நாளை 1-10-2025 சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை பண்டிகை கொண்டாடப்படவிருக்கிறது. 2-10-2025 விஜயதசமித்திரு நாள் கொண்டாடப்படவிருக்கிறது. இந்த நன்னாளில் வீட்டில் பூஜை செய்ய வேண்டிய நல்ல நேரம் என்ன. வீட்டை சுத்தம் செய்த பிறகு, வீட்டில் இருக்கும் கெட்ட சக்திகள் வெளியேற வேண்டும் என்றால், ஆயுத பூஜை கொண்டாடுவதற்கு முன்பு கட்டாயம் நம் வீட்டில் செய்ய வேண்டிய அந்த ஒரு பரிகாரம் என்ன, ஆயுத பூஜை, விஜயதசமி வழிபாடு இவைகளை பற்றிய ஆன்மீகம் சார்ந்த சில பயனுள்ள தகவல்களை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோமா.
ஆயுத பூஜை கொண்டாடுவதற்கு முன்பு செய்ய வேண்டியது
ஆயுத பூஜை வந்தாலே வீட்டில் இருக்கும் பெண்கள் முதலில் செய்யக்கூடிய வேலை, வீட்டை சுத்தம் செய்வது. வீட்டில் மூலை முடுக்குகளில் இருக்கும் ஒட்டடைகளை கட்டாயம் சுத்தம் செய்து விடுங்கள். வீட்டில் உடைந்து போன பயன்படுத்தாமல் இருக்கும் பொருட்களை வீட்டிலிருந்து அப்புறப்படுத்தினாலே வீட்டில் இருக்கும் நெகட்டிவ் எனர்ஜி வெளியேறிவிடும். இது முதல் விஷயம்.
வீட்டை சுத்தம் செய்த பிறகு வீட்டின் மூலை முடுக்குகளில் கொஞ்சம் கோமியத்தை கொண்டு வந்து தெளித்து விடுங்கள். அதன் பிறகு சின்ன பிளாஸ்டிக் கப்புகளில் நிரம்ப கல்உப்பு போட்டு வீட்டின் மூலை முடுக்குகளில் வைத்து விடுங்கள். இன்று இரவே கல் உப்பை வீட்டின் நான்கு மூலைகளிலும் வைத்து விட்டு, மறுநாள் ஆயுத பூஜை வழிபாட்டை மேற்கொள்வது அதிசிறப்பு வாய்ந்த பலனைத் தரும்.
இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் உங்கள் வீட்டில் தங்கி இருக்கும் நெகட்டிவ் எனர்ஜி எல்லாம் வெளியேறும். கெட்ட சக்தியால் உங்களுக்கு கெடுதல் வராது இருக்கும். ஆயுத பூஜை கொண்டாடிய பலனை முழுமையாக பெற வேண்டும் என்றால் வீட்டை சுத்தம் செய்த பிறகு மேலே சொன்ன இந்த விஷயங்களை பின்பற்றினாலே போதும்.
இந்த வருடம் முழுவதும் வெற்றி உங்கள் பின்னால் வரும். மூன்று நாட்கள் கழித்து, நான்கு மூலைகளில் இருக்கும் கல் உப்பை எடுத்து தண்ணீரில் கரைத்து வீட்டிற்கு வெளியே கொட்டி விடுங்கள்.
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை வழிபடும் நேரம்
1-10-2025 சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை புதன்கிழமை, காலை 9:10 to 10:20 மணி வரை நல்ல நேரம். அதை தவறவிட்டவர்கள் காலை 10:40 டு 11:50 மணி வரை ஆயுத பூஜை வழிபாட்டை வீட்டில் மேற்கொள்ளலாம். கடை வைத்திருப்பவர்கள் அலுவலகத்தில் கூட இந்த நேரத்தில் பூஜை போடலாம் நல்லது.
சில பேர் மாலை நேரத்தில் தான் ஆயுத பூஜை வழிபாட்டை மேற்கொள்வார்கள் அப்படி என்றால் மாலை 4:30 மணியிலிருந்து 5:30 மணி வரை நல்ல நேரம் இருக்கிறது. அதை தவறவிட்டவர்கள், புதன்கிழமை மாலை 6 மணிக்கு மேலாக எந்த நேரத்தில் வேண்டும் என்றாலும் ஆயுத பூஜை வழிபாட்டை மேற்கொள்ளலாம்.
விஜயதசமி வித்தியா ஆரம்பம்
2-10-2025 வியாழக்கிழமை காலை 7:45 டு 8:50 மணி வரை நல்ல நேரம். அதை தவறவிட்டவர்கள் காலை 10:40 டு 12:00 மணி வரை வித்யா ஆரம்பம் செய்யலாம். பிள்ளைகளை பள்ளிக்கூடத்தில் சேர்ப்பவர்கள் சேர்க்கலாம். விஜயதசமி அன்று தசமி திதி மாலை 3:45 வரை இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆயுத பூஜையில் கட்டாயம் வைக்க வேண்டிய பொருட்கள்
உங்களுடைய வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு எந்தெந்த பொருட்கள் எல்லாம் ஆதாரமாக இருக்கிறதோ, அவை அனைத்தையும் ஆயுத பூஜை அன்று வழிபாடு செய்வது மிக மிக அவசியம். உதாரணத்திற்கு பிள்ளைகள் படிக்கும் புத்தகம், சமையலறையில் பயன்படுத்தக்கூடிய பொருட்கள், அலுவலக கணக்கு புத்தகங்கள், நீங்கள் செய்யும் வேலைக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள், இப்படி எல்லா பொருட்களையும் மஞ்சள் குங்குமப்பொட்டு வைத்து ஆயுத பூஜை அன்று அந்த ஆயுதங்களுக்கு நன்றியை தெரிவிக்க வேண்டும்.
குறிப்பாக வீட்டில் தன தானிய லாபத்திற்கு சமையலறையில் பயன்படுத்தும் ஆழாக்கு, அஞ்சரை பெட்டி, அருவாமனை, உப்பு ஜாடி இவைகளை சுத்தம் செய்து பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்யுங்கள். இந்த சமையல் பொருட்களை எல்லாம் பூஜை அறையில் வைக்கும் போது வெறும் பொருட்களை வைக்க கூடாது. ஆழாக்கில் கொஞ்சம் பச்சரிசி, கல் உப்பு ஜாடியில் உப்பு நிரம்ப இருக்கட்டும்.
இதையும் படிக்கலாமே: கடன் அடைய துர்காஷ்டமி வழிபாடு
அஞ்சறைப் பெட்டியில் சில தானிய பொருட்களை போட்டு வையுங்கள். இந்த ஆன்மீகம் சார்ந்த தகவல் இந்த வருட ஆயுத பூஜை வழிபாட்டிற்கு உங்களுக்கு பயனுள்ளபடி அமையும் என்ற நம்பிக்கையில் இன்றைய ஆன்மீகம் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.