முருங்கைக்கீரை பொடி இருந்தா உதிரி உதிரியாக இப்படி சாதம் செய்து பாருங்க, குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க! அடிக்கடி இதை சாப்பிட்டால் ஒரு முடி கூட கொட்டாது உங்களுக்கு தெரியுமா?

murungai-keerai-podi-rice_tamil
- Advertisement -

முருங்கைக்கீரை சாதம் செய்வது எப்படி

அயன் சத்து அதிகம் நிறைந்துள்ள இந்த முருங்கைக்கீரை பொடி கடைகளில் கிடைக்கும் அல்லது நீங்கள் முருங்கைக் கீரையை காய வைத்தும் பவுடர் போல பொடித்து வைத்துக் கொள்ளலாம். இந்த முருங்கைக்கீரை பொடி உங்களிடம் இருந்தால் சட்டுன்னு இப்படி உதிரி உதிரியான சாதம் வடித்து முருங்கைக்கீரை சாதம் ட்ரை பண்ணி பாருங்க, குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க. அது மட்டும் இல்லாம ஒரு முடி கூட உங்கள் தலையில் இருந்து கொட்டவே செய்யாது. அந்த அளவிற்கு சத்து மிகுந்த இந்த முருங்கைக்கீரை பொடி சாத ரெசிபி எப்படி ஈசியாக செய்வது? என்பதை இனி தொடர்ந்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

முருங்கைக்கீரை சாதம் செய்ய தேவையான பொருட்கள்:

சமையல் எண்ணெய் – இரண்டு டேபிள் ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், உளுத்தம் பருப்பு – ஒரு டீஸ்பூன், கடலை பருப்பு – ஒன்றரை டீஸ்பூன், வறுத்த வேர்க்கடலை – இரண்டு டீஸ்பூன், பொடித்த முந்திரிப்பருப்பு – இரண்டு டீஸ்பூன், பெரிய வெங்காயம் – ஒன்று, இடித்த பூண்டு – ரெண்டு பல், வர மிளகாய் – 3, கருவேப்பிலை – ஒரு கொத்து, உப்பு – தேவையான அளவு, முருங்கைக் கீரை பொடி – மூன்று டேபிள் ஸ்பூன், நெய் – ஒரு டீஸ்பூன், அரிசி – 1/4 கிலோ.

- Advertisement -

முருங்கைக் கீரை சாதம் செய்முறை விளக்கம்:

முருங்கைக்கீரை சாதம் செய்வதற்கு முதலில் கால் கிலோ அரிசியை கழுவி சுத்தம் செய்து உதிரி உதிரியாக வடித்து வைத்துக் கொள்ளுங்கள். அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் விட்டு நன்கு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். பின்னர் உளுத்தம் பருப்பு மற்றும் கடலை பருப்பு ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளுங்கள்.

இவற்றுடன் வறுத்து வைத்த வேர்க்கடலை மற்றும் முந்திரி பருப்புகளை பொடித்து சேர்த்துக் கொள்ளுங்கள். இது சாப்பிடும் பொழுது நன்றாக இருக்க செய்யும். காரத்திற்கு மூன்று வர மிளகாய்களை காம்பு நீக்கி இரண்டாக உடைத்து சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் ஒரு கொத்து கருவேப்பிலையை நன்கு கழுவி சுத்தம் செய்து உருவி சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு பெரிய வெங்காயத்தை தோலுரித்து பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். அதை இதனுடன் சேர்த்து நன்கு பொன்னிறமாக சிவக்க வறுக்க வேண்டும். வெங்காயத்துடன் விருப்பப்பட்டால் தோல் உரித்து பூண்டு பற்களை இடித்து சேர்த்துக் கொள்ளுங்கள். இது ஆப்ஷனல் தான் வேண்டாம் என்றால் விட்டு விடலாம்.

- Advertisement -

பின்னர் இதற்கு தேவையான அளவிற்கு உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். இதில் பாதி அளவிற்கு உப்பை சேர்த்துக் கொள்ள வேண்டும். நீங்கள் சாதம் வடிக்கும் போது அதிலும் உப்பு போட்டு வடிக்க வேண்டும். எந்த ஒரு வெரைட்டி ரைஸ்க்கும் சாதத்தில் பாதி உப்பும், கலவையில் பாதி உப்பும் சேர்ந்து இருக்கும் பொழுது தான் சுவை அதிகரிக்கும். இப்போது நீங்கள் வாங்கி வைத்திருக்கும் முருங்கைக்கீரை பொடியில் இருந்து மூன்று டேபிள்ஸ்பூன் அளவிற்கு மட்டும் சேர்த்துக் கொள்ளுங்கள். கால் கிலோ அரிசிக்கு மூன்று டேபிள் ஸ்பூன் முருங்கைப்பொடி சரியாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே:
கேரட் பொரியல் இப்படி செய்தால் குழம்பு வைக்க வேண்டிய வேலையே இருக்காது. சுட சுட சாதத்தில் இந்த பொரியலை போட்டு பிசைந்து பிசைந்து, சாப்பிட்டு கேரட் பொரியலை சீக்கிரம் காலி செஞ்சுருவாங்க.

நீங்கள் உங்கள் சாதத்தின் அளவிற்கு ஏற்ப இதை கூட்டி குறைத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு நன்கு கலந்து விடுங்கள். பிறகு நீங்கள் உதிரி உதிரியாக வடித்த சாதத்துடன் சேர்த்து நன்கு பிரட்டி விட்டு சமமாக அழுத்தி விடுங்கள். அவ்வளவுதான், இதை ஒரு மணி நேரத்திற்கு பிறகு சாப்பிட்டு பாருங்கள், அவ்வளவு ருசியாக இருக்கும். இந்த முருங்கைக்கீரை சாதம் வாரம் இரண்டு முறை அல்லது ஒரு முறை செய்து சாப்பிட்டு வந்தால் ஒரு முடி கூட உங்களுக்கு கொட்டாது. அந்த அளவிற்கு அயர்ன் சத்துக் கொண்டது, இதே மாதிரி நீங்களும் ட்ரை பண்ணி அசத்திருங்க!

- Advertisement -