அவசரமான நேரத்தில் எந்த விதமான உதவியும் நேரத்திற்கு கிடைக்க விநாயகருக்கு செய்ய வேண்டிய எளிய பரிகாரம் என்ன?

vinayagar-viboothi

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அவசரத் தேவைகள் இருக்கும். தேவையான நேரத்தில் கிடைக்காத உதவி எந்த அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது நமக்குத் தெரியாது. கிடைக்க வேண்டிய நேரத்தில் எதுவும் கிடைத்தால் தான் அதற்கு மதிப்பு உண்டு. இப்படி அவசர தேவைகளுக்கு உதவி கிடைக்க வேண்டுமென்றால் இறைவனை எப்படி வழிபடலாம்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

ஒருவருக்கு திடீரென பணத்தேவை இருக்கும். அது அவர்களுடைய பணமாகவே இருந்தாலும் அது அவர்களுடைய கைக்கு கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். வங்கியில் போட்ட பணத்தை எடுக்க முடியாமல் கூட போகலாம். பணம் கொடுக்க வேண்டியவர் சரியான நேரத்திற்கு வர முடியாமல் போகலாம். இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சனைகள் வரும்.

இன்னொருவருக்கு மருத்துவ உதவி தேவைப்படும். தேவைப்படும் நேரத்தில் அவர்களால் சரியான சிகிச்சையை எடுத்துக் கொள்ள முடியாது. தாமதமாகும் ஒவ்வொரு நிமிடமும் நமக்கு இறைவனை வேண்டுவதை தவிர எந்த ஒரு வழியும் தெரியாமல் விழி பிதுங்கி நிற்ப்போம். என்னதான் மருந்து, மாத்திரைகள் என்று அந்த நேரத்தில் மனித உடலுக்கு கொடுத்தாலும் மனிதனுக்கு இறைவனுடைய அனுக்ரஹம் கிடைக்கும் பொழுது தான் அவன் தன்னம்பிக்கை கொள்கிறான். எந்த நேரத்தில் இறைவனை நினைக்காவிட்டாலும் நமக்கு ஒரு பிரச்சனை என்று வரும் பொழுது கண்டிப்பாக அவனை நினைத்து கையெடுத்து கும்பிடுவோம்.

sad-crying4

இறைவனையே நம்பாதவர்கள் கூட பிரச்சனை தலைக்கு மேல் இருக்கும் பொழுது, ‘கடவுளே நீதான் காப்பாத்தணும்’ என்று நிச்சயமாக வாய் விட்டுச் சொல்லி விடுவார்கள். அதுவரை கடவுள் இல்லை என்று நினைப்பவர்களுக்கு அந்த நிமிடத்தில் கடவுள் இருப்பதை உணர முடியும். எப்படியாவது அந்த பிரச்சனையில் இருந்து வெளி வந்து விட மாட்டோமா? என்கிற பரிதவிப்பு இருக்கும். இந்த மாதிரியான நேரங்களில் இறைவனை முழுமையாக சரணடைய செய்ய வேண்டிய பரிகாரம் தான் இது.

நீங்கள் வீட்டில் இருந்தாலும் அல்லது வெளியிடங்களில் அந்த சமயத்தில் இருந்தாலும் சரி, அருகில் இருக்கும் விநாயகர் சன்னிதிக்கு செல்லுங்கள். மருத்துவ மனையாக இருந்தால் அங்கு கட்டாயம் விநாயகர் சிலை இருக்கும். இப்படி ஒவ்வொரு இடங்களிலும் நிச்சயம் ஏதாவது ஒரு விநாயகர் சன்னிதி இருக்கும். சங்கடங்களை சட்டென நீக்குபவர் சங்கடஹர விநாயகர் ஆவார். இவரை வழிபடுபவர்களுக்கு எத்தனை துன்பங்கள் இருந்தாலும் அத்தனையும் நீங்கும் என்பது நம்பிக்கை.

vinayagar-abishegam

விநாயகரிடம் சென்று அங்கு இருக்கும் விபூதி அல்லது குங்குமத்தை சிறிதளவு எடுத்துக் கொள்ளுங்கள். வீட்டில் இருந்தால் வீட்டில் இருக்கும் குங்குமம், விபூதி இரண்டையும் சிறிதளவு எடுத்துக் கொள்ளுங்கள். அதனை உங்கள் நெற்றியிலும், கழுத்திலும் இட்டுக் கொண்டு தலையிலும் சிறிதளவு தூவி கொள்ளுங்கள். பின்னர் உங்கள் உடலின் மேல் சிறிதளவு தடவி கொள்ளுங்கள். பின்னர் ஒன்பது முறை விநாயகருக்கு தோப்புக்கரணம் போடுங்கள். யானை, பசு, கன்று அல்லது ஏதாவது ஒரு ஜீவராசிகளுக்கு வாழைப்பழத்தை வாங்கி கொடுங்கள். எத்தனையோ பிரச்சனையாக இருந்தாலும் உடனே உங்களுடைய பிரச்சனைக்கான தீர்வு கிடைத்துவிடும். தேவையான நேரத்தில் கிடைக்க வேண்டிய உதவிகள் கேட்டபடி கிடைக்கும் என்கிறது சாஸ்திரம்.