மசாலா வேர்க்கடலை செய்வது இவ்வளவு ஈஸியா? இனி கடைக்குப் போய், மசாலா வேர்க்கடலை வாங்க வேண்டாம். 10 நிமிஷத்துல, உங்க வீட்ல, உங்க கையால, ஃபிரஷா செஞ்சு சாப்பிடுங்க!

masala-verkadalai
- Advertisement -

நம்மில் பல பேருக்கு பிடித்த ஸ்நாக்ஸ் வகைகளில், மசாலா வேர்க்கடலையும் ஒன்று. ஆனால், இதை பெரும்பாலும் கடையில் தான் வாங்கி சாப்பிடுவோம். ஆனால் வேர்க்கடலையை வைத்து நம்முடைய வீட்டிலேயே இந்த மசாலா வேர்க்கடலையை பிரஷ்ஷாக எப்படி செய்வது என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். மொறு மொறு வென்று ஃபிரஷ்ஷா, நல்ல கருவேப்பிள்ளை வாசத்தோடு, இந்த வேர்க்கடலையை நம் கையால் செய்து, நம் குழந்தைகளுக்கு கொடுத்தால், அதில் கிடைக்கும் மனத் திருப்தியை வேறு. பேக்கரி ஸ்டைல் மசாலா வேர்க்கடலை எப்படி செய்வது பார்த்து விடலாமா?

verkadalai

மசாலா வேர்க்கடலை பொறிக்க தேவையான பொருட்கள்:
காய்ந்த வேர்கடலை – 200 கிராம், கடலை மாவு – 6 ஸ்பூன், அரிசி மாவு – 3 ஸ்பூன், தனி மிளகாய் தூள் – 1 ஸ்பூன், மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன், பெருங்காயத்தூள் – 1/4 ஸ்பூன், உப்பு தேவையான அளவு, தேவைப்பட்டால் சிவப்பு கலர் பொடி 2 சிட்டிகை, சேர்த்துக் கொள்ளலாம். கலர் சேர்க்க விருப்பம் இல்லாதவர்கள் அதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

ஒரு அகலமான பவுலில் வேர்க்கடலையை போட்டு விட்டு, அதில் மேலே குறிப்பிட்டுள்ள அளவில் எல்லா பொருட்களையும் ஒன்றாக சேர்த்து, முதலில் உங்கள் கைகளாலேயே கலந்து விடுங்கள். வேர்கடலையும் இந்த மசாலா பொருட்களும் ஒன்றாக முதலில் கலந்துவிட வேண்டும். அடுத்தபடியாக அடுப்பில் ஒரு கடாயை வைத்து, இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, நன்றாக சூடுபடுத்தி, பவுலின் இறக்கும் வேர்கடலை மசாலா பொருட்களோடு சேர்த்து, ஒரு கரண்டியை வைத்து கிளற வேண்டும். கையை வைத்து விடாதீர்கள் எண்ணெய் சுட்டு விடும். (சூடாக எண்ணெயை ஊற்றி, மசாலா பொருட்களோடு சேர்த்து பிசைந்தால், மொறு மொறு கிரிஸ்பி வேர்கடலை மசாலா கிடைக்கும்.)

masala-verkadalai1

அதன் பின்பு, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து மசாலா பொருட்கள், வேர்க்கடலையோடு நன்றாக படும்படி பிசைய வேண்டும். நிறைய தண்ணீர் ஊற்றி விடக்கூடாது. பிறகு மாவு, வேர்கடலையில் ஒட்டாமல் போய்விடும். வேர்க்கடலையோடு மசாலா பொருட்களும் கடலை மாவுவும் அரிசி மாவும் சேரும்போது, ஒரு வேர்க் கலவையோடு மற்றொன்று ஒட்டிக் கொண்டு தான் இருக்கும்.

- Advertisement -

கடாயில் எண்ணெயை நன்றாக சூடுபடுத்தி விட்டு, அடுப்பை சிம்மில் வைத்து விடுங்கள். அதன் பின்பு வேர்கடலைகளை ஒவ்வோன்றாக உதிர்த்து கடாயில் போட்டு, மிதமான தீயில் சிவக்க வைத்து எடுக்க வேண்டும். இறுதியாக அதே எண்ணெயில் கொஞ்சம் கறிவேப்பிலையை வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

masala-verkadalai2

வறுத்த வேர்கடலையின் மேல் கருவேப்பிலையை பொடி செய்து தூவி, நன்றாக ஆறிய பின்பு பரிமாறினால் மசாலா சேர்த்த வேர்கடலை தயார். கடையில் வாங்கும் பக்குவம் சிறிதளவு கூட கட்டாயம் மாறாது. இதே அளவுகளில் முயற்சி செய்து பாருங்கள். சொல்லப்போனால் கடையில் வாங்கி சாப்பிடும் வேர்கடலை மசாலா விட, உங்கள் கையால் செய்த இந்த வேர்க்கடலை மசாலா சூப்பராக இருக்கும்.

இதையும் படிக்கலாமே
அதிரசம் செய்வது இவ்வளவு ஈசியா? இத்தனை நாளா இது தெரியாமல் போயிருச்சே!

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -