அனைத்து கஷ்டங்களையும் போக்கும் ஐயப்பன் ஸ்லோகம்

sabarimalai-aiyyapaa-compressed

நாம் உண்மையான பக்தியுடன் இறைவனை நோக்கி எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும், நம்மை விருப்புகிற இறைவனும் நம்மை நோக்கி ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்கிறார். இந்து மதத்தில் உக்கிர தெய்வங்கள் எனப்படும் சக்தி மிகுந்த தெய்வங்களை வழிபடுவதற்கு ஒரு குறிப்பிட்ட காலம் விரதம் அனுஷ்டித்து பின்பு வழிபடுவதால் நமது அத்தனை பிரச்சனைகளும் தீர்ந்து, நமது விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறுகிறது. அப்படி சக்தி வாய்ந்த ஒரு தெய்வமான ஸ்ரீ ஐயப்பன் ஸ்லோகம் இதோ.

ஐயப்பன் ஸ்லோகம்

லோக வீரம் மஹா பூஜ்யம்,
சரவ ரக்ஷா கரம் விபும்,
பார்வதி ஹ்ருதயானந்தம்,
சாஸ்தாரம் பிரணமாம் யஹம்
விப்ர பூஜ்யம், விஸ்வ வந்தியம் ,
விஷ்ணு ஷம்போ பிரியம் சுதம்,
க்ஷீப்ர பிரசாத நிறதம்,
சாஸ்தாரம் பிரணமாம் யஹம்

மத்த மாதங்க கமனம்,
காருன்யமிருத பூரிதம்
சர்வ விக்ன ஹரம் தேவம்,
சாஸ்தாரம் பிரணமாம் யஹம் 3
அஸ்மத் குலேஷ்வாரம் தேவம்,
அஸ்மத் சத்ரு வினாசனம்,
அஸ்மத் இஷ்ட பிரத தரம்,
சாஸ்தாரம் பிரணமாம் யஹம் 4

padhinettu padi aiyyapa

பாண்டயேஷ வம்ச திலகம்,
கேரலே கேலி விக்ரஹம்,
அர்த்த திரனா பரம் தேவம்,
சாஸ்தாரம் பிரணமாம் யஹம்
த்ரியம்பக புராதீசம்,
கனதிபா சமன்விதம்,
கஜாரூடம் அஹம் வந்தே,
சாஸ்தாரம் பிரணமாம் யஹம்

- Advertisement -

சிவ வீர்ய சமுத் பூதம்,
ஸ்ரீநிவாச தநுட்பவம்,
சிகி வஹனுஜம் வந்தே,
சாஸ்தாரம் பிரணமாம் யஹம்
யஸ்ய தன்வந்தரீர் மாதா,
பிதா தேவோ மஹேஸ்வர,
தம் சாஸ்தாரமஹம் வந்தே,
மஹா ரோக நிவாரணம்.

manigandan

பூதானத்த, சதானந்த,
சர்வ பூத தயா பர,
ரக்ஷ ரக்ஷ மஹா பாஹோ,
சாஸ்திரே தூபம் நமோநம
அஷ்யமா கோமலா விஷாலா தானும் விசித்திரம்,
வாசோ அவாசன ஆரூநோத்பல தம ஹஸ்தம்,
ஊத்துங்க ரத்ன மகுடம், குடிளாகிர கேசம்,
சாஸ்தரமிஷ்ட வராதாம் சரணம் ப்ரபத்யே

sabarimala temple

நைஷ்டிக பிரம்மச்சாரியாக சபரிமலையில் அமர்ந்து அருள்பாலிக்கும் ஸ்ரீ ஐயப்பனை போற்றும் ஸ்லோகம் இது. ஐயப்பனுக்கு 48 நாட்கள் விரதம் இருந்து, சபரிமலையில் வழிபட இருக்கும் காலத்தில் எப்படி நாம் திரிகரண சுத்தியுடன் இருந்து பூஜிக்கிறோமோ, அதே திரிகரண சுத்தியுடன் தினமும் அல்லது வெள்ளிக்கிழமைகளில் ஐயப்பனை மனதார வழிபட்டு இந்த ஸ்லோகத்தை படித்து வந்தால் உங்கள் வாழ்வில் ஏற்பட்டிருக்கும் எப்படிபட்ட கஷ்டங்களும் நீங்கும். உங்களின் மனக்குறைகள் தீரும். நீங்கள் நடக்க விரும்பும் காரியங்கள் ஒவ்வொன்றாக நடக்க தொடங்கும். துஷ்ட சக்திகள் மற்றும் தீய எண்ணங்கள் உங்களை அணுகாது காக்கும். இந்த ஸ்லோகத்தை ஐயப்பனுக்கு மலை அணிந்து விரதம் இருக்கும் காலத்தில் தினமும் துதித்து வருவது மிகுந்த பலனளிக்கும்.

புராணங்களின் படி மகாவிஷ்ணு மோகினி எனும் அழகிய பெண்ணாக உருவம் பெற்றிருந்த போது, சிவ பெருமானின் சூட்சம யோக சக்தியும் மோகினி அவதாரத்திலிருந்த திருமாலின் சக்தியும் ஒன்று கலந்து தோன்றிய கடவுளின் வடிவம் தான் ஸ்ரீ ஐயப்பன். சக்தியின் வடிவாக தோன்றிய ஐயப்பனை “பந்தள” அரசர் தனது குழந்தையாக தத்தெடுத்து வளர்த்தார். தனது அவதார நோக்கத்தை உணர்ந்த ஐயப்பன், பம்பை நதி ஓடும் அடர்ந்த காடுகள் நிறைந்த சபரிமலையில் வீற்றிருந்து தனது பக்தர்களுக்கு அருள் புரிகின்றார்.

இதையும் படிக்கலாமே:
கண்ணன் சுலோகம்

இது போன்று மேலும் பல மந்திரங்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Ayyappan slokam in Tamil or Ayyappan slogam in Tamil or Ayyappan slogan in Tamil. This is the powerful mantra of Lord Ayyappa in Tamil. It is also called as Ayyappan mantra or Ayyappan manthiram in Tamil.