ஒரு கப் அவல் இருந்தா இட்லி தோசைக்கு மாவு இல்லாத நேரத்தில் சூப்பரான இந்த ஊத்தப்பம் ரெடி பண்ணிடலாம். ஊத்தப்பம்ன்னா இப்படித் தான் இருக்கணும்னு சொல்ற அளவுக்கு டேஸ்ட் அட்டகாசமா இருக்கும்.

- Advertisement -

நம்முடைய காலை மற்றும் இரவு உணவுகளில் முக்கியமான இடத்தை பிடிப்பது இட்லி, தோசை தான். இவை இரண்டும் செய்ய மாவு இல்லாத சமயங்களில் தான் மற்ற உணவு சமைப்பது பற்றியே யோசிப்போம். இந்த வகையில் இட்லி தோசைக்கு மாவு இல்லாத சமயங்களில் சட்டென்று செய்யக் கூடிய ஒரு சூப்பரான ஊத்தப்பம் ரெசிபி எப்படி செய்வது என்று இந்த குறிப்பில் தெரிந்து கொள்வோம்.

செய்முறை

ஊத்தப்பம் செய்வதற்கு முதலில் 1கப் அவல் இதற்கு தட்டை அவல் சிகப்பு, அவல் என எது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். அவலை ஒரு முறை அலசிய பிறகு தட்டை அவலாக இருந்தால் ஐந்து நிமிடம் மட்டும் தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளுங்கள். இதுவே கொஞ்சம் தடிமனான அவலாக இருந்தால் 15 நிமிடம் ஊற வைத்த பிறகு அவலை மிக்ஸி ஜாரில் சேர்த்து பைன் பேஸ்ட் ஆக அரைத்து ஒரு பவுலில் மாற்றிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்ததாக அரைத்த அவலுடன் 114 கப் ரவை, 1 கப் தயிர், 1 கப் தண்ணீர், 1/2 டீஸ்பூன் உப்பு இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து கொஞ்சம் கெட்டியான பதத்திற்கு மாவை கலந்து 10 நிமிடம் தட்டு போட்டு மூடி வைத்து விடுங்கள். இந்த ரவை ஊறி மாவு கொஞ்சம் உபரியாகும்.

அடுத்து 1 வெங்காயம், 1 கொத்து கறிவேப்பிலை, 1 கொத்து கொத்தமல்லி, 1 தக்காளி இவையெல்லாம் பொடியாக நறுக்கிய பிறகு ஒரே ஒரு கேரட்டை துருவி இவை அனைத்தையும் ஒரு தட்டில் சேர்த்து நன்றாக கலந்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது அடுப்பில் தோசை கல் வைத்து சூடானவுடன், நாம் தயார் செய்து வைத்த மாவை எடுத்து கொஞ்சம் தடிமனாக ஊற்றி அதன் மேல் நறுக்கி வைத்த வெங்காயம், கேரட்டுகளை தூவி நெய் ஊற்றி ஒரு புறம் நன்றாக சிவந்து வந்த பிறகு மறுபுறம் திருப்பிப் போட்டு எடுத்து விடுங்கள். சுவையான அவல் ஊத்தப்பம் பத்து நிமிடத்தில் தயார். இந்த ஊத்தப்பத்தின் மீது இட்லி பொடியை லேசாக தூவி சாப்பிடலாம். இன்னும் சுவை நன்றாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே: வாழைப்பூ இருக்கா அப்ப வித்தியாசமான சுவையில் இந்த சட்னி செய்து பாருங்க. வாழைப்பூவில் இப்படி கூட டேஸ்டா சட்னி அரைக்க முடியும்ன்னு நெனைச்சி கூட பார்த்து இருக்க மாட்டிங்க. மிஸ் பண்ணாம இன்னைக்கே செய்துடுங்க.

இந்த ஊத்தப்பத்திற்கு காரசாரமா சட்னி அரைத்து வைத்து சாப்பிடும் போது ரொம்பவே சுவையாக இருக்கும். வீட்டில் இட்லி தோசைக்கு மாவு இல்லையே என்று இனி கவலைப்படாமல் அவலை வைத்து சூப்பரான இந்த ஊத்தப்பத்தை செய்து அசத்துங்க.

- Advertisement -