அட, அவல் வைத்து இப்படி ஒரு அடையை செய்ய முடியுமா? அதுவும் வெறும் 10 நிமிஷத்துல! மிஸ் பண்ணாம பாத்து தெரிஞ்சுக்கோங்க! சூப்பர் பிரேக்ஃபாஸ்ட் இது.

aval-adai
- Advertisement -

நீங்கள் சுவைக்காத அளவிற்கு, புதுவிதமான ஒரு அடையை தான் இன்று, இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். மிக மிக சுலபமான முறையில், அவசர அவசரமாக உங்களுக்கு வேலை இருந்தாலும், சட்டுனு சுவையாக சாப்பிட, ஆரோக்கியமாக சாப்பிட, இதைவிட பெஸ்ட் டிஃபன் வேற இருக்கவே முடியாது. நிறைவான காலை உணவாகவும் இதை எடுத்துக் கொள்ளலாம். இரவு உணவாக வேண்டும் என்றாலும் இதை எடுத்துக் கொள்ளலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் இந்த அவல் அடையை எப்படி செய்வது? சட்டுனு பார்த்திடலாம் வாங்க.

aval

அவல் அடை செய்ய தேவையான பொருட்கள்:
வெள்ளை அவல் – 1 கப், ரவை – 1 கப், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 1, தக்காளி – 1, கேரட் – 1, குடைமிளகாய் – 1/2, பச்சை மிளகாய் – 1, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை கொத்தமல்லி தழை, மிளகுத்தூள் – 1/2 ஸ்பூன், மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், சில்லி ஃப்ளேக்ஸ் – 1 ஸ்பூன், தேவையான அளவு உப்பு. சில்லி ஃப்ளேக்ஸ் இல்லை என்றால் வரமிளகாயை கத்திரிக்கோலால் பொடியாக நறுக்கி கூட போட்டுக்கொள்ளலாம் நன்றாக இருக்கும். (அடையில் லேசாக புளிப்பு சுவை வேண்டும் என்று விரும்புபவர்கள் கொஞ்சமாக ஒரு ஸ்பூன் அளவு எலுமிச்சை பழச்சாறு சேர்த்துக் கொள்ளலாம்.)

- Advertisement -

Step 1:
அவலை ஒரு முறை நல்ல தண்ணீர் ஊற்றி கழுவி விடுங்கள். முதலில் ஒரு கப் அளவு அவலில் 1/4 டம்ளர் அளவு தண்ணீர் சேர்த்து, நன்றாக பிசைந்து ஊற வைத்துக் கொள்ளுங்கள். இதேபோல் ரவை 1 கப் எடுத்துக் கொண்டால், 1 1/2 கப்  அளவு தண்ணீரை ஊற்றி, ரவையையும் நன்றாக ஊற வைத்துவிட வேண்டும்.

choped-veg

Step 2:
அவல் நன்றாக ஊறிய பின்பு, அதை உங்கள் கையாலேயே மசித்துக் கொள்ளுங்கள். ரவையும் அவளும் 10 நிமிடங்கள் வரை ஊறினால் போதும். இப்போது ஒரு அகலமான பௌலில் ஊற வைத்திருக்கும் ரவை, ஊற வைத்திருக்கும் அவல், பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், காய்கறி மற்றும் மற்ற மசாலா பொருட்களை எல்லாம் ஒன்றாக சேர்த்து, தேவையான அளவு உப்பு போட்டு பிசைய வேண்டும். இந்த மாவு அடை தட்டும் பதத்தில் இருக்க வேண்டும். தண்ணீர் பதத்தில் இருக்க கூடாது.

- Advertisement -

Step 3:
அதாவது கேழ்வரகு மாவு அடை தட்ட எப்படி மாவு தயார் செய்வோமோ, அதேபோல் இந்த இரவை அவல் சேர்த்த கலவையை தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். தோசைக்கல்லை மிதமான தீயில் வைத்து விட்டு, கொஞ்சம் எண்ணெயை தடவி விட்டு, உங்கள் கைகளால் பிசைந்து வைத்திருக்கும் மாவில் இருந்து ஒரு உருண்டையை எடுத்து, கடாயில் உங்கள் விரல்களாலே தட்டிவிட வேண்டும். மேலே நல்லெண்ணெயை ஊற்றி ஒரு தட்டு போட்டு மூடி விடுங்கள். இரண்டு நிமிடங்கள் மிதமான தீயில் அடை வேகட்டும்.

adai

Step 4:
ஒரு பக்கம் வெந்த அடையை, மீண்டும் திருப்பி போட்டு, மிதமான தீயில் ஐந்து நிமிடங்கள் வரை பொன்னிறமாக சிவக்க வைத்து, நல்லெண்ணெய் ஊற்றி, சாப்பிட்டால் இதன் சுவையும் வாசமும் அப்படியிருக்கும். தேவைப்பட்டால் நெய் உற்றி கூட இந்த அடையை சுட்டுக் கொள்ளலாம். இதற்கு சைட் டிஷ் ஆக அவியல் அல்லது கார சட்னி வைத்து பரிமாறினால் சுவை மேலும் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. குறிப்பாக குழந்தைகளுக்கு உடலுக்கு வலிமை சேர்க்கும் காய்கறிகளை இந்த அடையோடு சேர்த்து விடலாம்.

- Advertisement -

adai1

இதில் காய்கறிகளை உங்களது விருப்பம் போல சேர்த்துக் கொள்ளலாம். வெங்காயத்திற்கு பதிலாக பொடியாக நறுக்கிய முட்டைகோஸ், வேகவைத்த பச்சைப் பட்டாணி, மஸ்ரூம், இப்படியாக உங்களுக்கு விருப்பப்பட்ட காய்கறிகளை பொடியாக நறுக்கி,  சேர்த்து கூட, வித்தியாசமான சுவையில் இந்த அடையை செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. உங்களுக்கு இந்த டிப்ஸ் பிடித்திருந்தால் இன்னைக்கு ராத்திரி உங்க வீட்ல தாராளமா ட்ரை பண்ணி பார்க்கலாமே!

இதையும் படிக்கலாமே
மசாலா வேர்க்கடலை செய்வது இவ்வளவு ஈஸியா? இனி கடைக்குப் போய், மசாலா வேர்க்கடலை வாங்க வேண்டாம். 10 நிமிஷத்துல, உங்க வீட்ல, உங்க கையால, ஃபிரஷா செஞ்சு சாப்பிடுங்க!

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -