சிறு உருளைக்கிழங்கு மிளகு வறுவல் இப்படி மட்டும் செஞ்சு பாருங்க போதும் போதும் என்று சொல்லும் அளவிற்கு சாப்பாடு வயிற்றுக்குள் இறங்கி கொண்டே இருக்கும்!

potato-pepper-fry_tamil
- Advertisement -

பேபி பொட்டேட்டோ பிரை செய்வது எப்படி

டேஸ்டியான சிறு உருளைக்கிழங்கு மிளகு வறுவல் ரொம்பவே எளிதான முறையில் வீட்டிலேயே செய்யலாம். எல்லா வகையான சாதத்துக்கும் நல்ல சைடு டிஷ்ஷாக இருக்கக் கூடிய இந்த உருளைக்கிழங்கு வறுவல் இந்த மாதிரி நீங்கள் செய்யும் பொழுது சாம்பார் சாதம், ரசம் சாதம், வெரைட்டி ரைஸ் என்று எது செய்தாலும் போதும் போதும் என்று சாப்பிட தோன்றும். அந்த அளவிற்கு சுவையாக இருக்கக்கூடிய இந்த உருளைக்கிழங்கு மிளகு வறுவல் எப்படி செய்வது? என்று இனி தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

பேபி பொட்டேட்டோ ஃப்ரை செய்ய தேவையான பொருட்கள்:

பேபி பொட்டேட்டோ – 200 கிராம், சமையல் எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன், இஞ்சி – ஒரு இன்ச், பூண்டு பல் – ரெண்டு, கருவேப்பிலை – ஒரு கொத்து, சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

- Advertisement -

பேபி பொட்டேட்டோ பிரை செய்முறை விளக்கம்:

பேபி பொட்டேட்டோ செய்வதற்கு முதலில் 200 கிராம் அளவிற்கு சிறு உருளைக்கிழங்குகளை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பேபி பொட்டேட்டோ என்று கூறப்படும் இந்த சிறு உருளைக்கிழங்குகளை முழுதாக அப்படியே சமைப்பது உண்டு. இதை நீங்கள் நன்கு தண்ணீர் விட்டு கழுவி சுத்தம் செய்து சிறு சிறு கியூப்களாக உங்கள் விருப்பத்திற்கு ஏற்ற வடிவங்களில் நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். இதில் நீங்கள் தோல் உரிக்க வேண்டிய அவசியம் இல்லை, அப்படி விருப்பப்பட்டால் நீங்கள் தோல் உரித்து கொள்ளுங்கள் பரவாயில்லை.

பின்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து நன்கு கரைத்துக் கொள்ளுங்கள். இந்த தண்ணீரில் 10 நிமிடம் நீங்கள் வெட்டி வைத்துள்ள உருளைக் கிழங்குகளை சேர்த்து நன்கு ஊற விட்டு விட வேண்டும். இவ்வாறு உப்பு தண்ணீரில் ஊறிய உருளைக்கிழங்குகளை எடுத்து ஈரப்பதம் போக வடிகட்டி வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வைத்துக் கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெயை தாராளமாக ஊற்றி நன்கு காய விடுங்கள்.

- Advertisement -

எண்ணெய் நன்கு காய்ந்ததும் ஒரு கொத்து கருவேப்பிலையை உருவி சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள். கருவேப்பிலை மொறு மொறு என்று ஆனதும் ஒரு துண்டு இஞ்சி நசுக்கி சேருங்கள். இதனுடன் ரெண்டு பல் பூண்டையும் தோலுடன் நசுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் நீங்கள் வடித்து எடுத்து வைத்துள்ள உருளைக்கிழங்கு துண்டுகளை சேர்த்து நன்கு வதக்கி விடுங்கள். உருளைக்கிழங்கு எண்ணெயிலேயே நன்கு வதங்க வேண்டும். அரை ஸ்பூன் மிளகுத்தூள் மற்றும் ஒரு ஸ்பூன் சீரகத்தூள் மட்டும் சேர்த்து நன்கு ஒரு முறை பிரட்டி விடுங்கள். வதக்கும் பொழுது அடுப்பை குறைந்த தீயில் வைத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே:
முருங்கைக்கீரை பொடி இருந்தா உதிரி உதிரியாக இப்படி சாதம் செய்து பாருங்க, குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க! அடிக்கடி இதை சாப்பிட்டால் ஒரு முடி கூட கொட்டாது உங்களுக்கு தெரியுமா?

பின்னர் நன்கு உருளை கிழங்குகள் வெந்து வர 15 நிமிடம் எடுக்கும். 15 நிமிடத்திற்கு பிறகு மீதம் இருக்கும் அரை ஸ்பூன் மிளகுத்தூளையும் சேர்த்து ஒரு முறை நன்கு பிரட்டி விடுங்கள். பிறகு அடுப்பை அணைத்து சுடச்சுட சாதத்துடன் பரிமாற வேண்டியதுதான். சாம்பார் சாதம், ரசம் சாதம் போன்றவற்றுக்கு அருமையான சைடிஷ் ஆக இருக்கக்கூடிய இந்த மிளகு சிறு உருளைக்கிழங்கு வருவல் ரெசிபி செம டேஸ்டியாக இருக்கும். நீங்களும் இதே மாதிரி ட்ரை பண்ணி பாருங்க உங்களுக்கும் பிடிக்கும்.

- Advertisement -