- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்ஒரு கப் அவல் இருந்தால் போதும். ஐந்தே நிமிடத்தில் குழந்தைகளை மகிழ்விக்க இப்படி மொறு மொறு...

ஒரு கப் அவல் இருந்தால் போதும். ஐந்தே நிமிடத்தில் குழந்தைகளை மகிழ்விக்க இப்படி மொறு மொறு வடை செய்து கொடுங்கள்

- Advertisement -

குழந்தைகள் என்றாலே பொதுவாக அடம்பிடிக்கும் குணம் இருக்கத் தான் செய்கிறது. நாம் சொல்வதை அவர்கள் கேட்பதை விட, அவர்கள் சொல்வதை நாம் கேட்க வேண்டியிருக்கும். அதிலும் சாப்பாடு விஷயம் என்றால் இன்னும் அதிகம் பொறுமை தேவை. அவர்கள் எங்கெல்லாம் செல்கிறார்களோ, எப்படி விளையாடுகிறார்களோ அதற்கு ஏற்றார்போல் பொறுமையாக குழந்தைகளுக்கு உணவு கொடுக்க வேண்டும். இப்படி எவ்வளவு செய்தாலும் சில குழந்தைகள் சரியாக உணவு உண்ண மாட்டார்கள். இப்படிப்பட்ட குழந்தைகள் திடீரென பசிக்குது என்று சொன்னவுடன், அவர்களுக்கு ஆரோக்கியமாக உணவை சட்டென செய்து கொடுக்க அவல் மட்டும் வீட்டில் இருந்தால் போதும். குழந்தைகள் விருப்பமாக சாப்பிடும் வடை செய்யலாம். வாருங்கள் இந்த சுவையான அவல் வடையை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
வெள்ளை அவல் – ஒரு கப், பெரிய வெங்காயம் – 3, பச்சை மிளகாய் – 3, இஞ்சி சிறிய துண்டு – ஒன்று, ரவை – 2 ஸ்பூன், அரிசி மாவு – 2 ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், பெருங்காயத்தூள் – அரை ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து, எண்ணெய் – கால் லிட்டர்.

- Advertisement -

செய்முறை:
முதலில் ஒரு கப் அவலை ஒரு கிண்ணத்தில் சேர்த்துக் கொண்டு, அதனுடன் தண்ணீர் ஊற்றி, இரண்டு முறை நன்றாக அலசிக் கொள்ள வேண்டும். பிறகு மீண்டும் தண்ணீர் ஊற்றி 5 நிமிடத்திற்கு ஊற வைத்துக் கொள்ள வேண்டும். அவல் ஊறுகின்ற இதே நேரத்தில் வடைக்கு தேவையான அனைத்து பொருட்களையும் தயார் செய்து கொள்ள வேண்டும்.

முதலில் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பிறகு பச்சை மிளகாயை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவேண்டும். அதேபோல் இஞ்சியைத் தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்க வேண்டும். பின்னர் கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தழையையும் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பின்னர் ஊறிய அவலை தண்ணீர் இல்லாமல் நன்றாக பிழிந்து மற்றொரு கிண்ணத்தில் மாற்றி கொள்ள வேண்டும். பிறகு இதனுடன் 2 ஸ்பூன் ரவை, 2 ஸ்பூன் அரிசி மாவு மற்றும் உப்பு சேர்த்து நன்றாகப் பிசைந்துக் கொள்ள வேண்டும். பிறகு பிறகு இவற்றுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

பிறகு அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைக்க வேண்டும். பின்னர் இதில் வடை பொறிக்க தேவையான எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் சிறு சிறு உருண்டைகளாக எடுத்து, வடை தட்டி, எண்ணெயில் சேர்க்க வேண்டும். சிறிது நேரத்தில் வடை சிவந்ததும் திருப்பிப் போட்டு, இருபுறமும் சிவந்தத உடன் எண்ணெயில் இருந்து வெளியே எடுத்து விட வேண்டும். பிறகு சுடச்சுட சாப்பிட கொடுத்தால் போதும். அனைவரும் விருப்பமாக சாப்பிடுவார்கள்.

சற்று முன்