- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகடன் தீர்க்கும் விக்னேஸ்வரர் வழிபாடு

கடன் தீர்க்கும் விக்னேஸ்வரர் வழிபாடு

- Advertisement -

நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய அனைத்து விதமான கஷ்டங்களையும் தீர்த்து வைக்கக்கூடிய ஒரு அற்புதமான தெய்வமாக திகழக்கூடியவர் விநாயகப் பெருமான் என்று நம் அனைவருக்கும் தெரியும். நாம் செய்யக்கூடிய செயல்களில் இருக்கும் தடைகளை நீக்கி வெற்றிகளை தரக்கூடியவராகவும் இவர் திகழ்கிறார். அதனால் தான் இவரை எந்த ஒரு செயலை செய்வதற்கு முன்பாகவும் வழிபாடு செய்துவிட்டு செய்ய வேண்டும் என்று நம்முடைய முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். முழு முதற் கடவுளாகவும், தீர்க்கமான முடிவை எடுக்கக்கூடிய அற்புதமான கடவுளாகவும் திகழக்கூடியவராக இருப்பவர்தான் விநாயகப் பெருமான். அப்படிப்பட்ட விநாயகர் பெருமானை எந்த முறையில் வழிபாடு செய்தால் கடன் பிரச்சினை தீரும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

கடன் தீர விக்னேஸ்வரர் வழிபாடு

நம்மில் பலருக்கும் இருக்கக்கூடிய மிக முக்கியமான பிரச்சனைகளில் ஒன்றாக திகழ்வதுதான் கடன் பிரச்சனை அல்லது பணம் தொடர்பான பிரச்சனை. இந்த பண பிரச்சனையால் பலவிதமான கஷ்டங்களுக்கும் துன்பங்களுக்கும் ஆளாகி வருத்தப்பட்டு கொண்டு இருப்போம். நமக்கு இருக்கக்கூடிய கஷ்டங்களை நீக்கி நல்வாழ்வு தரக்கூடிய விநாயகராக திகழ்ந்தவர் தான் விக்னேஸ்வரர் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட விக்னேஸ்வரரை நாம் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை தோறும் வழிபாடு செய்யும்பொழுது கடன் தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் தீரும் என்றே கூறலாம்.

- Advertisement -

இந்த வழிபாட்டை நம்முடைய வீட்டிலும் செய்யலாம் அல்லது அருகில் இருக்கக்கூடிய விநாயகர் ஆலயத்திலும் செய்யலாம். இதற்கு 108 என்ற எண்ணிக்கையில் ஒற்றை செம்பருத்தியின் இலை வேண்டும். அதை சுத்தம் செய்து ஈரம் இல்லாமல் துடைத்துக் கொள்ளுங்கள். ஒரு சிறிய கிண்ணத்தில் சந்தனம், பச்சை கற்பூரம், ஜவ்வாது, பன்னீர், புனுகு, அரகஜா போன்ற வாசனை மிகுந்த பொருட்கள் அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். பிறகு அதை நம்முடைய மோதிர விரலால் எடுத்து ஒவ்வொரு இலையிலும் “ஸ்ரீம்” என்று எழுத வேண்டும். இவ்வாறு எழுதி தயார் செய்து வைத்துக்கொண்டு சரியாக செவ்வாய் ஹோரை நேரத்தில் விநாயகப் பெருமானுக்கு ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த அர்ச்சனையை செய்யும் பொழுது “ஓம் விக்னேஸ்வரரே போற்றி ஓம்” என்னும் மந்திரத்தை கூறிக் கொண்டே அர்ச்சனை செய்ய வேண்டும். வெற்றிலை, பாக்கு வைத்து தேங்காயை உடைத்து விநாயகப் பெருமானுக்கு வெல்லம் அல்லது வெல்லத்தால் செய்யப்பட்ட இனிப்பு பொருளை நெய்வேத்தியமாக வைத்து கடன் தொடர்பான பிரச்சனைகள் தீர வேண்டும், பண பிரச்சினைகள் விலக வேண்டும் என்று முழுமனதோடு வேண்டிக் கொள்ள வேண்டும். பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்துவிட்டு நெய்வேத்தியத்தை பிரசாதமாக பிறருக்கு தர வேண்டும். இந்த முறையில் தொடர்ச்சியாக 9, 11, 21 வாரங்கள் என்று தங்களுடைய கடன் தொகைக்கு ஏற்றார் போல் வாரங்களை சங்கல்பம் செய்து கொண்டு தொடர்ச்சியாக விநாயகப் பெருமானை வழிபாடு செய்ய அந்த கடன் பிரச்சினைகள் தீர்வதற்குரிய வழி பிறக்கும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே: வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட

ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை செவ்வாய் ஹோரையில் விநாயகப் பெருமானே இந்த முறையில் வழிபாடு செய்பவர்களுக்கு அவரின் அருளால் கடன் தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் நீங்கும், நிம்மதியான வாழ்க்கை அமையும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்