- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசனிக்கிழமை அதிசக்தி வாய்ந்த சனி பகவான் வழிபாடு

சனிக்கிழமை அதிசக்தி வாய்ந்த சனி பகவான் வழிபாடு

- Advertisement -

அட, இந்த சனி பகவான் பெயரை கேட்டாலே எல்லோருக்கும் பயம் வந்து விடுகிறது. இவர் ஒரு நீதிமான் என்பது பிறகு தான் ஞாபகத்திற்கு வருகிறது. ஒருவர் செய்யும் கெட்டதை மறக்காமல் இருக்கும் நாம், அவர்கள் செய்யும் நல்லதை மட்டும் சீக்கிரம் மறந்து விடுகின்றோம். மனிதர்களுக்கே உண்டான இயல்பு போல அது. நீங்க சனிபகவானை பார்த்து பயப்படவே பயப்படாதீங்க. சனிக்கிழமை அன்று பின் சொல்லக்கூடிய இந்த பரிகாரத்தை ஒருமுறை செய்யுங்கள்.‌ பலகாலம் உங்களுக்கு சனிபகவானின் ஆசிர்வாதம் பரிபூரணமாக கிடைக்கும்.

அது சக்தி வாய்ந்த சனி பகவான் வழிபாடு

சனிக்கிழமை வீட்டு பக்கத்தில், நவகிரகம் சன்னிதானம் இருக்கக்கூடிய கோவிலுக்கு செல்ல வேண்டும். வழக்கம்போல அந்த கோவிலின் மூலவரை வணங்கிவிட்டு, பிறகு நவகிரக சன்னிதானத்தில் இருக்கும் சனி பகவானுக்கு இரண்டு நல்லெண்ணெய் தீபங்கள் ஏற்றி வைத்துவிட்டு சனி பகவானை வணங்க வேண்டும்.

- Advertisement -

சனி பகவானுக்கு நேர் எதிராக தலைநிமிர்ந்து நின்று கர்வத்தோடு, சனிபகவானை என்றுமே வணங்கக்கூடாது. சனி பகவானுக்கு பக்கவாட்டில் நின்று தலை வணங்கி இரு கைகளை கூப்பி, பணிவோடு சாமி கும்பிட்டு விட்டு, சனிபகவான் சன்னிதானத்தை 9 முறை வலம் வந்து பிறகு கோவிலில் நமஸ்காரம் செய்து கோவிலில் சிறிது நேரம் அமர்ந்து வீடு திரும்ப வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி சனி பகவானுக்கு சனிக்கிழமை அன்று நல்லெண்ணெய் தீபம் போட்டு விட்டு கோவிலில் இருந்து வீடு திரும்பும் போது, நீங்கள் போட்டுக் கொண்டு சென்ற காலணிகளை அந்த கோவிலிலேயே விட்டுவிட்டு வரவேண்டும். திரும்பி பார்க்காமல் வீட்டிற்கு வந்து விட வேண்டும். இப்படி செய்தால் சனிபகவான் தோஷங்கள் உங்களை விட்டு விலகி சனிபகவானின் பரிபூரண ஆசி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

கொஞ்சம் பழைய செருப்பாக காலில் போட்டுக் கொண்டு போய் இதுபோல சனிக்கிழமை ஒரு கோவிலில் வழிபாட்டை மேற்கொண்டு, அந்த கோவிலிலேயே அந்த செருப்பை விட்டு விட்டு வரலாம். ஒரு முக்கியமான விஷயம். இதுபோல கோவிலுக்கு சென்று சனி பகவானுக்கு விளக்கு போடும்போது பின் சொல்லக்கூடிய இந்த வார்த்தைகளை சொல்ல மறந்துராதீங்க.

சனிபகவான் மந்திரம்

போன ஜென்மத்தில் நான் செய்த பாவம், என்னுடைய முன்னோர்கள் செய்த பாவம் அனைத்தும் இன்றோடு தொலைந்து போகட்டும். இந்த ஜென்மத்தில் அறிந்தும் அறியாமலும் நான் செய்த பாவத்திற்கும் சனிபகவான் ஆன உன்னிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

- Advertisement -

இவ்வாறு சனி பகவான் முன்பு பணிவோடு நின்று இந்த வார்த்தைகளை சொல்லி சனி பகவானிடம் மன்னிப்பு கேட்க மறந்துடாதீங்க. பிறகு செருப்பை கோவிலிலேயே விட்டுவிட்டு நீங்கள் உங்கள் வீட்டிற்கு செல்லலாம். கோவில் வாசலில் செருப்பை விட்டு விட்டு வருவதன் மூலம் உங்களுடைய துன்பங்களும் தொலைந்து போகும் என்பது தான் நம்பிக்கை.

இதையும் படிக்கலாமே: சனிக்கிழமை அதி சக்தி வாய்ந்த அனுமன் வழிபாடு

இதுபோல பரிகாரத்தை ஒரே ஒரு முறை உங்கள் வாழ்நாளில் செய்து பாருங்கள். நிச்சயமாக வாழ்வில் மிகப்பெரிய நல்ல மாற்றங்கள் ஏற்படும். நம்பிக்கை உள்ளவர்களுக்கு இந்த ஆன்மீகம் சார்ந்த தகவல் நல்ல பலனை தரும் என்ற தகவலுடன் இன்றைய ஆன்மீகம் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்