நவராத்திரி விழாவை கொண்டாட முடியாதவர்கள் நாளைய நாள் 24/10/2020 துர்காஷ்டமி அன்று இதை நிவேதனம் வைத்து பூஜை செய்தால் கோடான கோடி பலன்கள் கிடைக்கும்.

durgai-amman
- Advertisement -

உலகம் முழுவதும் இருக்கும் இந்துக்களால் மகிஷாசுரனை வதம் செய்த துர்கா தேவியை போற்றும் விதமாக ஒன்பது ராத்திரிகள் நவராத்திரிகளாக கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான பூஜைகள் செய்து நவராத்திரி கொலு வைத்து அக்கம் பக்கத்தினர், உற்றார் உறவினர்களை அழைத்து பெண்கள் பயபக்தியுடன் பூஜைகள் மேற்கொள்ளும் இந்த நவராத்திரி நாட்களின் சிறப்பம்சமாக எட்டாம் நாளாக வரும் அஷ்டமி அன்று துர்காஷ்டமி கொண்டாடப்படுகிறது.

durga

நவராத்திரி விழாவை கொண்டாட முடியாதவர்கள் கூட எட்டாம் நாளான துர்காஷ்டமி அன்று துர்கை அம்மனை நினைத்து வீட்டிலேயே அல்லது கோவில்களுக்கு சென்று துர்கா தேவியை வணங்கி வந்தால் கோடான கோடி பலன்கள் கிடைப்பதாக ஐதீகம் உள்ளது. துர்காஷ்டமி பூஜைக்கான எளிய முறைகளை இப்பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

- Advertisement -

துர்காஷ்டமி அன்று துர்கையை வேண்டி வணங்குபவர்களுக்கு வேண்டியது எல்லாம் கிடைக்கும். நினைத்ததெல்லாம் நடக்கும் என்பது நம்பிக்கை. குறிப்பாக உங்களை சுற்றி இருக்கும் பகைவர்களின் சூழ்ச்சிகள் முறியடிக்கப்படும். வாழ்க்கையில், தொழிலில், உத்தியோகத்தில் என்று வருமானத்தை அதிகரிக்கக் கூடிய வகையில் துர்காஷ்டமி தின பூஜை பிரத்தியேகமாக இடம் பெறுகிறது. குடும்பத்தில் இருக்கும் அனைவரும் துர்காஷ்டமி பூஜையில் கலந்து கொண்டு துர்க்கை அம்மனை பிரார்த்தனை செய்வது சிறப்பான பலன்களைத் தரும்.

durga

சார்வரி வருடம், அக்டோபர் 24, 2020 அன்று வரும் துர்காஷ்டமி திதி மதியம் 12:04 மணிக்கு முடிவடைகிறது. இந்த நேரத்தில் துர்கை அம்மன் படத்திற்கு சந்தனம், குங்குமம் இட்டு துர்கைக்கு விருப்பமான மலர்கள் சாற்றி அலங்கரிக்க செய்ய வேண்டும். பின்னர் துர்க்கைக்கு உரிய காயத்ரி மந்திரங்கள், அஷ்டோத்திரங்களையும் வாசித்து தூப, தீபம் காண்பித்து வழிபட வேண்டும். துர்காஷ்டமி அன்று துர்க்கைக்கு விருப்பமான நைவேத்தியமாக பாயாசம் படைத்து ஒன்பது வயதிற்கும் கீழ் இருக்கும் பருவமடையாத சிறுமிகளை வீட்டிற்கு வரவழைத்து அவர்களுக்கும் கொடுத்து, குடும்பத்தில் இருக்கும் அனைவரும் பிரசாதமாக எடுத்துக் கொள்வது அவசியமாகும்.

- Advertisement -

கோவில்களுக்கு சென்று வழிபட நினைப்பவர்கள் துர்காஷ்டமி அன்று துர்க்கை அம்மனுக்கு, சிவப்பு நிற வஸ்திரம் சாற்றி, சிவப்பு நிற மலர்களால் அர்ச்சனை செய்து, எலுமிச்சை தீபம் ஏற்றி வர குடும்பத்தில் இருக்கும் அத்தனை பிரச்சனைகளும் நீங்கும். மன இறுக்கத்தில் இருப்பவர்கள், மன அழுத்தத்தில் இருப்பவர்கள் அதிலிருந்து விடுபட துர்கா தேவியை மனதார நினைத்து மந்திரங்களை உச்சரித்தாலே மன அமைதி கிடைக்கும். இன்றைய நாளில் துர்க்கை அம்மனுக்கு படைத்த எலுமிச்சம் பழத்தை வாங்கி வந்து வீட்டின் பூஜை அறையில் வைத்துக் கொள்வது வீட்டில் இருக்கும் துஷ்ட சக்திகளை அழித்து, நேர்மறை ஆற்றல்களை வீடு முழுவதும் பரவச் செய்யும்.

durga

துர்கை அம்மன் மகிஷாசுரனை அழித்தது போல் உங்களை சுற்றி இருக்கும் பாவ வினைகளை துவம்சம் செய்யும். தொழில் ரீதியான போட்டி, பொறாமைகளை எதிர் கொள்வதற்கான தைரியம் கொடுக்கும். வீண்பழி சுமப்பவர்கள், தவறே செய்யாமல் தண்டனை அனுபவிப்பவர்கள் துர்காஷ்டமி அன்று துர்க்கை அம்மனை வணங்கி அருள் பெற்றுக் கொள்ளுங்கள் நல்லது நடக்கும்.

இதையும் படிக்கலாமே
பவுர்ணமியில் இந்த மரத்திற்கு தண்ணீர் ஊற்றினால் என்ன நடக்கும்? 1 ரூபாய் இருந்தால் போதும் பண கஷ்டம் தீருமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -