ராமபிரானை வழிபாடு செய்வதற்கு உகந்த திதியாக திகழ்வதுதான் நவமி திதி. ஏனென்றால் நவமி திதியில் தான் ராமபிரான் அவதரித்தார். அப்படிப்பட்ட நவமி திதி வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து வருகிறது. வெள்ளிக்கிழமை என்பது மகாலட்சுமிக்கு உகந்த கிழமையாக கருதப்படுகிறது என்று நம் அனைவருக்குமே தெரியும். இவை இரண்டும் ஒன்று சேர்ந்து வரக்கூடிய ஒரு அற்புதமான நாளை நாம் முறையாக பயன்படுத்தினோம் என்றால் நம்முடைய வாழ்வில் இருக்கக்கூடிய துரதிஷ்டம் முற்றிலும் நீங்கி அதிர்ஷ்டம் உண்டாகும். அந்த வழிபாட்டு முறையைப் பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
துரதிஷ்டத்தை நீக்கும் ஆனி நவமி
நம்முடைய வாழ்க்கையில் நாம் அனுபவிக்க கூடிய கஷ்டங்கள் அனைத்தும் நம்மை விட்டு நீங்க வேண்டும். நாம் எடுக்கக்கூடிய முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடைய வேண்டும். இதோடு எதிர்பாராத நல்ல நிகழ்வுகளும் நம் வாழ்வில் நடக்க வேண்டும் என்றால் நமக்கு அதிர்ஷ்டம் ஏற்பட வேண்டும். இந்த அதிர்ஷ்டம் என்பது ஜாதகரீதியாக ஏற்படும். அதோடு மட்டுமல்லாமல் ஒரு சில குறிப்பிட்ட சூட்சுமமான நாட்களில் நாம் செய்யக்கூடிய வழிபாடுகளாலும் அதிர்ஷ்டம் என்பது உண்டாகும். அந்த வகையில் ஆனி நவமி திதி அன்று அதிர்ஷ்டம் ஏற்பட செய்ய வேண்டிய ஒரு வழிபாட்டு முறையை தான் இப்பொழுது பார்க்கப் போகிறோம்.
ஜூலை மாதம் நான்காம் தேதி வெள்ளிக்கிழமை அன்று மாலை 6:21 வரை நவமி திதி இருக்கிறது. அதனால் மாலை 6:00 மணிக்குள் நாம் நவமி திதிக்குரிய வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். நவமி திதிக்குரிய வழிபாட்டை செய்ய வேண்டும் என்றால் நாம் ராம பிரானை வழிபாடு செய்ய வேண்டும். இதற்கு நம்முடைய வீட்டில் ராமபிரானின் படம் இருக்க வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. அருகில் ராமபிரானின் ஆலயம் இருக்க வேண்டும் என்ற எந்த நிமதனையும் இல்லை. ராமபிரானை முழு மனதோடு நாம் நினைத்து செய்யக்கூடிய ஒரு எளிமையான காரியம் தான் “ஸ்ரீ ராமஜெயம்” என்று எழுதுவது அல்லது கூறுவது. இதைத்தான் நாம் செய்யப்போகிறோம்.
வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்குள் எப்பொழுது நேரம் கிடைக்கிறதோ அப்பொழுது வீட்டிற்கு வெளியே அதாவது வெட்ட வெளிக்கு வந்து அமர்ந்து கொண்டு ஒரு பேப்பரிலோ அல்லது நோட்டிலோ “ஸ்ரீ ராமஜெயம்” என்று 133 முறை எழுத வேண்டும். வெட்டவெளியில் அமர்ந்து எழுதுவதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பவர்கள் அருகில் இருக்கக்கூடிய ஏதாவது ஒரு ஆலயத்திற்கு சென்று அங்கு அமர்ந்தும் எழுதலாம். எழுதத் தெரியாது என்று கூறுபவர்கள் இந்த முறையில் வீட்டிற்கு வெளியே வந்து வெட்ட வெளிலோ அல்லது கோவிலிலோ அமர்ந்து கொண்டு “ஸ்ரீ ராம ஜெயம்” என்று 133 முறை கூற வேண்டும்.
இப்படி முழு மனதோடு ராமபிரானை நினைத்து நாம் ஸ்ரீ ராமஜெயம் என்று கூறும்பொழுது ராமபிரானின் அருளும், சீதாபிராட்டியின் அருளும், அதே சமயம் ஆஞ்சநேயரின் அருளும் பரிபூரணமாக நமக்கு கிடைக்கும். இதன் மூலம் நம் வாழ்வில் இருக்கக்கூடிய அனைத்து விதமான கஷ்டங்களும் நீங்கி அதிர்ஷ்டம் நம்மை தேடி வர ஆரம்பிக்கும்.
இதையும் படிக்கலாமே: சுபகாரிய தடையை நீக்கும் குரு வழிபாடு
மிகவும் எளிமையான இந்த ராம வழிபாட்டை வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து வரும் நவமி திதி அன்று செய்பவர்களுக்கு அவர்களிடம் இருக்கக்கூடிய துரதிஷ்டம். முற்றிலும் நீங்கி அதிர்ஷ்டம் அவர்களை தேடி வர ஆரம்பிக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை முடிவு செய்து கொள்கிறோம்.