தனதானியத்துடன் சிறப்பாக வாழ வேண்டும் என்பதற்காக தான் பலரும் அனுதினமும் உழைத்து பாடுபட்டுக் கொண்டு இருக்கிறோம். அப்படிப்பட்ட தன தானியத்தில் ஏதேனும் தடைகள் ஏற்படும் பட்சத்தில் அந்த தடைகளால் வீட்டில் குழப்பமே நிலவும். மேலும் நிம்மதி இல்லாத ஒரு சூழ்நிலையும் உண்டாகும். அப்படிப்பட்ட தன தானியத்தை பெறுவதற்காக பல விதங்களில் நாம் முயற்சி செய்தும் அதில் இருக்கக்கூடிய தடைகள் நீங்கவில்லை என்பவர்கள் ஆடி மாதத்தில் வரக்கூடிய தேய்பிறை பஞ்சமி நாளில் வாராகி அம்மனை வழிபாடு செய்யலாம். அந்த வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
தன தடையை நீக்கும் வாராகி வழிபாடு
எவ்வளவு கடினமாக உழைத்தும் நமக்கு வரக்கூடிய தனவரவில் தடைகள் உண்டாகிறது என்னும் பட்சத்தில் அந்த தடைகளை நீக்குவதற்கு முதலில் நம்மை சுற்றி இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்களும் தீய சக்திகளும் விலக வேண்டும். அப்படிப்பட்ட எதிர்மறை ஆற்றல்களையும் தீய சக்திகளையும் விளக்கக்கூடிய தெய்வமாக வாராகி அம்மன் திகழ்கிறார். அதோடு தனவரவில் இருக்கக்கூடிய தடையை நீக்குவதற்கு வாராகி அம்மனே ஸ்வர்ண வராகி அவதாரம் எடுத்து நமக்கு உதவுவாள். அப்படிப்பட்ட தன வசியத்தை ஏற்படுத்தக்கூடிய ஸ்வர்ண வாராகியின் வழிபாட்டை பற்றி தான் இப்பொழுது பார்க்கப் போகிறோம்.
இந்த வழிபாட்டை ஆகஸ்ட் மாதம் 13-ஆம் தேதி புதன்கிழமை அன்று செய்ய வேண்டும். மாலை நேரத்தில் செய்வது என்பது மிகவும் சிறப்பு. காலையிலிருந்து விரதம் இருந்து வழிபாடு செய்யும்பொழுது இதற்குரிய பலன் இன்னும் அதிகமாகவே கிடைக்கும். விரதம் இருக்க இயலாதவர்கள் வழிபாட்டை மட்டும் செய்யலாம். முதலில் வீட்டு பூஜை அறையில் வாராகி அம்மனின் படம், சிலை இருந்தாலும் ஒரு தாம்பாள தட்டை எடுத்து அதில் மஞ்சளில் வாராகி அம்மனை பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு வாராஹி அம்மனுக்கு பிடித்தமான மலர்களை சாற்றிக் கொள்ளுங்கள். அடுத்ததாக மஞ்சள் வாராஹிக்கு முன்பாக மண்ணுக்கு அடியில் விளையக்கூடிய பொருட்களை வேகவைத்து நெய்வேத்தியமாக வைக்க வேண்டும்.
பிறகு புள்ளி இல்லாத நல்ல எலுமிச்சம் பழத்தை எடுத்து அதில் தீபம் ஏற்றி அந்த தீபத்தை மஞ்சள் வாராகியின் இரண்டு புறங்களிலும் வைக்க வேண்டும். இவ்வாறு வைத்துவிட்டு முதலில் நம்மை சுற்றி இருக்கக் கூடிய எதிர்மறை ஆற்றல்களும், தீய சக்திகளும், எதிரிகளும் விலக வேண்டும் என்பதற்காக “ஓம் வம் வாராகியே நம” என்னும் மந்திரத்தை 51 முறை கூற வேண்டும். இவ்வாறு கூறி முடித்த பிறகு ஸ்வர்ண வராகியின் தன வசிய மந்திரத்தை 51 முறை கூற வேண்டும். அவ்வாறு 51 முறை கூறும் பொழுது நம்முடைய மோதிர விரலால் தாழம்பூ குங்குமத்தை எடுத்து மஞ்சள் வாராகிக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.
மந்திரம்
” ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் வாராஹி தேவ்யை நம:
க்லீம் வாராஹிமுகி ஹ்ரீம் ஸித்திஸ்வரூபிணி ஸ்ரீம்
தனவ சங்கரி தனம் வர்ஷய வர்ஷய ஸ்வாஹா “
பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து கொள்ள வேண்டும். நெய்வேத்தியமாக வைத்த பொருட்களில் சிறிதளவை மட்டும் எடுத்து வடக்கு அல்லது வடகிழக்கு பகுதியில் தூவி விட வேண்டும். மீதம் இருக்கக் கூடிய பொருட்களை பிரசாதமாக உண்டு விரதத்தை பூர்த்தி செய்து கொள்ளலாம். பிடித்து வைத்திருந்த மஞ்சள் வாராகியை மறுநாள் எடுத்து சிறிதளவு மஞ்சள் மட்டும் தண்ணீரில் குழைத்து வீட்டில் இருக்கும் அனைவரும் தங்களுடைய நெற்றியில் வைத்துக் கொள்ள வேண்டும். மீதம் இருக்கக்கூடிய மஞ்சளுடன் ஒரு ரூபாய் நாணயத்தை சேர்த்து வைத்து அருகில் எங்கு வாராகி அம்மனின் சன்னதி இருக்கிறதோ அங்கு சென்று அந்த ஆலய உண்டியலில் சேர்த்து விட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் நமக்கு இருக்கக்கூடிய தனத்தடைகள் முற்றிலும் நீங்குவதோடு தன வசியமும் உண்டாகும்.
இதையும் படிக்கலாமே: தேய்பிறை பஞ்சமி சிறப்பு வழிபாடு
தேய்பிறை பஞ்சமி நாளில் ஸ்வர்ண வாராகியை முழுமனதோடு நினைத்து தன வசிய மந்திரத்தை கூறுபவர்களுக்கு தனவரவில் இருக்கக்கூடிய தடைகள் முற்றிலும் நீங்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.