அளவில்லா முடி உதிர்வை, அடுத்த நொடியே தடுத்து நிறுத்த இந்த ஒரு எண்ணெய் போதும்.

hair-fall-aavaram-poo
- Advertisement -

நிறைய பேருக்கு அளவில்லாமல் முடி உதிர்வு அதிகமாக இருக்கும். வேரோடு முடி தலையில் இருந்து உதிரத் தொடங்கும். சீப்பு வைத்து சீவ வேண்டாம். கையை தலையில் வைத்தாலே கையோடு முடி வந்துவிடும். இப்படிப்பட்டவர்கள் முடி உதிர்வை தடுப்பது ரொம்ப ரொம்ப கஷ்டமான விஷயம்தான். உங்களுடைய முடி உதிர்வு பிரச்சனையை சரி செய்ய நீங்கள் வேறு எந்த முயற்சியை எடுத்திருந்தாலும் சரி, ஒரே ஒருமுறை இந்த எண்ணெயையும் பத்து நாட்கள் தொடர்ந்து தடவி பாருங்கள். முடி உதிர்வதில் நிச்சயமாக நல்ல வித்தியாசத்தை காண முடியும்.

இந்த எண்ணெயை தயார் செய்ய நான் பயன்படுத்தப் போகும் பொருட்கள் காய்ந்த ஆவாரம்பூ – 1 கைப்பிடி அளவு, வெந்தயம் – 2 ஸ்பூன், கருஞ்சீரகம் – 2 ஸ்பூன், தேங்காய் எண்ணெய் – 50ML, மிக மிகக் குறைந்த அளவில் முதலில் இந்த எண்ணெயை தயார் செய்து ஸ்டோர் செய்து தலையில் தடவி பாருங்கள். உங்களுக்கு இந்த எண்ணெய் செட் ஆச்சுன்னா முடி உதிர்வு குறைவதாக உங்களுக்கு தெரிந்தால், இதையே அப்படியே தொடர்ந்து தேய்த்து வர முடி உதிர்வு படிப்படியாக குறைந்து அடர்த்தியாக கருமையாக வளர தொடங்கிவிடும்.

- Advertisement -

ஆவாரம் பூவை எடுத்து நீங்களே காய வைப்பதாக இருந்தால் நிழலிலேயே உலர வைக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் நாட்டு மருந்து கடைகளில் காய்ந்த ஆவாரம் பூ கிடைக்கிறது. அதை வாங்கி குறிப்புக்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். தேங்காய் எண்ணெய் மரச்செக்கு தேங்காய் எண்ணெயை குறிப்புக்கு பயன்படுத்த வேண்டும்.

அடுப்பில் ஒரு இரும்பு கடாயை வைத்து முதலில் தேங்காய் எண்ணெயை ஊற்றி லேசாக சூடு செய்ய வேண்டும். அதன் பின்பு ஆவாரம் பூவை போட்டு 2 நிமிடங்கள் காய வைக்க வேண்டும். அடுத்தபடியாக வெந்தயத்தையும் கருஞ்சீரகத்தையும் போட்டு அடுப்பை சிம்மில் வைத்து இந்த பொருட்களை காய விடுங்கள். சிடசிடப்பு அடங்கி வந்ததும் அதாவது மொத்தமாக 5 லிருந்து 7 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்து விடுங்கள்.

- Advertisement -

இந்த எண்ணெயை 24 மணி நேரம்  அப்படியே ஓரமா ஒரு மூடி போட்டு எடுத்து வைத்து விடுங்கள். அதன் பின்பு ஒரு வெள்ளை காட்டன் துணியில் வடிகட்டி பிழிந்து கொள்ளுங்கள். நாம் போட்டிருந்த பொருட்களின் சத்துக்கள் அனைத்தும் அந்த தேங்காய் எண்ணெயில் இறங்கி எண்ணெய் நிறம் மாறி இருக்கும். இந்த எண்ணெயை பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்து தினமும் பயன்படுத்தலாம்.

சாதாரணமாக நீங்கள் தேங்காய் எண்ணெயை தலைக்கு வைப்பீர்கள் அல்லவா. அதேபோல இந்த எண்ணெயை தலைக்கு பயன்படுத்தி வரலாம். தினமும் எண்ணெயை தலைக்கு வைக்க முடியாது என்பவர்கள் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் இந்த எண்ணெயை மயிர் கால்களில் படும்படி வைத்து நன்றாக மசாஜ் செய்து அதன் பின்பு தலைக்கு குளித்து விடுங்கள். 30 நிமிடம் கழித்து தலைக்கு குளித்தாலும் போதும்.

இரண்டு வாரம் இந்த எண்ணெயை பயன்படுத்தும் போதே உங்களுடைய முடி உதிர்வில் வித்தியாசத்தை காண முடியும். இதில் வெந்தயத்தை சேர்த்து இருக்கின்றோம். சளி பிடிக்கும் என்று கவலைப்படாதீங்க. கருஞ்சீரகம் குளிர்ச்சி தன்மையை அட்ஜஸ்ட் செய்து விடும். மண்டை பாரம் ஏற்படாது. சளி பிடிக்காது என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். உங்களுக்கு இந்த ரெசிபி பிடிச்சிருந்தா உங்க வீட்ல ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -