உலகின் ஆதி சக்தி ஆனவளின் மூல மந்திரம் – உச்சரித்தால் நிச்சய பலன்

Amman1

மருவூரிலே குடிகொண்டு மக்களை அருள் வெள்ளத்தில் மூழ்க செய்கிறாள் அன்னை ஆதி பராசக்தி. அன்னையின் சக்தியை உணர்ந்த பலர் நாள் தோறும் அவளை நாடி செல்கின்றனர். பக்தர்களுக்கு வேண்டிய வரத்தினை நல்கி எப்போதும் தன் பக்தர்களை கவசம் போல காக்கிறாள் அன்னை ஆதி பராசக்தி. அவளுக்குரிய மூல மந்திரம் அதை ஜெபிப்போருக்கு எப்போதும் எந்த தீங்கும் நேருவது கிடையாது. அதோடு வீட்டில் என்றும் லட்சுமி கடாட்சம் பெருகுகிறது. இப்படி பல சிறப்புகள் கொண்ட மூல மந்திரம் இதோ.

om manthiram

ஓம் சக்தி மூல மந்திரம் :
ஓம் சக்தியே பராசக்தியே
ஓம் சக்தியே ஆதிபராசக்தியே
ஓம் சக்தியே மருவூர் அரசியே
ஓம் சக்தியே ஓம் விநாயகா
ஓம் சக்தியே ஓம் காமாட்சியே
ஓம் சக்தியே ஓம் பங்காரு காமாட்சியே

amman

இந்த மந்திரத்தை தினம் தோறும் ஜபிப்பது சிறந்தது. தினம் தோறும் ஜபிக்க இயலாதவர்கள் செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமைகளில் இதை ஜபித்து ஆணையின் பரிபூரண அருளை பெறலாம். மேலும் ஆடி மாதம் என்றாலே அம்மன் வழிபாட்டிற்குரிய ஒரு சிறப்பான மாதமாக இருக்கிறது. இம்மாதத்தில் வருகின்ற அனைத்து செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பராசக்தியை வழிபடுவதற்கு ஏதுவான தினங்களாக இருக்கிறது. இந்த தினங்களில் வீட்டின் பூஜை அறையில் அம்பாள் படத்திற்கு வாசமிக்க பூக்களை சமர்ப்பித்து, சர்க்கரைப் பொங்கல் அல்லது பாயாசம் நைவேத்யம் வைத்து, மாவிளக்கு தீபமேற்றி மேற்கூறிய சக்தி மூல மந்திரத்தை 108 முறை முதல் 1008 முறை வரை துதித்து வழிபடுவதால் உடல் மற்றும் மனோபலம் பெருகும். குடும்பத்தில் சுபிட்சங்கள் பெருகும். குறிப்பாக திருமண வயதை அடைந்தும் வரன் அமையாமல் வருந்திய பெண்களுக்கு விரைவில் நல்ல வரன் அமைந்து திருமணம் வாழ்க்கை சிறக்கும். குழந்தை பாக்கியம் இல்லாமல் தவித்தவர்களுக்கு நல்ல புத்திரப்பேறு கிடைக்கும். கல்வி கற்பதில் இருந்து வந்த தடைகளும், தாமதங்களும் நீங்கி சிறந்த முறையில் தேர்ச்சி பெற முடியும். தொழில் வியாபாரங்களில் அதிக அளவு வாடிக்கையாளர்கள் கிடைத்து லாபங்கள் அதிகரிக்கும். வீட்டில் இருக்கின்ற தரித்திர நிலை நீங்கி செல்வ வளம் பெருகும். துஷ்ட சக்திகளால் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகள் நீங்கி வளமை பெருகும்.

MathuraKaliamman

அன்னை ஆதிபராசக்தியின் மகிமையை உணர்ந்த பலர் வருடம் தோறும் விரதம் இருந்து மாலை அணிந்து அவளை தரிசிக்க மருவூர் செல்கின்றனர். அப்படி தரிசிக்க செல்பவர்கள் தங்கள் கரங்களாலேயே அம்மனின் சுயம்பு ரூபத்திற்கு அபிஷேகம் செய்யலாம். ஆனால் ஒரே குறை என்னவென்றால் இதற்க்கு ஒரு கணிசமான தொகையை செலுத்த வேண்டி உள்ளது. ஆகையால் இந்த ஒரு அறிய அபிஷேக முறையானது பல்லாயிரம் ஏழைகளின் ஒரு நாள் கூலியை பதம் பார்க்கிறது. அன்னையின் அருளால் இவை அனைத்தும் விரைவில் இலவசமாகி பல கோடி மக்கள் அன்னையின் அருள் பெற பிராத்திப்போம்.

இதையும் படிக்கலாமே:
வீட்டில் செல்வம் நிலைக்க உதவும் லட்சுமி காயத்ரி மந்திரம்

English Overview:
Here we have Goddess Om Sakthi mantra in Tamil. This is also called as Adhiparasakthi moola manthiram in Tamil. If one chant this mantra on Tuesday and Friday then he will get blessings from Goddess Adhipara sakthi.