கண்ணன் ஸ்லோகம்

Krishnar-1-1
- Advertisement -

மனதை எவன் ஆள்கிறானோ அவனே ஞானி. ஆனால் அதிகமான மக்களோ தங்கள் மனங்களினால் ஆளப்படுகின்றனர். நமது மனதில் பெரும்பாலான சமயங்களில் “பொறாமை, கோபம், இன்ப நுகர்ச்சி” விருப்பங்கள் ஆகிய எண்ணங்கள் மற்றும் சிந்தனைகளே அதிகம் உருவாகிறது. இது நமது உடல் மற்றும் மனதில் எதிர்மறையான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இவற்றிற்கு சிறந்த தீர்வாக இருக்கும் “கண்ணன் ஸ்லோகம்” இதோ.

kannan

கண்ணன் ஸ்லோகம்

ஸமஸ்த கோபநதனம் ஹ்ருதம்புஜைகமோஹனம்
நமாமி குஞ்ஜமத்யகம் ப்ரஸன்ன பானுசோபனம்
நிகாமகாம தாயகம் த்ருகந்தசாருஸாயகம்
ரஸாலவேணுகாயகம் நமாமி குஞ்ஜநாயகம்

- Advertisement -

அனைத்து அம்சங்களையும் தன்னுள் முழுமையாக கொண்ட திருமாலின் ஒன்பதாவது அவதாரமான கண்ணனை போற்றும் ஸ்லோகம் இது. இந்த ஸ்லோகத்தை தினந்தோறும் எப்போது வேண்டுமானாலும் 108 முறை துதிப்பது நல்லது. புதன், சனிக்கிழமைகளிலும், மாதத்தில் வரும் ஏகாதசி தினங்களிலும் காலையில் எழுந்து குளித்து முடித்தவுடன் உங்கள் பூஜையறையில் இருக்கும் கண்ணனின் படத்திற்கு சில துளசி இலைகளை சமர்ப்பித்து, இந்த ஸ்லோகத்தை 27 முறை அல்லது 108 முறை துதித்து வர உயர்ந்த சிந்தனைகளும், எண்ணங்களும் மனதில் தோன்றும். உங்களிடமிருக்கும் எதிர்மறை குணங்கள் நீங்கும். ஆக்கபூர்வமான ஆற்றல்கள் பெருகும்.

Arjuna with Krishna

பாரதத்தில் மீண்டும் சனாதன தர்மத்தை நிலைநாட்டிய “ஸ்ரீ ஆதிசங்கரர்” பகவான் கண்ணனின் மீது இயற்றிய “கிருஷ்ணாஷ்டகம்” என்கிற பாடல் தொகுப்பில் இடப்பெற்றிருக்கும் கண்ணனின் சுலோகம் இது. “தாமரை போன்ற இதயத்தால் அனைவரையும் வசீகரிப்பவரும், சூரியனை போன்று பிரகாசிப்பவரும், பக்தர்களுக்கும் இன்ன பிற மக்களுக்கும் அனைத்தையும் தந்து, அருள்புரியும் கண்ணா, உன் கடைக்கண் பார்வையால் எங்கள் அனைவரையும் கடைதேற்றுவாயாக” என்பது இந்த கண்ணன் ஸ்லோகத்தின் பொதுவான பொருளாகும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
வராஹ சரம ஸ்லோகம்

இது போன்று மேலும் பல மந்திரங்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Kannan slokam in Tamil or kannan slogam in Tamil or Kannan slogan in Tamil. It is also called as Kannan mantra in Tamil or Kannan manthiram in Tamil.

- Advertisement -