ஸ்கூல் விட்டு வரும் குழந்தைகளுக்கு ரொம்ப வித்தியாசமான இந்த ஸ்வீட் ரெசிபியை செஞ்சு கொடுங்க. இனி நீங்க கடையிலையே இந்த ஸ்வீட் வாங்கி கொடுத்தாலும் இந்த டேஸ்ட்டுக்கு ஈடாகாது.

- Advertisement -

குழந்தைகள் பள்ளி முடிந்து வீடு திரும்பும் போது கட்டாயமாக அவர்களுக்கு ஏதாவது ஒரு ஸ்நாக்ஸ் ரெசிபி கொடுக்க வேண்டியதாக இருக்கிறது. அப்படி நாம் கொடுக்கும் உணவு வெறும் பசியை போக்குவதாக மட்டுமில்லாமல் அது அவர்களுக்கு ஒரு எனர்ஜியும் அதே நேரத்தில் உடலுக்கு கெடுதல் இல்லாததாகவும் இருக்க வேண்டும். அப்படியான ஒரு சுலபமான ஈவினிங் ஸ்வீட் ரெசிபி பற்றி தான் இப்போது இந்த பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம்.

முன்பெல்லாம் இந்த சீம்பால் செய்ய வேண்டும் எனில் மாடு கன்று ஈன்ற பிறகு கிடைக்கும் முதல் பாலில் செய்வார்கள். இது சீம்பால் என்றும் சொல்வார்கள். இது அத்தனை சத்துக்களை கொண்டுள்ளது. ஒரு நேரத்தில் இந்த கடம்பத்திற்காகவே காத்திருந்து சாப்பிடுவதில் குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களும் சலிக்க மாட்டார்கள்.

- Advertisement -

அப்படியான ஒரு ரெசிபியை இப்பொழுதெல்லாம் அதே முறையில் செய்வது என்பது முடியாது. எனவே குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி அதே நேரத்தில் எல்லா நேரத்திலும் செய்வது போல எப்படி செய்யலாம் என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். அது மட்டும் இன்றி இது மிக எளிமையாகவும் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்முறை

இந்த சீம்பால் செய்வதற்கு முதலில் ஒரு பவுல் ரெண்டு முட்டையை உடைத்து ஊற்றிக் கொள்ளுங்கள். அடுத்ததாக அதில் ஒரு கப் நன்றாக காய்ச்சிய பாலை அதில் சேர்த்து பீட் செய்து கொள்ளுங்கள். அடுத்து இதில் கொஞ்சமாக வெண்ணிலா எசன்ஸ் ஒரு சிட்டிகை உப்பு இதில் வெண்ணிலா எசன்ஸ் கட்டாயமாக சேர்க்க வேண்டும். அப்போது தான் முட்டையின் வாடை வராமல் இருக்கும்.

- Advertisement -

இவையெல்லாம் சேர்த்து நன்றாக கலந்த பிறகு ஒரு ஸ்பூன் ரவையை சேர்த்து மீண்டும் ஒரு முறை கலந்து விடுங்கள். அதன் பிறகு கால் கப் சர்க்கரை சேர்த்த பிறகு மீண்டும் விஸ்க் வைத்து நன்றாக கலந்து விடுங்கள். நீங்கள் கலக்கும் பொழுது இதில் நாம் சேர்த்திருக்கும் சர்க்கரை உப்பு எசென்ஸ் எல்லாம் நன்றாக கலக்க வேண்டும். அதன் பிறகு இதை ஒரு பத்து நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள். ஏனெனில் இதில் சேர்த்து இருக்கும் ரவை கொஞ்சம் ஊறி வரும்.

இப்போது அடுப்பை பற்ற வைத்து இட்லி பாத்திரம் வைத்து தண்ணீர் ஊற்றி சூடானவுடன் அதன் மேல் ஒரு ஸ்டீமாரை வைத்து விடுங்கள். நீங்கள் தயார் செய்து வைத்திருக்கும் சீம்பால் கலவையை ஒரு சில்வர் டப்பாவில் உள் புறம் நெய் தடவிய பிறகு அதை ஊற்றி மூடி போட்டு இந்த ஸ்மாரின் மேல் வைத்து விடுங்கள். இதை கட்டாயம் மூடி வைக்க வேண்டும். இல்லை என்றால் நீர் ஆவி தண்ணீர் இதில் இறங்கி விடும்.

- Advertisement -

அதன் பிறகு இட்லி பாத்திரத்தை மூடி 20 நிமிடம் வரை வேக விடுங்கள். 20 நிமிடத்திற்கு பிறகு கத்தி அல்லது ஸ்பூன் கொண்டு லேசாக குத்திப் பாருங்கள். அதில் நாம் வைத்து சீம்பால் பால் ஒட்டாமல் வந்தால் அது சரியான பதத்தில் வெந்து விட்டது என்று அர்த்தம். அதன் பிறகு எடுத்து சூடு ஆறியுடன் ஃப்ரீசரில் ஒரு மணி நேரம் வைத்து எடுத்து அதை ஒரு சின்ன சின்ன துண்டுகளாக போட்டு குழந்தைகளுக்கு சாப்பிட கொடுங்கள்.

இதையும் படிக்கலாமே: புகழ் பெற்ற ரத்னா கபே அரைத்து விட்ட டிபன் சாம்பார் இப்படி தாங்க செய்யனும். இது வரைக்கும் செய்யலைன்னா உடனே செஞ்சு சாப்பிடுங்க. அப்படியே ஓட்டல்ல சாப்பிட மாதிரியே இருக்கும்.

இந்த ரெசிபி ரொம்பவே வித்தியாசமான சுவையில் அதே நேரத்தில் ஆரோக்கியமானதாகவும் இருக்கும். நம் பாரம்பரியமாக சாப்பிடும் ஒரு உணவை இன்றைய காலக்கட்டத்திற்கு ஏற்றவாறு மிகவும் சுலபமாகவும் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எப்படி செய்வது என்று இந்த பதிவில் தெரிந்து கொண்டிருப்பீர்கள். இந்த ரெசிபி உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் முயற்சி செய்து பார்க்கலாம்.

- Advertisement -