கடைசி டெஸ்ட் போட்டிக்கான 11 பேர்கொண்ட ஆஸ்திரேலிய உத்தேச அணி அறிவிப்பு

aus

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி சிட்னி நகரில் நாளை அதிகாலை 5 மணிக்கு துவங்கவுள்ளது. இந்த போட்டியின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தியா வெற்றி பெற்றாலோ அல்லது டிரா செய்தாலோ தொடரை முதன் முறையாக வசப்படுத்தும். அதேவேளையில் போட்டியை ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் முனைப்புடன் களமிறங்கும்.

finch 1

இந்த போட்டிக்கான 11 பேர்கொண்ட உத்தேச அணியை ஆஸ்திரேலிய நிர்வாகம் தற்போது அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது. அதன் படி துவக்க ஆட்டக்காரரான பின்ச் அணியில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக கவாஜா துவக்க வீரராக களமிறங்குகிறார்.

அதே போன்று சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டரான மாரன்ஸ் இந்த போட்டியில் ஆடுகிறார். மேலும் ஹாஸல்வுட் இந்த போட்டியில் விளையாடுகிறார். சிட்னி மைதானம் சுழற்பந்து வீச்சிற்கு சாதகமாகும் வகையில் இருப்பதால் லயனின் பங்கு இந்த போட்டியில் அதிக அளவு இருக்கும் என்று எதிர்பார்க்க படுகிறது.

labus-1

உத்தேச அணி : ஹாரிஸ், கவாஜா, மார்னஸ், ஷான் மார்ஷ், ஹெட், பெயின், மிட்சல் மார்ஷ்,ஸ்டார்க்,லயன், ஹாஸல்வுட் மற்றும் கம்மின்ஸ்

இதையும் படிக்கலாமே :

மீண்டும் பேட் பிடித்து விளையாட்டினை கற்க சச்சின் பயிற்சி ! புகைப்படம் உள்ளே

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்