உங்களை அழகுப்படுத்திக் கொள்ள எந்த பொருட்களை வாங்கினாலும் அது உங்களுக்கு செட்டாகாதா? நல்ல ட்ரஸ், நல்ல நகை, ஒரு செருப்பு கூட சரியாக செட் ஆகாதா? அப்ப இத படிங்க.

chandran
- Advertisement -

சில பேருக்கு தங்களை அழகி படுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் இருக்கும். ஆனால் அவர்களுடைய அழகை வெளிப்படுத்தும் விதமாக, அவர்கள் எந்த பொருளை வாங்கி அணிந்து கொண்டாலும் அது அழகாக இருக்காது. புதியதாக ஒரு ஆடை எடுத்தால் அந்த ஆடை பார்ப்பதற்கு நன்றாக இருக்கும். ஆனால் அந்த உடை இவர்களுக்கு செட்டாகாது. ஒரு செருப்பு கூட இவர்களுடைய காலுக்கு சரியாக செட்டாகாது. ஒரு நகையை கூட அழகாக வாங்கி போட்டு அனுபவிக்க முடியாது. தங்கம் வைரம் வெள்ளி வரைக்கும் போக வேண்டாம். சாதாரணமாக பேன்சியாக கிடைக்கக்கூடிய பொருட்கள் கூட இவர்களுக்கு அழகாக கிடைக்காது.

ஆனால் சில பேருக்கு பத்து ரூபாய் கொடுத்து பிளாஸ்டிக் கம்மல் வாங்கி போட்டாலும் பளிச்சென சூப்பராக இருக்கும். சாதாரண ஆடையை அணிந்திருந்தாலும் அவர்களுக்கு அது பக்காவா சூட்டாகி இருக்கும். ரோட்டோரங்களில் செருப்பை வாங்கி போட்டாலும் அவர்களுடைய கால்களுக்கு அவ்வளவு பொருத்தமாக இருக்கும் என்றால் பாருங்களேன். இப்படி எல்லாம் உங்களை அழகுப்படுத்திக் கொள்வதில், உங்களுக்கு பிரச்சனைகள் வந்துள்ளதா. நீங்கள் ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி இனி உங்களை அழகுப்படுத்திக் கொள்ள வாங்க வேண்டிய பொருட்களை இந்தக் கிழமையில் இந்த நேரத்தில் சென்று வாங்குங்கள். உங்களுக்கு எல்லாம் நல்லதாகவே அமையும்.

- Advertisement -

அழகுக்கு பெயர் போன கிரகம் சந்திரன். இந்த சந்திரனுக்கு உரிய நாள் திங்கட்கிழமை. திங்கட்கிழமையில் நீங்கள் உங்களுக்கான புதிய பொருட்களை வாங்கினால் அது உங்களுக்கு அழகானதாக அமையும். புதியதாக ஆடை வாங்க, புதியதாக அழகு சாதன பொருட்கள் வாங்க, தங்கம் வாங்க வேண்டும் என்றால் கூட இந்த கிழமையில் வாங்கிக் கொள்ளலாம். (பௌர்ணமி அன்று சந்திர பகவானை தரிசனம் செய்து வணங்கி வழிபாடு செய்யுங்கள்.)

அடுத்து வெள்ளிக்கிழமை. சுக்கிர பகவானும் அழகுக்கு உரிய கிரகம் தான். சுக்கிர பகவானுக்கு உரிய கிழமை வெள்ளிக்கிழமை. வெள்ளிக்கிழமை அன்று வெள்ளி ஹோரை வரும் சமயத்தில் உங்களுக்கு தேவையான அழகு சாதன பொருட்களை வாங்கலாம் தவறு கிடையாது. சில பெண்கள் தங்களை மேலும் மேலும் அழகு படுத்திக் கொள்ள பியூட்டி பார்லர் செல்லக்கூடிய வழக்கம் இருக்கும் அவர்களும், இந்த திங்கட்கிழமையை வெள்ளிக்கிழமையை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஆனால் வெள்ளிக்கிழமைகளில் முடி திருத்துவது, புருவங்கள் திருத்துவது போன்ற விஷயங்களை மட்டும் செய்யாதீங்க.

- Advertisement -

இதையும் படிக்கலாமே: இன்று செப்டம்பர் மாதத்தில் வந்திருக்கும் அதிசக்தி வாய்ந்த ஒரே ஒரு மைத்ரேய முகூர்த்தம். புரட்டாசி மாத சனிக்கிழமையோடு வந்திருப்பதால், இந்த நேரத்தை யாரும் தவற விடாதீங்க.

ஆண்களும் அப்படித்தான் வெள்ளிக்கிழமை முடி திருத்த கூடாது என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். இதெல்லாம் ஒரு விஷயமா இதற்காகவெல்லாம் நாள் கிழமை பார்க்க வேண்டுமா என்று சிலர் சிந்திப்பார்கள். உங்களை நீங்கள் அழகுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைத்தால், அழகுக்காக நீங்கள் செலவு செய்யக்கூடிய பணம் வீண்விரயமாக மாறக்கூடாது என்றால், காசு கொடுத்து நீங்கள் வாங்கிய அந்த அழகு சாதன பொருட்கள் சரியான முறையில் பயன்பட வேண்டும் என்றால், உங்களுக்கும் அழகான பொருட்கள் அழகாக கிடைத்து, அதை அணியும் நீங்கள் அழகாக மாற வேண்டும் என்றால் இப்படி சின்ன சின்ன விஷயங்களை பின்பற்றி பார்ப்பதில் ஒன்றும் தவறு கிடையாது.

ஆனால் இப்படி திங்கட்கிழமை வெள்ளிக்கிழமையை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொண்டாலும் அன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் இருக்கக் கூடாது. அன்று அமாவாசை தினமாக இருக்கக் கூடாது இதையும் கொஞ்சம் பாத்துக்கோங்க. உங்கள் மனதிற்கு பிடித்த பொருட்களை உங்களுக்கு தகுந்தவாறு வாங்க வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு இருந்தால் மேல் சொன்ன சின்ன சின்ன விஷயங்களை பின்பற்றினாலே போதும். நல்லதே நடக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -