நாளை ஆயுத பூஜை அன்று வண்டி, வாகனம் வைத்திருப்பவர்கள் இதை செய்தால் எந்த திருஷ்டி தோஷங்களும் அண்டாது தெரிந்து கொள்ளுங்கள்.

ayutha-pooja1
- Advertisement -

பொதுவாக ஆயுத பூஜை அன்று வண்டி, வாகனங்களுக்கு பிரத்தியேக பூஜைகள் செய்வது காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் ஒரு சம்பிரதாய முறையாகும். மகிஷாசுரனை வதம் செய்த அன்னை துர்கா தேவியின் ஆயுதங்களை பூஜை செய்து சிறப்பித்த நாளாக இந்த நாள் இருப்பதால் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டு வருகிறது. ஆயுத பூஜை அன்று நம்முடைய தொழிலுக்கு காரணமாக இருக்கும் ஆயுதங்களையும், ஆயுதம் சார்ந்த விஷயங்களுக்கும் பூஜைகள் செய்து சிறப்பிக்க ஒரு சிறந்த நாளாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

ayutha-pooja

இந்த நாளில் வண்டி, வாகனம் ஓட்டுபவர்கள், அதை தொழிலாக கொண்டவர்கள் ஆயுத பூஜை அன்று சுக்கிரனும், புதனும் இணைந்த ஓரையில் நன்றாக தண்ணீரால் சுத்தம் செய்து கழுவி துடைத்து, சந்தன குங்குமம் இட்டு, மலர்களை மாலையாக போட்டு, திருஷ்டிகள் நீங்க எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி குங்குமம் தடவி அதன்மேல் வண்டி வாகனத்தை ஏற்றுவது சம்பிரதாய நடைமுறை. இவ்வாறு செய்வதால் வண்டி வாகனங்களால் வரக்கூடிய வருமானம் பெருகும் என்பது நம்பிக்கை.

- Advertisement -

வண்டி வாகனங்கள் வைத்திருப்பவர்கள் நிறைய இடங்களுக்கு சுற்றித்திரிய கூடியவர்கள். பல்வேறு மனிதர்களையும், ஆட்களையும் பார்ப்பவர்கள். உங்களுடைய வண்டி வாகனங்கள் பயணம் செய்யாத தெருக்களும், இடங்களும் இருப்பதில்லை. எந்த இடத்தில்? எது இருக்கும்? என்பது நமக்கு தெரியாது. திருஷ்டிக்காக சில பொருட்களை திருஷ்டி சுத்தி போடுவது வழக்கம். இவற்றை முச்சந்தி எனப்படும் வீதிகளில் கழிப்பதை தொடர்ந்து செய்து வருகிறார்கள்.

thirusti

இவற்றை தெரியாமல் மிதித்தால் கூட திருஷ்டி தோஷம் ஏற்படுவதாக சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளது. அதனால் தான் திருஷ்டி கழிவுகளை கால் படாத இடங்களில் ஊற்ற கூறப்படுகிறது. ஆனால் அதை யாரும் பின்பற்றுவது கிடையாது. இதனால் அந்த வழியாக செல்லும் வண்டி, வாகனங்கள், சிறு குழந்தைகள் என்று அவற்றை மிதித்து செல்ல வேண்டியதாகிறது. இவ்வாறாக வண்டி வாகனங்கள் மூலம் ஏற்படும் திருஷ்டிகளை நீக்குவதற்கு என்ன செய்ய வேண்டும்? என்பதைத் தான் இப்பதிவின் மூலம் பார்க்க இருக்கிறோம்.

- Advertisement -

வண்டி வாகனங்கள் வைத்திருப்பவர்கள், அதன் மூலம் வருமானம் ஈட்ட கூடியவர்கள் அதற்கு உரிய மரியாதையைக் கொடுக்க வேண்டும். செய்யும் தொழிலே தெய்வம் என்பதைப் போல் நீங்கள் தெய்வமாக நினைக்கும் வண்டி வாகனங்களை பராமரிப்பது அவசியமாகும். வருமானத்தை தரக்கூடிய வண்டி வாகனங்களை தினமும் துடைத்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும். ஆயுத பூஜையான நாளைய நாளில் திருஷ்டிகளை கழிக்கும் பொழுது உங்களுடைய வண்டி வாகனத்திற்கு திருஷ்டி தோஷம் நீங்க இவ்வாறு செய்யுங்கள்.

neem-water

நீங்கள் வண்டி கழுவ பயன்படுத்தும் தண்ணீரில் சிறிதளவு பச்சை கற்பூரம், ஒரு கைப்பிடி அளவிற்கு வேப்பிலைக் கொத்து, ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் உங்களுடைய வாகனத்தை தண்ணீரில் கழுவி கழுவியபின் கடைசியாக இந்த தண்ணீரில் ஒருமுறை நன்றாக கழுவிக் கொள்ளுங்கள். அதன் பின் ஆயுத பூஜையை தொடங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யுங்கள். இவ்வாறு செய்வதால் வாகனங்களால் உங்களுக்கு வரக்கூடிய திருஷ்டிகள் நீங்கும் என்பது நம்பிக்கை. தெரிந்தோ தெரியாமலோ வாகனங்களால் திருஷ்டி தோஷம் ஏற்பட்டு இருந்தால் அவைகள் இதன் மூலம் நீங்கி விடும் என்பது ஐதீகம்.

இதையும் படிக்கலாமே
நவராத்திரி விழாவை கொண்டாட முடியாதவர்கள் நாளைய நாள் 24/10/2020 துர்காஷ்டமி அன்று இதை நிவேதனம் வைத்து பூஜை செய்தால் கோடான கோடி பலன்கள் கிடைக்கும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -