ஹோட்டல் தோசை போலவே கிரிஸ்பியான தோசை பலரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்றாக இருக்கிறது. இட்லி, தோசைக்கு மாவு அரைக்கும் பொழுது எந்த அளவிற்கு கிரிஸ்பியாக தோசை வரும் என்று தெரியாது ஆனால் மீந்து போன சாதம் கொண்டு கிரிஸ்பியான ஹோட்டல் தோசை போல நொடியில் தயார் செய்து அசத்தி விடலாம். இனி சாதம் மீந்து போச்சுன்னா மறக்காம இதை ட்ரை பண்ணி பாருங்க. தோசைக்கு இட்லி மாவு தேடவே மாட்டீங்க! சுவையான தோசை மாவு இன்ஸ்டன்ட் ஆக அரைப்பது எப்படி? என்பதை தொடர்ந்து தெரிந்து கொள்வோம் வாங்க.
தேவையான பொருட்கள்
- மீந்து போன சாதம் – ஒரு கப்
- ரவை – ஒரு கப்
- தயிர் – அரை கப்
- தண்ணீர் – ஒரு கப்
- உப்பு – தேவையான அளவு.
தோசை மாவு தயாரிக்கும் முறை
இன்ஸ்டன்டாக தோசை மாவு தயாரிக்க மீந்து போன சாதம் ஒரு கப் அளவிற்கு முழுமையாக எடுத்துக் கொள்ளுங்கள். இதனுடன் அதே அளவிற்கு உப்புமா செய்யும் ரவை சேர்த்து கொள்ளுங்கள். அரை கப் அளவிற்கு தயிர் சேர்த்துக் கொள்ளுங்கள். தயிர் அதிகம் புளிக்க கூடாது, தயிர் சேர்க்கும் பொழுது தோசை மொறு மொறு என்று கிரிஸ்பியாக வரும். அதே அளவிற்கு ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து விடுங்கள்.
பின் தேவையான அளவிற்கு உப்பு போட்டுக் கொள்ளுங்கள். ஒரு கப் மேலே கூடுதலாக தண்ணீர் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. பத்திலிருந்து 15 நிமிடம் அப்படியே ஊற விட்டு விடுங்கள். ரவை தண்ணீர் முழுவதையும் உறிஞ்சி கொண்டு விடும். அதன் பிறகு ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். இந்த பொருட்களை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து, நன்கு நைசாக மாவு போல அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். எல்லா மாவையும் இதே போல அரைத்து எடுத்த பின்பு தோசை வார்க்க வேண்டியது தான்.
இதையும் படிக்கலாமே:
இப்படிக் கூட இடியாப்பம் செய்யலாமா? இவ்வளவு சத்து நிறைந்த இடியாப்பத்தை இதுவரைக்கும் நம்ம கொள்ளுப்பாட்டி கூட, செஞ்சி தந்திருக்க மாட்டாங்க.
தோசை வார்க்க முதலில் தோசை கல்லை அடுப்பில் வைத்துக் கொள்ளுங்கள். கொஞ்சம் தண்ணீர் தெளித்து துடைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்பு ஒன்றரை கரண்டி மாவை எடுத்து ஊற்றி மெல்லியதாக பரப்புங்கள். சுற்றிலும் எண்ணெய் விட்டு காய விடுங்கள். ரெண்டு நிமிடத்தில் நன்கு பொன்னிறமாக பின்புறம் பொரிந்து வந்து விடும்.
அதன் பிறகு திருப்பி போட்டு ஒரு நிமிடம் விட்டு எடுத்து விடுங்கள். ஹோட்டலில் கொடுப்பது போலவே மொறு மொறுன்னு கிரிஸ்ப்பியான சூப்பரான டேஸ்டில் இன்ஸ்டன்ட் தோசை ரெசிபி ரெடி! இதே மாதிரி நீங்களும் தோசை செஞ்சி ட்ரை பண்ணி பாருங்க, இனி இட்லி மாவு தேடவே மாட்டீங்க! இனி எப்போதும் சாதம் மீந்து போனால் அதை கீழே கொட்ட வேண்டிய அவசியம் இல்லை. ரொம்ப சுலபமாக பத்து நிமிடத்தில் தோசை மாவு தயாரித்து வைத்தால் மொறு மொறு ஹோட்டல் தோசை கிரிஸ்பியாக உடனே செய்து அனைவரையும் அசைத்து விடலாம்.