ஐயப்ப பக்தர்கள் கொதிக்கும் எண்ணெயில் கைவிடும் நேரடி காட்சிகள்

ayyappa devotee

சித்து விளையாட்டு அல்லது ஆன்மீக அற்புதங்கள் போன்றவற்றை நமது நாட்டு ஞானிகள் மற்றும் சித்தர்கள் மக்களுக்கு காட்டியது சாமானிய மக்களை ஆன்மீகத்தில் உயர்வு நிலையை எட்டுவதற்கான ஊக்கப்படுத்தும் ஒரு தந்திரமாக பயன்படுத்தினரே தவிர, இவற்றிலேயே ஒரு மனிதன் மூழ்கி விடக்கூடாது என்பதற்காக தான். ஆனாலும் இறைவனின் மீது முழுமையான நம்பிக்கை கொண்ட பக்தர்களுக்கு எதுவும் சாத்தியம் என்பதை அவ்வப்போது நமக்கு உணர்த்தப்படுகிறது. வாருங்கள் அப்படிப்பட்ட காணொளி ஒன்றை நாம் இங்கு காண்போம்.

இக்காணொளி கர்நாடக மாநிலத்தில் உள்ள தக்ஷிண கன்னட மாவட்டத்தில் படப்பிடிக்கப்பட்டதாகும். இந்த காணொளியில் ஒரு கோவிலில் நடக்கும் ஐயப்ப பூஜைக்காக அப்பம் பிரசாதம் அக்கோயில் வளாகத்திலேயே ஒரு வாணலியில் இடப்பட்டு நன்கு பொரித்து கொண்டிருக்கிறது . அப்பகுதியில் இருக்கும் ஐயப்ப பக்தர்களின் குரு சாமி பக்தர் ஒருவர் ஐயப்பனை வேண்டி வாணலியில் கொதித்து கொண்டிருக்கும் எண்ணையில் இருக்கும் அப்பங்கள் சிலவற்றை தனது வெறும் கைகளை கொண்டு எடுத்து பக்கத்திலிருக்கும் பாத்திரத்தில் போட்டு செல்கிறார்.

அவரை தொடர்ந்து அங்கிருக்கும் பல ஐயப்ப பக்தர்கள் ஒருவர் பின்பு ஒருவராக வரிசையில் வந்து தங்களின் வெறும் கைகளால் கொதிக்கின்ற எண்ணெய் இருக்கும் வாணலியில் தங்களின் வெறும் கைகளை விட்டு அப்பங்களை எடுத்து அருகிலுள்ள பாத்திரத்தில் போட்டு செல்கின்றனர். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் கொதிக்கின்ற எண்ணையில் தங்களின் வெறும் கைகளை விட்டு அப்பங்களை எடுத்தும் அவர்களின் கைகளில் எத்தகைய காயங்களும் ஏற்படவில்லை என்பது தான்.

தமிழ் நாட்டில் எப்படி தங்களின் பக்தியின் சத்தியத்தன்மையை சோதிக்க பக்தர்கள் எவ்வாறு தீக்குண்டம் இறங்குவதை போன்றே இப்பகுதியில் இருக்கும் ஐயப்ப பக்தர்கள் இத்தகைய சடங்கை பல ஆண்டுகளாக செய்வதாக கூறப்படுகிறது. சாதாரண நிலையிலிருக்கும் எந்த ஒரு மனிதனும் 100 டிகிரிக்கு மேல் கொதித்து கொண்டிருக்கும் எண்ணெய் அல்லது தண்ணீரில் வெறும் கைகளை இட்டால் கைகள் வெந்து போகும். ஆனால் சக்தி வாய்ந்த சபரிமலை ஐயப்பனை தங்கள் உடல், மனம், ஆன்மா என அனைத்திலும் நிறைத்திருக்கும் ஐயப்ப பக்தர்கள் அந்த சபரிநாதனின் அருளாற்றல் பெற்று எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு இந்நிகழ்வு ஒரு சிறிய எடுத்துக்காட்டு.