அவரைக்காய் சட்னி செய்வது இவ்வளவு ஈஸியா? இட்லி, தோசைக்கு தொட்டுக்க வித்தியாசமாக ஆரோக்கியமான காய்கறி சட்னி ரெசிபி இதோ உங்களுக்காக!

avarakkai-chutney_tamil
- Advertisement -

சதா ஒரே மாதிரியான சட்னி செய்து போர் அடித்து போனவர்களுக்கு இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ள இனி அசத்தலான சுவையில் ஆரோக்கியமான முறையில் காய்கறி போட்டு இப்படி ஒரு சட்னி செய்து கொடுத்தால் எப்படி இருக்கும்? சுவை உள்ள ஆரோக்கியம் நிறைந்த அவரைக்காய் சட்னி எப்படி எளிதாக நம் வீட்டில் தயாரிப்பது? என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு பகுதியில் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

தேவையான பொருட்கள்

  • அவரைக்காய் – 20
  • பெரிய வெங்காயம் – 3
  • தக்காளி – 3
  • வரமிளகாய் – 6
  • புளி – சிறு நெல்லிக்காய் அளவு
  • உப்பு – தேவையான அளவு.

    தாளிக்க: சமையல் எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்

  • கடுகு – அரை ஸ்பூன்
  • உளுந்து – ஒரு ஸ்பூன்
  • கருவேப்பிலை – ஒரு கொத்து.

செய்முறை

முதலில் கால் கிலோ அளவிற்கு அவரை காயை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இருக்கும் விதைகளை பிரித்து தோல் பகுதியை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அவரைக்காயை கிள்ளும் பொழுது இரு பக்கங்களில் இருக்கும் நாரை எடுத்து விட வேண்டும். விதைகள் தனியாகவும், தோல் பகுதிகளை துண்டு துண்டாக நறுக்கியும் வைத்துக் கொள்ளுங்கள். பின் தேவையான எல்லாவற்றையும் நறுக்கி வையுங்கள்.

- Advertisement -

இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். ஒரு ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் அவரைக்காய் விதைகளை சேர்த்து நன்கு வதக்கி விடுங்கள். வதங்கியதும் எடுத்து தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ளுங்கள். மீண்டும் கொஞ்சம் எண்ணெய் விட்டு தோல் பகுதிகளை தனியாக வதக்குங்கள். ஒவ்வொன்றையும் தனியாக வதக்கும் பொழுது தான் சரியான பக்குவத்தில் வதங்கும்.

பிறகு வெங்காயத்தை தோலுரித்து பொடி பொடியாக நறுக்கி சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் சுருள வதங்கியாதும் எடுத்து விடுங்கள். அதே போல தக்காளியையும் பெரிய பெரிய துண்டுகளாக சேர்த்து நன்கு வதக்குங்கள். சுருள வதங்கியதும் எடுத்துக் கொள்ளலாம். தேவைப்படும் பொழுது எண்ணெய் கொஞ்சம் விட்டுக் கொள்ளுங்கள்.

- Advertisement -

கடைசியாக வர மிளகாய் காம்பு நீக்கி சேர்த்து நன்கு வதக்கி எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் வதக்கிய எல்லா பொருட்களையும் நன்கு ஆற விட்டு விடுங்கள். ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்து, அதில் எல்லா பொருட்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு சிறு நெல்லிக்காய் அளவிற்கு புளியை விதைகள், நார் எல்லாம் நீக்கி சேருங்கள். இதனுடன் தேவையான அளவிற்கு உப்பு போட்டு நன்கு நைசாக மிக்ஸியை இயக்கி அரைத்து எடுத்துக் கொண்டு வாருங்கள்.

இதையும் படிக்கலாமே:
மொறு மொறுன்னு ஹோட்டல் தோசை சுடுவதற்கு மாவு இல்லையா? மீந்து போன சாதம் இருந்தால் சட்டென்று 10 நிமிஷத்தில் இப்படி மாவு ரெடி பண்ணலாமே!

இதற்கு ஒரு சிறு தாளிப்பு கொடுக்க தாளிப்பு கரண்டி ஒன்றை அடுப்பில் வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் உளுந்து சேர்த்து பொன்னிறமாக வரும் வரை காத்திருங்கள். உளுந்து நிறம் மாறியதும், ஒரு கொத்து கருவேப்பிலை உருவி போட்டு தாளித்து சட்டியில் சேர்த்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான், சூப்பரான ஆரோக்கியமான அவரைக்காய் சட்னி ரெசிபி ரெடி!

- Advertisement -