முடி அதிகமாக உதிர்பவர்களுக்கு நாளடைவில் தலைமுடியின் அடர்த்தி வெகுவாக குறைந்து விடும். இதனால் நம்மிடம் இருக்கும் தன்னம்பிக்கையும் குறைந்து விடும். தலைமுடியின் வேர்க்கால்கள் நல்ல வலிமை பெற்று, புதிய முடிகளை ஊக்குவித்து வளர செய்யக்கூடிய அற்புதமான ஹேர் பேக் பற்றிய இயற்கையான தகவல்களை தான் இந்த அழகு குறிப்பு பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.
எல்லோருடைய வீட்டிலும் முட்டை கண்டிப்பாக இருக்கும். முட்டையில் ஏராளமான புரத சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த முட்டையுடன் கற்றாழை சேர்த்து பேக் போடும் பொழுது தலைமுடி வேர்காலில் இருந்து தூண்டப்பட்டு, புதிய முடிகளை வளர செய்ய ஊக்குவிக்கும். முட்டை மற்றும் கற்றாழை ஹேர் பேக் உங்கள் கூந்தலுக்கு பல நன்மைகளைத் தருகிறது. இது ஒரு இயற்கையான மற்றும் சக்தி வாய்ந்த ஹேர் மாஸ்க் ஆகும். இந்த கலவையைப் பயன்படுத்துவதால் கிடைக்கும் முக்கிய நன்மைகள் பற்றி காண்போம்.
முட்டை மற்றும் கற்றாழை ஹேர் பேக்கின் பயன்கள்:
1. முடிக்கு வலிமை அளிக்கிறது:
முட்டையில் உள்ள புரதச்சத்து முடியை உறுதியாக மாற்றுகிறது. முடியின் முக்கிய கட்டுமானப் பகுதியான கெரட்டின் (Keratin) எனும் புரதத்தை முட்டை கொண்டுள்ளது. இது முடியின் வேர்களை வலுப்படுத்தி, முடி உடைந்து போவதைத் தடுக்கும்.
2. முடி வளர்ச்சிக்கு உதவுகிறது:
முட்டையில் உள்ள பயோட்டின், இரும்பு மற்றும் வைட்டமின்கள் முடி வளர்ச்சிக்கு மிகவும் அவசியம். கற்றாழையில் உள்ள என்சைம்கள் முடியின் வேர்களைத் தூண்டி, முடி வளர்ச்சியை மேம்படுத்தும். இந்த இரண்டு பொருட்களும் இணைவதால், முடி அடர்த்தியாகவும், நீளமாகவும் வளர உதவுகிறது.
3. உச்சந்தலையை ஆரோக்கியமாக வைக்கிறது:
கற்றாழை உச்சந்தலையின் அரிப்பு, வறட்சி, மற்றும் பொடுகு போன்ற பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வாக அமைகிறது. இதன் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-ஃபங்கல் பண்புகள் தலையின் தோலை சுத்தமாக வைத்து, முடி உதிர்வதைக் குறைக்கும்.
4. இயற்கையான கண்டிஷனராகச் செயல்படுகிறது:
கற்றாழையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் கூந்தலுக்கு ஈரப்பதத்தையும், மென்மையையும் தருகிறது. முட்டையும் சேர்ந்து முடியின் வறட்சியைப் போக்கி, கூந்தலுக்கு இயற்கையான பளபளப்பைக் கொடுக்கும்.
5. முடி உதிர்வதைக் குறைக்கிறது:
முட்டை மற்றும் கற்றாழை கலவையானது முடியை வேரிலிருந்து வலுப்படுத்துவதால், முடி உதிர்வது கணிசமாகக் குறையும். தொடர்ந்து இந்த பேக்கைப் பயன்படுத்தி வந்தால், அடர்த்தியான கூந்தலைப் பெறலாம்.
6. முடிக்கு பளபளப்பைக் கொடுக்கிறது:
இந்த ஹேர் பேக் முடியின் வெளிப்புற அடுக்கை (cuticle) மென்மையாக்கி, பளபளப்பை அதிகரிக்கும். இதனால் உங்கள் முடி ஆரோக்கியமாகவும், பிரகாசமாகவும் தோன்றும்.
இதையும் படிக்கலாமே:
தன தடையை நீக்கும் வாராகி வழிபாடு
ரெண்டு டேபிள் ஸ்பூன் முட்டையுடன், ரெண்டு டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லை கலந்து நன்கு மிக்ஸியில் நைசாக அரைத்து எடுத்து உச்சந்தலையில் இருந்து நுனி வரை தலை முழுவதும் நன்கு தடவி 15 நிமிடம் ஊற விட்டு பின் அலசுங்கள். மஞ்சள் மற்றும் வெள்ளைக் கரு இரண்டும் கலந்த கலவை என்பதால், முட்டையின் துர்நாற்றம் சிலருக்கு பிடிக்காமல் போகலாம். எனவே நீங்கள் ஷாம்புவிற்கு பதிலாக சீயக்காய் பயன்படுத்துங்கள், நாற்றம் அடிக்காது. இந்த பேக்கை உங்கள் கூந்தலுக்கு வாரம் ஒருமுறை மட்டும் பயன்படுத்தி வந்தால், ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான புதிய பேபி ஹேர்ஸ் வளரும் கூந்தலைப் பெறலாம்.