தீமைகள் அகன்று நன்மைகள் பெறுக உதவும் அய்யனார் மந்திரம்

Ayyanar1

அய்யனார் சுவாமி கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களின் காவல் தெய்வமாக போற்றப்படுகிறார். இவர் பலருக்கும் குல தெய்வமாக இருக்கிறார். அய்யனாருக்கு சிலர் கிடா வெட்டி பொங்கல் வைப்பது வழக்கம். அதே சமயம் சிலர் சைவ முறையிலும் அய்யனாரை வழிபடுகின்றனர். அய்யனாரை எவர் ஒருவர் பூஜித்து வழிபட்டாலும் அவருக்கு வேண்டிய வரத்தை நல்கி எப்போதும் காவலாக இருந்து பார்த்துக்கொள்கிறார். அந்த வகையில் ஐயனார் வழிபாடு சமயத்தில் கூறவேண்டிய அய்யனார் மந்திரம் இதோ.
kula dheivam

ஐயனார் மந்திரம்:

ஓம் அரிகர புத்திராய,
புத்திர லாபாய
சத்துரு விநாசகனாய
மத கஜ வாகனாய
பூத நாதாய அய்யனார் சுவாமியே நமக!

அய்யனாரை வழிபடும் சமயத்தில் இந்த மந்திரத்தை குறைந்தது 9 முறை ஜபித்து வழிபடலாம். கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் பலர் தங்கள் நிலத்தில் சிறிய அய்யனார் கோவில் அமைத்து அவர்களே அனைத்து வழிபாடுகளையும் நடத்துவது வழக்கம். அது போன்ற சமயங்களில் இந்த மந்திரத்தை கூறி வழிபட்டால் அய்யனாரின் பரிபூரண அருள் கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே:
உலகின் ஆதி சக்தி ஆனவளின் மூல மந்திரம் – உச்சரித்தால் நிச்சய பலன்

English Overview:
Here we have Ayyanar mantra in Tamil. Ayyanar is very famous God in village side of Tamil nadu. Ayyanar is a God who safeguard all the people from evil power.