பேச்சுலர்ஸ் கூட இந்த மட்டன் குழம்பை சுலபமாக சுவையாக வைத்து சாப்பிடலாம். இனி சண்டேயில் எந்த கஷ்டமும் இல்லாமல் சமைக்க ஒரு ஐடியா!

mutton-kuzhambu
- Advertisement -

சண்டே என்றாலே மட்டன், சிக்கன் தான். ஆனால் பேச்சிலர்ஸ் என்ன செய்வது. வீட்டை விட்டு வெளியே ஹாஸ்டலில் தங்கி சமைத்து சாப்பிடுபவர்களுக்கு அம்மா கையால் மட்டன் குழம்பு சிக்கன் குழம்பு கிடைக்காதே. நீங்கள் பேச்சுலர்ஸ் ஆக இருந்தாலும் சூப்பராக சுவையாக சுலபமாக மட்டன் குழம்பு வைக்கலாம். இந்த குறிப்பை மட்டும் தெரிந்து கொண்டால், எல்லோராலும் சுலபமாக வைக்கும் அளவுக்கு ஒரு மட்டன் குழம்பு ரெசிபி இதோ உங்களுக்காக.

செய்முறை

முதலில் இதற்கு 1 கிலோ மட்டன் தேவை. 1 கிலோ மட்டனை எடுத்து சுத்தம் செய்து அதை தனியாக வைத்துக் கொள்ளுங்கள். பிறகு ஒரு குக்கரை அடுப்பில் வெச்சுக்கோங்க. அதில் 3 ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். அந்த எண்ணெயில் பட்டை 2, ஏலக்காய் 2, கிராம்பு 3, சோம்பு 1/2 ஸ்பூன், போட்டு தாளித்து விடவும். பிறகு இதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் 100 கிராம், அளவு சேர்க்கவும். சின்ன வெங்காயம் இல்லை என்றால் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் 2, சேர்த்து கருவேப்பிலை 1 கொத்து போட்டு இரண்டு மூன்று நிமிடங்கள் வதக்கி விடுங்கள்.

- Advertisement -

பிறகு நறுக்கியை இரண்டு தக்காளி பழத்தை போட்டு வதக்குங்கள். உப்பு 1/2 ஸ்பூன், சேர்த்து வதக்கும்போது தக்காளி பழம் நன்றாக குழைந்து வந்துவிடும். அடுத்தபடியாக இஞ்சி பூண்டு விழுது 2 டேபிள் ஸ்பூன், போட்டு இஞ்சி பூண்டு விழுதின் பச்சை வாடை போக வதக்கி விட்டு மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன், மிளகாய்த்தூள் 4 ஸ்பூன், மல்லித்தூள் 4 ஸ்பூன், சீரகத்தூள் 1 ஸ்பூன், மிளகுத்தூள் 1 ஸ்பூன், போட்டு இந்த மசாலா பொருட்களை 30 செகண்ட் வரை வதக்கி விட்டு உடனடியாக 1 கப் அளவு தண்ணீரை ஊற்றி கொதிக்க வையுங்கள்.

தண்ணீர் தளதளவென கொதித்து வந்ததும் எடுத்து வைத்திருக்கும் மட்டனை இதில் போட்டு அந்த மசாலாவில் கலந்து விடுங்கள். இரண்டு நிமிடம் மட்டன் அந்த மசாலாவில் பிரண்டு வரட்டும். அடுத்து தண்ணீர் 2 கப் அளவு ஊற்றி, கரம் மசாலா 1/2 ஸ்பூன் போட்டு, குழம்புக்கு தேவையான அளவு உப்பு போட்டு, இந்த குழம்பை தல தலவென கொதிக்க விடுங்கள். அது பாட்டுக்கு கொதித்துக் கொண்டே இருக்கட்டும்.

- Advertisement -

இதற்குள் ஒரு மிக்ஸி ஜாரில் 1/2 மூடி தேங்காயை போட்டு, 1 ஸ்பூன் சோம்பு போட்டு, கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி விழுது போல அரைத்து இந்த மட்டன் குழம்பில் ஊத்துங்க. லேசாக அது இரண்டு நிமிடம் மீண்டும் கொதித்து வந்ததும், குக்கரை மூடி 6 லிருந்து 8 விசில் விட்டு பிரஷர் அடங்கியவுடன் எடுத்துப் பார்த்தால் கமகமக்கும் வாசத்தோடு மட்டன் குழம்பு கிடைத்திருக்கும்.

ஆனால் மீண்டும் குக்கரை திறந்த பிறகு, மட்டன் குழம்பை அடுப்பில் வைத்து இரண்டு நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். அப்போதுதான் மட்டன் குழம்பு சுவையாக நமக்கு கிடைக்கும். அடுத்து இதன் மேலே கொத்தமல்லி தழைகளை தூவி சுடச்சுட இட்லி தோசைக்கு பரிமாறினால், சூப்பராக இருக்கும். சுட சுட சாதத்தோடு பிசைந்து சாப்பிட்டாலும் சூப்பராகத்தான் இருக்கும்.

இதையும் படிக்கலாமே: ஸ்கூல் விட்டு வரும் குழந்தைகளுக்கு ரொம்ப வித்தியாசமான இந்த ஸ்வீட் ரெசிபியை செஞ்சு கொடுங்க. இனி நீங்க கடையிலையே இந்த ஸ்வீட் வாங்கி கொடுத்தாலும் இந்த டேஸ்ட்டுக்கு ஈடாகாது.

பின்குறிப்பு: தேங்காய் அரைவை சேர்ப்பது என்பது அவரவர் விருப்பம் தான். சில பேர் தேங்காய் அரவை சேர்ப்பார்கள். சில பேர் சேர்க்க மாட்டார்கள். உங்கள் விருப்பம் போல அதை மாற்றிக் கொள்ளுங்கள். அப்படிதான் தக்காளியும் சில பேர் மட்டன் குழம்பில் தக்காளி சேர்க்க மாட்டார்கள். இந்த சூப்பரான மட்டன் குழம்பு ரெசிபி பிடிச்சவங்க உங்க வீட்லயும் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -