- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalதடைகளை தகர்க்கும் அதிசக்தி வாய்ந்த விநாயகர் மந்திரம்

தடைகளை தகர்க்கும் அதிசக்தி வாய்ந்த விநாயகர் மந்திரம்

- Advertisement -

தினம் ஒரு கஷ்டம், தினம் ஒரு பிரச்சனை, தினம் தினம் ஒரு போராட்டம், இதுதான் இந்த கலியுகத்தில் மனிதர்களுடைய வாழ்க்கையாக மாறி வருகிறது. என்னதான் போராட்டம் நிறைந்த வாழ்க்கையாக இருந்தாலும், ஏதோ ஒரு கட்டத்தில் கொஞ்சமாக சந்தோஷம் வர வேண்டும், கொஞ்சம் சந்தோஷத்தை கூட அனுபவிக்காத மக்கள் மனதில் வெறுப்பு தான் அதிகமாக இருக்கும்.

நீங்களும் உங்களுடைய வாழ்க்கையில் கஷ்டத்தில் இருந்து விடுபட வேண்டும் என்று நினைத்தால், இந்த மந்திரத்தை சொல்லுங்கள். எந்த நேரமும் இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும் என்று அவசியம் கிடையாது. கஷ்டம் வரும்போது சொல்லுங்கள். கஷ்டம் தானாக உங்களை விட்டு விலகும், தடைகள் வரும்போது சொல்லுங்கள். தடைகள் தானாக உங்களை விட்டு விலகி விடும்.

- Advertisement -

பிரச்சனைகளை தீர்த்து வைக்க ஏதாவது ஒரு ரூபத்தில் அந்த விநாயகர் உங்கள் அருகில் வந்து விடுவார். அப்பேற்பட்ட அதிசக்தி வாய்ந்த அந்த மந்திரம் என்ன அந்த மந்திரத்தை எப்படி படிப்பது ஆன்மீகம் சார்ந்த தகவலை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோமா.

விநாயகர் வழிபாடு

உங்கள் கஷ்டத்தை தீர்க்க முதலில் ஓடி வரக்கூடிய தெய்வம் விநாயகர். விநாயகர் ரொம்ப ரொம்ப எளிமையானவர். எந்த நேரத்தில் எப்படி கூப்பிட்டாலும் கூப்பிட்ட நேரத்திற்கு வந்து உதவி செய்வார். வேலையில் திடீரென்று எதிர்பாராத ஒரு பிரச்சனை வந்துவிட்டது. அதில் நீங்கள் வசமாக சிக்கி விட்டீர்கள். தவறு உங்கள் மேல் இருக்கலாம், தவறு உங்கள் மேல் இல்லாமல் போகலாம்.

- Advertisement -

தவறுகள் செய்யாத மனிதர்களே கிடையாது அல்லவா. நீங்கள் தவறு செய்திருந்தாலும் விநாயகரிடம் சின்ன மன்னிப்பு கேட்டுவிட்டு விநாயகா இந்த பிரச்சனையில் இருந்து என்னை காப்பாற்று என்று சொல்லி இந்த மந்திரத்தை மனதிற்கள் மூன்று முறை சொல்லுங்கள். மந்திரத்தை மனப்பாடம் செய்து வைத்துக் கொள்ளுங்கள் ஒரு வரி மந்திரம் தான்.

கஷ்டம் தீர்க்கும் விநாயகர் மந்திரம்

ஓம் நமோ வராத பதயே நமோ கணபதயே நம !

- Advertisement -

இவ்வளவுதான் மந்திரம். மந்திரத்தை சொல்லிவிட்டு பிரச்சினையை தீர்ப்பதற்கு உண்டான வழிகளை நீங்கள் தைரியமாக மேற்கொள்ளலாம். உங்களுடைய பிரச்சனைகள் சரியாகிவிடும். வியாபாரத்தில் எதிர்பாராத நஷ்டம் பார்ட்னரோடு ஏதோ ஒரு சண்டை வந்துவிட்டது. வாக்குவாதம். என்ன செய்வது. இருந்த இடத்திலிருந்து இந்த மந்திரத்தை சொல்லுங்கள்.

படிக்கும் மாணவர்களுக்கு பிரச்சனை, டீச்சரிடம் மாட்டிக் கொண்டீர்கள். படிக்கவில்லை என்ன செய்வது. இந்த மந்திரத்தை சொல்லுங்கள் நிச்சயம் அந்த இடத்தில் நீங்கள் காப்பாற்றப்படுவீர்கள். அதற்காக படிக்காமல் ஏமாற்றக்கூடாது. எதிர்பாராமல் வரும் கஷ்டம் சமயத்தில் இந்த மந்திரத்தை சொன்னால் விநாயகர் வந்து காப்பாற்றி விடுவார்.

வீட்டில் இருக்கும் பெண்களுக்கு குடும்பத்தில் ஏதோ பிரச்சனை  அல்லது மாமியாரிடமோ மாமனாரிடமோ நாத்தனார், உடன் பிறந்தவர்களிடமும் சண்டை வந்துவிட்டது. என்ன செய்வது சண்டை சரியாக வேண்டுமெனாக என்று இந்த மந்திரத்தை சொல்லுங்கள். சண்டைய உடனடியாக சரியாகும்‌.

இதையும் படிக்கலாமே: தை மாத செவ்வாய் கிழமை படிக்க வேண்டிய துர்கா அஷ்டகம்

இப்படி உங்கள் வாழ்க்கையில் ஒரு அங்கமாக இந்த மந்திரமும், உங்கள் நண்பனாக அந்த விநாயகரும் வந்து சேர்ந்து விட்டால் போதும். இல்லறம் இனிக்க துவங்கும். வாழ்க்கையில் சந்தோஷம் பிறக்கும். சங்கடங்கள் தானாக குறைய தொடங்கும். தடங்கல்கள் தானாக விலகத் தொடங்கும். நம்பிக்கை உள்ளவர்கள் முயற்சி செய்து பாருங்கள் நல்லதே நடக்கும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்