள் எங்களால் இந்த நேரத்தில் சொல்ல முடியாத என்பவர்கள் இன்றைய நாளில் உங்களுக்கு எப்பொழுது நேரம் கிடைக்கிறதோ அப்பொழுது சொல்லுங்கள்.

இதையும் படிக்கலாமே: வாஸ்து தோஷம் நீங்கி செல்வ சம்பத்துகள் பெற உதவும் குடுவை.

பிரதோஷ காலத்தில் இந்த மந்திரத்தை சொல்லும் பொழுது அதற்கான கூடுதல் பலனை பெறலாம். பிரதோஷ வழிபாட்டை தவறாமல் கடைப்பிடிப்பவர்கள் அந்த வழிபாட்டுடன் சேர்த்து இந்த மந்திரத்தையும் உச்சரித்து நம்முடைய வாழ்க்கையில் உள்ள வறுமை நிலையை நீக்கி செல்வநிலையை உயர்த்திக் கொள்ள வழி தேடி கொள்ளலாம் என்ற இந்த தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -