ஒருவருடைய வாழ்க்கையில் பலவிதமான சுபகாரியங்கள் நடைபெறும். ஒரு குழந்தை பிறப்பது சுபகாரியமே, அந்த குழந்தைக்கு மொட்டை அடித்து காது குத்துவதும் சுபகாரியமே, குழந்தையை பள்ளிக்கு அனுப்புவதும் சுபகாரியமே, கல்வியில் சிறந்து விளங்குவதும் சுபகாரியமே, வேலைக்கு செல்வதும் சுபகாரியமே, திருமண யோகம் ஏற்படுவதும் சுபகாரியமே, பிறகு குழந்தை பிறப்பதும் சுபகாரியமே, அந்த குழந்தைக்கு தேவையான அனைத்து விதமான நல்ல செயல்களை செய்வதும் சுபகாரியமே. இப்படி நம்முடைய வாழ்க்கையில் பலவிதமான சுபகாரியங்கள் நடைபெறும். தடைபட்டிருக்கும் சுப காரியங்களை தடை இன்றி நடத்துவதற்கு வியாழக்கிழமை தோறும் குரு பகவானை வழிபாடு செய்யும் ஒரு எளிமையான முறையைப் பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
சுபகாரிய தடை நீக்க வழிபாடு
எந்த கிரகத்திற்கும் இல்லாத ஒரு அற்புதமான சக்தி நிறைந்தவராக தான் குருபகவான் திகழ்கிறார். இவர் அனைத்து விதமான சுப காரியங்களையும் நடத்துவதற்கு உரியவராக கருதப்படுகிறார். மேலும் இவர் பார்க்கக்கூடிய இடத்திற்கு அதிக அளவில் பலன் இருக்கிறது என்பதால் தான் குரு பார்க்க கோடி நன்மை என்று கூறுகிறார்கள். அப்படிப்பட்ட குரு பகவானின் அருளை ஒருவர் பரிபூரணமாக பெற்றுவிட்டால் அவருக்கு அனைத்து விதமான சுப காரியங்களும் நடைபெறும். அப்படி ஒருவேளை சுப காரியத்தில் தடைகள் ஏற்படுமாயின் அவர்கள் கண்டிப்பான முறையில் குரு பகவானை வழிபாடு செய்ய வேண்டும்.
குரு பகவானுக்குரிய கிழமையாக வியாழக்கிழமை திகழ்கிறது. வியாழக்கிழமை அன்று குரு பகவானுக்குரிய குரு ஹோரையில் வழிபாடு செய்வது கூடுதல் பலனை தரும். இதற்கு நமக்கு ஒரு மஞ்சள் நிற பேப்பர், மஞ்சள் நிற துணி, ஒன்பது கருப்பு கொண்டை கடலை வேண்டும். பிறகு குரு பகவானுக்கு சாற்றுவதற்காக மஞ்சள் நிற பூக்கள், மஞ்சள் நிறத்தில் இருக்கக்கூடிய ஏதாவது ஒரு இனிப்பு பொருள் வேண்டும். குரு ஹோரையில் வீட்டு பூஜை அறையில் தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு அந்த மஞ்சள் நிற பேப்பரில் என்னென்ன சுபகாரியங்கள் தடைப்பட்டு இருக்கிறதோ அவை அனைத்தையும் வரிசையாக எழுதிக் கொள்ளுங்கள்.
எழுதிய இந்த பேப்பரை நன்றாக மடித்து மஞ்சள் நிற துணியில் வைத்துக் கொள்ளுங்கள். இதனுடன் 9 கருப்பு கொண்டைக்கடலையும் வைத்து ஒரு மூட்டையாக கட்டிக் கொள்ளுங்கள். அருகில் இருக்கக்கூடிய நவகிரக ஆலயத்திற்கு செல்ல வேண்டும். அங்கு நவகிரகங்களில் இருக்கக்கூடிய குரு பகவானுக்கு மஞ்சள் நிற மலர்களை சாற்றி இரண்டு நெய் தீபங்களை ஏற்றி வைத்து மஞ்சள் நிற இனிப்பு பொருட்களை அவருக்கு முன்பாக வைத்துவிட்டு அவருடைய திருவடியில் இந்த மூட்டியை வைத்து முழு மனதோடு சுப காரியங்கள் விரைவில் நடைபெற வேண்டும் என்று வேண்டிக் கொள்ள வேண்டும்.
பிறகு நவகிரகங்களை எப்பொழுதும் போல் ஒன்பது முறை வலம் வந்து அவருடைய பாதத்தில் இருக்கக்கூடிய முடிச்சை எடுத்து வீட்டுக்கு கொண்டு வந்து வீட்டு பூஜை அறையில் ஏதாவது ஒரு இடத்தில் வைத்து விடுங்கள். அடுத்த வாரம் வியாழக்கிழமை வரும்பொழுது அதில் இருக்கக்கூடிய கொண்டைக்கடலையை எடுத்து பறவைகளுக்கு தானமாக போட்டுவிட வேண்டும். அதில் இருக்கக்கூடிய பேப்பரை எடுத்து கால் படாத இடத்தில் போட வேண்டும். மீண்டும் இதேபோல் மூட்டையை தயார் செய்து குரு வழிப்பாட்டை செய்ய வேண்டும். இப்படி தொடர்ச்சியாக ஒன்பது வாரங்கள் செய்யும் பொழுது குரு பகவானால் தடைப்பட்டு நின்ற சுபகாரியங்கள் அனைத்தும் தடையின்றி நடைபெறும்.
இதையும் படிக்கலாமே: பணகஷ்டம் 10 விஷயங்கள்
குரு பகவானின் அருளை பெறுவதற்கு பலவிதமான வழிபாட்டு முறைகளும் பரிகாரங்களும் இருக்கின்றன. எதை செய்வதாக இருந்தாலும் முழு மனதோடு குரு பகவானை நினைத்து செய்யும் பொழுது அவரின் அருளை நம்மால் பரிபூரணமாக பெற முடியும். இந்த எளிமையான வழிபாட்டு முறையையும் முழு நம்பிக்கையோடு வியாழக்கிழமை தோறும் செய்பவர்களுக்கு குரு பகவானின் அருளால் சுப காரியங்கள் விரைவில் நடைபெறும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.